under review

ஸ்ரீ வாணிவிலாசினி

From Tamil Wiki
ஸ்ரீவாணிவிலாசினி

ஸ்ரீ வாணிவிலாசினி ( 1905- 1913) தமிழில் வெளிவந்த தொடக்க கால இதழ்களில் ஒன்று. இலக்கியப் படைப்புகளையும் ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தது. சம்ஸ்கிருதத்தில் இருந்து மொழியாக்கங்கள் நிறைய வெளிவந்தன.

வெளியீடு

ஸ்ரீ வாணிவிலாசினி ஸ்ரீரங்கத்தில் இருந்து 1905 ஜனவரி முதல் மாதந்தோறும் வெளிவந்தது. 'இத்தகைய தமிழ் ஸஞ்சிகை இதுவரை இந்தியாவில் கிடையாது. உயர்தரக் காகிதத்தில் பிரதிமாதமும் நூறு பக்கங்களை உள்ளடக்கியிருக்கும். வெகு முக்கியமான விஷயங்களைக் குறித்து தகுந்த வித்வான்களிடமிருந்து அநேக உபந்நியாசங்கள் வெளியாகும். பிரதி ஸஞ்சிகையிலும் அநேக நேர்த்தியான படங்கள் பிரசுரிக்கப்படும்' என்று 1913-ல் வெளிவந்த இதழில் அறிவிப்பு உள்ளது. எல்லா ஆண்டும் சரஸ்வதி பூஜை, சங்கராந்தி ஆகியவற்றுக்குச் சிறப்பு மலர்களும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலை 10 பைசா. ஆண்டுச் சந்தா 5 ரூபாய் 10 பைசா.

உள்ளடக்கம்

சரஸ்வதி ஸ்தோத்திரம், சியாமளா தண்டகம் போன்ற சம்ஸ்கிருத மொழியாக்கங்களும், ஹென்றி பஸ்டலோஸி போன்ற ஆங்கில வழி மொழியாக்கங்களும், ஸ்ரீ சங்கராச்சாரிய சரிதம், ஸ்ரீ ராமானுஜ சரிதம் போன்ற வாழ்க்கை வரலாறுகளும், ஸ்ரீ விபீஷண சரணாகதி போன்ற மரபார்ந்த செய்யுள்களும் இவ்விதழில் வெளிவந்தன. சந்திரவல்லி (சருக்கை ராமஸ்வாமி ஐயங்கார்) போன்ற துப்பறியும் நாவல்களும் அய்யாக்குட்டி அல்லது விவாஹதரகர்கள் (டி.ஸி. வெங்கடரமணய்யர்) போன்ற அங்கத நாவல்களும் தொடராக வெளிவந்தன.

ஆசிரியர்

இவ்விதழின் ஆசிரியராக மு. இராகவையங்கார் பணியாற்றியிருக்கிறார்.

இடம்

தமிழில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளிவந்த முக்கியமான அறிவியக்க இதழாக இவ்விதழ் கருதப்படுகிறது. சம்ஸ்கிருத மொழியாக்கங்களை நிறைய வெளியிட்டது

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-May-2025, 23:50:50 IST