under review

அமுதபானியார்

From Tamil Wiki

அமுதபானியார் (பிறப்பு:1648) சிற்றிலக்கியப்புலவர்.

வாழ்க்கை குறிப்பு

அமுதபானியார் 1648-ம் ஆண்டு கனகசபாபதி - நித்ய சௌபாக்கியவதி இணையருக்கு பிறந்தார். இளம் வயதிலேயே தாய் தந்தை இருவரையும் இழந்தார். சிவஞானப்பாலையர் என்பவரின் பாதுகாப்பில் வளர்ந்தார். அமுதபானியார் நான்மறைகளையும் ஆகமங்களையும் கற்றுத் தேர்ந்தவராக இருந்தார். கருணையர் என்பவரின் மகள் சிவாம்பிகையை மணந்து இல்லறம் நடத்தினார். இவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளின் மரபினர்.

இலக்கிய வாழ்க்கை

அமுதபானியாரின் கல்வி திறனை அவரது மனைவி சிவாம்பிகையின் வீட்டார் ஐயப்பட்ட போது வள்ளுவரைப் போற்றி 'வள்ளுவர் பிள்ளைத்தமிழ்' என்னும் நூலை இயற்றினார். அப்பிள்ளைத் தமிழின் காப்பு பருவத்தில் அச்சுதன், கரவிமலர், கௌரி, ரேணுகர், குமரகுரு, ஆனைமுகன் ஆகிய ஐங்குரவர்களுக்கும் பாலையர், ராவணன், தட்சிணாமூர்த்தி, முதலியோருக்கும் வணக்கங்கள் கூறப்பட்டுள்ளது.

அமுதபானியார் அத்வைதக் கருத்துகள் நிரம்பிய நூல்களை இயற்றினார். தான் இயற்றிய 'மணிவாசகர் வரலாறு' நூலில் மாணிக்க வாசகரை வீர சைவர் எனக் குறிப்ப்ட்டார். அக்கருத்துக்கு கண்டனங்கள் எழுந்த போது சுவடிகளை அடங்கிய பெட்டியை ஆற்று நீரில் விட்டு அது மிதந்து வருவதைச் சுட்டிக்காட்டித் தன்மேல் தவறில்லை என்று நிரூபித்தார் என்று கூறப்படுகிறது.

பாடல் நடை

பாரோங்கு பரசிவத் தடிபணியும் ராரவணப் .
பழமறை யவன்ப கர்ந்த:
பண்சாம வேதம்நின் வேதமாம் : பிருங்கிமுனி
கோத்திரம் நின்காத் .:திரம் .
சீரோங்கு லம்பகச் சூத்திரம் கண்டாகர்ண
சாகைகே தார பீடம்
சித்தமகிழ் ஏகோரா மாத்திஆ சான்மரபு
செழித்துச் சிறக்க வந்த
ஏரோங்கு சிவானந்தன் புதல்வனாய்த் தோன்றிமுத்
தகம்மையை மணம்பு ணர்ந்தே.
இனிய்பல -மறைகற்ற நந்திமகனைப்பெற்றுக்
காஞ்சியில் தலைய. மைச்சாய்ப்
பேரோங்கி னாயென்பர் தெளியம்சில. தெரியமெய்
சிறுபறை முழக்கி யருளே
பெறுகுறளில் நூற்றுமுப் பத்துமூன் றதிகார
சிறுபறை முழக்கி யருளே

நூல்கள்

  • வள்ளுவர் பிள்ளைத்தமிழ்
  • மணிவாசகர் வரலாறு

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Jul-2025, 18:23:13 IST