under review

பதுமனார்(சங்க காலப் புலவர்)

From Tamil Wiki

பதுமனார் சங்ககாலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

பதுமனார் எழுதிய ஒரே ஒரு பாடல் குறுந்தொகையில் 6-ம் பாடலாக இடம்பெறுகிறது. பெரும் பதுமனார், என்ற மற்றொரு சங்க காலப் புலவரும் இருந்திருக்கிறார். பெயரில் உள்ள 'பதுமனார் என்ற சொல்லினால் அவர்கள் சமண சமயத்தைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

பாடல் மூலம் அறியவரும் செய்திகள்

நடு இரவில் எந்த அரவமும் இல்லை. எல்லாரும் நிம்மதியாக உறங்குகின்றனர். தலைவி மட்டும் உறங்காமல் விழித்திருக்கிறாள். திருமண நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டதால், தலைவி பிரிவுத் துயரில் இரங்குவதைக் கூறும் நெய்தல் திணைப் பாடல்.

பாடல்

திணை : நெய்தல் துறை : வரைவிடை வைத்துப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழியை நெருங்கிச் சொல்லியது

நள்ளென்றன்றே யாமம் சொல் அவிந்து
இனிது அடங்கினரே மாக்கள், முனிவு இன்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஒர் யான் மன்ற துஞ்சாதோனே

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jan-2025, 15:51:13 IST