under review

அணில் மாமா

From Tamil Wiki
Revision as of 11:49, 21 October 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Removed from Category:இதழ் வகை - உள்ளடக்கம் வாரியாக)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
அணில் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: அணில் (பெயர் பட்டியல்)

To read the article in English: Anil Mama. ‎

அணில் மாமா

அணில் மாமா (1975) தமிழில் வெளிவந்த சிறுவர் வார இதழ். இதழாசிரியர் புவிவேந்தன். (பார்க்க சிறுவர் இதழ்கள்) இவ்விதழ் அணில் இதழின் துணை இதழாக வெளிவந்தது.

வெளியீடு

1975-ம் ஆண்டு முதல் அணில் இதழ் அணில் மாமா என்ற இணைப்பு இதழை மாதம் ஒருமுறையாக வெளியிட்டது. இதில் அணில் அண்ணாவின் கதைகள் தொடர்ச்சியாக வெளிவந்துள்ளன. வாசகர்களின் சிறந்த கதைகளும் பிரசுரமாகி உள்ளன. இந்த அணில் மாமாவின் விலை தொடக்கத்தில் 20 பைசாவாக இருந்துள்ளது. இதில் அட்டையில் மட்டும் சித்திரம் வரையப்பட்டிருக்கும். முழுக்க, முழுக்க மாயாஜாலக்கதைகள் மட்டுமே இருக்கும். சாகசங்கள் நிறைந்த சுவாரசியமான அணில் மாமா கதைகளுக்கு ரசிகர்கள் அதிக அளவில் இருந்துள்ளனர். .

உசாத்துணை

‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 12:05:47 IST