under review

தேவக்கோட்டை வா. மூர்த்தி

From Tamil Wiki
மூர்த்தி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: மூர்த்தி (பெயர் பட்டியல்)
தேவக்கோட்டை வா. மூர்த்தி

தேவக்கோட்டை வா. மூர்த்தி (1946 - ஆகஸ்ட் 30, 2020) தமிழ் எழுத்தாளர். சிறுகதை, குறுநாவல், விமர்சனம் எழுதினார். தமிழிலும் ஆங்கிலத்திலும் கட்டுரைகள் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

தேவக்கோட்டை வா. மூர்த்தி தமிழகத்தில் வருமானவரி ஆணையராகப் பதவி வகித்து ஓய்வு பெற்றார்.

தனிவாழ்க்கை

தேவக்கோட்டை வா. மூர்த்தி சுதாமூர்த்தியை மணந்தார். ஒரே மகன் எழுத்தாளர் பிரபுராம்.

இலக்கிய வாழ்க்கை

தேவக்கோட்டை வா. மூர்த்தி தீபம், கணையாழி, ஞானரதம், சதங்கை, யுகமாயினி, தளம் ஆகிய இதழ்களில் எழுதினார். சிறுகதை, குறுநாவல், விமர்சனம் ஆகியவை எழுதினார். தமிழிலும் ஆங்கிலத்திலும் கட்டுரைகள் எழுதினார். எமிலி டிக்கின்ஸன் இவரின் ஆதர்ச எழுத்தாளர். தளம் என்ற கலை இலக்கிய இதழின் குழுவில் இருந்தார்.

மதிப்பீடு

"பத்திரிகையாளர் என்.எஸ்.ஜகன்னாதனைப் போல தமிழிலும் ஆங்கிலத்திலும் சமமான வசீகரத்துடன் எழுதியவர் வா.மூர்த்தி. நீண்டு செல்லும் வாக்கியங்களையும் முரண்தொடர்களையும் சட்டென்று சமன்செய்துவிடும் சாமர்த்தியம் வாய்க்கப்பெற்ற நடை அவருடையது" என்று ந. ஜெயபாஸ்கரன் தனது அஞ்சலியில் குறிப்பிடுகிறார்.

மறைவு

தேவக்கோட்டை வா. மூர்த்தி ஆகஸ்ட் 30, 2020-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • அர்த்தம் இயங்கும் தளம்

உசாத்துணை

இணைப்புகள்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Feb-2026, 06:03:24 IST