under review

பிரமனார்

From Tamil Wiki

பிரமனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் புறநானூறில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

பிரமனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.

இலக்கிய வாழ்க்கை

பிரமனார் பாடிய பாடல் புறநானூறில் 357-வது பாடலாக இடம்பெற்றுள்ளது. அறவினை செய்வதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக காஞ்சித் திணையில் பெருங்காஞ்சி என்னும் துறையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • குன்றுகள் சூழ்ந்து கட்டப்பட்டதாக காட்சியளிக்கும் மண்ணுலகம் மூவேந்தர்களுக்கும் உரிமையுடையது. அவர்கள் அல்லாது தனியாக ஆள்பவர்களும் உள்ளனர்.
  • அத்தகு அரசர்கள் இறந்தாலும் செல்வம் அவர்களுக்கு வழித்துணையாக வருவதில்லை. உற்றார், உறவினர் அழுதபடி வழியனுப்பி வைப்பர். வாழும்போது செய்யும் அறவினைகள் மட்டுமே மறுவுலக வாழ்க்கைக்கு துணையாக உடன்வரும்.
  • உவமை: இப்பிறப்பு என்னும் இக்கரையில் இருந்து மறுபிறப்பு என்னும் மறுகரைக்கு செல்லும் தெப்பமாக அறவினைகள் அமைந்துள்ளன.

பாடல் நடை

புறநானூறு - 357

  • திணை: காஞ்சி துறை: பெருங்காஞ்சி

 குன்றுதலை மணந்த மலைபிணித்து யாத்தமண்
பொதுமை சுட்டிய மூவர் உலகமும்
பொதுமை இன்றி ஆண்டிசி னோர்க்கும்
மாண்ட அன்றே ஆண்டுகள்; துணையே
வைத்தது அன்றே வெறுக்கை; வித்தும்
அறவினை அன்றே விழுத்துணை; அத்துணைப்
புணைகை விட்டோர்க்கு அரிதே; துணையழத்
தொக்குஉயிர் வெளவுங் காலை
இக்கரை நின்றுஇவர்ந்து உக்கரை கொளலே.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Mar-2025, 12:09:27 IST