கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்-புனைவு விருது
From Tamil Wiki

கனடா-தமிழ் இலக்கியத் தோட்டம் உலக அளவில், பல்துறைத் தமிழ்ச் சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் அளிக்கிறது. அவற்றுள் 'புனைவு'க்காக வழங்கப்படும் விருதும் ஒன்று.
தமிழ் இலக்கியத் தோட்டம்-புனைவு விருது
தமிழ் இலக்கியத் தோட்டம், கனடாவில் இருந்து இயங்கி வரும் இலக்கிய அமைப்பு. உலகளாவிய அலவில், பல்துறைத் தமிழ்ச் சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் அளித்து வருகிறது. அவற்றுள் 'புனைவு'க்காக வழங்கப்படும் விருதும் ஒன்று. இவ்விருது 2005-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. விருதுக் கேடயமும் 500/- கனடியன் டாலர் பரிசுத்தொகையும் கொண்டது இவ்விருது
புனைவு விருது பெற்றோர் பட்டியல்
| ஆண்டு | விருது பெற்றவர் | நூல் |
|---|---|---|
| 2005 | சோ. தர்மன் | கூகை |
| 2006 | ஜோ டி குரூஸ் | ஆழி சூழ் உலகு |
| 2007 | எஸ். ராமகிருஷ்ணன் | யாமம் |
| 2008 | தமிழவன் | வார்சாவில் ஒரு கடவுள் |
| 2009 | ஜெயமோகன் | கொற்றவை |
| 2010 | பொ.கருணாகரமூர்த்தி | பதுங்கு குழி |
| 2010 | சு. வெங்கடேசன் | காவல்கோட்டம் |
| 2011 | யுவன் சந்திரசேகர் | பயணக் கதை |
| 2012 | கண்மணி குணசேகரன் | அஞ்சலை |
| 2013 | கீரனூர் ஜாகீர் ராஜா | ஜின்னாவின் டைரி |
| 2014 | தேவகாந்தன் | கனவுச்சிறை |
| 2015 | ஷோபாசக்தி | கண்டி வீரன் |
| 2016 | சயந்தன் | ஆதிரை |
| 2017 | தமிழ்மகன் | வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் |
| 2018 | தீபச்செல்வன் | நடுகல் |
| 2020 | பா. கண்மணி | இடபம் |
| 2021 | பா. அ. ஐயகரன் | பா.அ. ஜயகரன் கதைகள் |
| 2022 | வேல்முருகன் இளங்கோ | மன்னார் பொழுதுகள் |
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
11-Feb-2023, 07:56:30 IST