under review

அஸ்வ மேதா(இதழ்)

From Tamil Wiki
அஸ்வ மேதா(நன்றி:சிற்றிதழ் உலகம்)

அஸ்வ மேதா(1988) பின் - நவீனத்துவம், அமைப்பியல், மீயதார்த்த வாதம் சார்ந்த படைப்புகளை முன்வைத்து பாளையங்கோட்டையில் இருந்து வெளியான இதழ்.

வரலாறு

அஸ்வ மேதா ரமேஷ் ராம், ஜோசப் லூயிஸ், தருமராஜ், விண்சென்ட் பால், ஶ்ரீனியம்மாள் ஆகியோரது ஆசிரியர் குழுவினால் 1988-ம் ஆண்டு பாளையங்கோட்டையிலிருந்து வெளிவரும் சிற்றிதழாகத் தொடங்கப்பட்டது.

உள்ளடக்கம்

அஸ்வ மேதா இதழின் உள்ளடக்கம் யதார்த்தவாதம், நவீனத்துவம், மார்க்ஸியம் சார்ந்த வாழ்க்கை நோக்குகளை முன்வைக்கும் படைப்புகளை மறுத்து விமர்சனம் செய்வதாக இருந்தது. அதற்குப் பதிலாக அஸ்வ மேதா இதழ் பின் - நவீனத்துவம், அமைப்பியல், அருவவாதம், மீயதார்த்தம் ஆகிய வடிவங்களில் தங்கள் வாழ்க்கை நோக்குகளை முன்வைக்கும் படைப்புகளை சிறப்பித்து விமர்சனம் செய்து பாராட்டுவதாக இருந்தது. 1988-ம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாத இதழில் பிரமிளின் தெற்கு வாசல் கவிதையும் கவிதைகள் வெளியிடும் இதழான கிரணம் குறித்த தேவதேவனின் பார்வையும் வெளியாகியுள்ளது. அஸ்வ மேதா இதழில் பிரஞ்சு எழுத்தாளர் பால் வெலரியின் Poetry: Abstract thought - Dancing and Walking என்ற கட்டுரையின் தமிழாக்கமும் ஸில்வியா பிளாத்தின் மர்ம நாவல் என்ற சிறுகதையும் வெளியாகியுள்ளது.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Jun-2025, 11:54:44 IST