கருவூர் ஓதஞானி
கருவூர் ஓதஞானி சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
கள்ளிக்குடிப் பூதம் புல்லனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கருவூர் என்ற ஊரில் வாழ்ந்தவர். ஓதஞானி என்ற பெயருக்கு பரந்த அறிவுடையவர் என்று பொருள்.
இலக்கிய வாழ்க்கை
கருவூர் ஓதஞானி பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் 71-வது பாடலாக அமைந்துள்ளது. பொருளீட்டுவதற்காக பிரிந்து சென்றால் ஏற்படும் துன்பத்தை எண்ணி, தலைவியுடன் கூடி இருத்தலின் இனிமையை பாடும் தலைவனின் கூற்றாக பாலைத் திணையில் அமைந்துள்ள பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- மணம்புரிந்து வந்த மலைநாட்டை சேர்ந்த இளம் மகளிர் அழகிய பெரிய தோள்களையும் தேமல் தோன்ற தொடங்கிய பருமையான முலைகளையும் சிறிய இடையையும் கொண்டிருப்பர்.
- ஆடவரின் காம நோய்க்கு மருந்தாகவும் அவர் தம் செல்வமாகவும் விளங்கும் மகளிர்.
பாடல் நடை
குறுந்தொகை - 71
திணை:பாலை துறை: பொருள்வயிற் பிரிவினால் ஏற்படும் துன்பத்தை எண்ணி தலைவன் கூறுவது.
மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே
அரும்பிய சுணங்கின் அம்பகட் டிளமுலைப்
பெருந்தோள் நுணுகிய நுசுப்பிற்
கல்கெழு கானவர் நல்குறு மகளே.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Dec-2024, 19:40:21 IST