under review

க.அ. ஆறுமுகனார்

From Tamil Wiki
Revision as of 00:35, 21 December 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added: Category:கவிஞர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
க.அ. ஆறுமுகனார்

க.அ. ஆறுமுகனார் (க.அ. ஆறுமுகன்; கவி ஆறுமுகனார்) (பிறப்பு: 1906) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர். நாடகப் பாடலாசிரியர். சுதந்திரப் போராட்ட வீரர். கலைமாமணி விருது பெற்றார்.

வாழ்க்கைக் குறிப்பு

க.அ. ஆறுமுகனார் 1906-ல், திண்டுக்கல் மாவட்டம் ராமலிங்கப்பட்டியில், அங்கப்பத்தேவர் - கருப்பாயி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். சுயமாகத் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார்.

நாடக வாழ்க்கை

க.அ. ஆறுமுகனார் இளம் வயது முதலே நாடகங்களில் ஆர்வம் கொண்டு செயல்பட்டார். முழுமையாக இசை கற்றார். புகழ்பெற்ற பல்வேறு சபாக்களின் நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதினார்.

நாடகப் பங்களிப்பு

க.அ. ஆறுமுகனார், டி.கே.எஸ். சகோதர்கள், மதுரை பால சண்முகானந்த சபா நடத்திய நாடகங்களான 'கதரின் வெற்றி', 'குமாஸ்தாவின் பெண்', 'வித்யாசாகரர்', 'முள்ளில் ரோசா', 'இமயத்தில் நாம்' போன்ற நாடகங்களுக்குப் பாடல்களை எழுதினார்.

'பம்பாய் மெயில்', 'மேனகா', 'தேசபக்தி', ராமாயணம், 'கிருஷ்ணலீலா', 'சிவலீலா', 'மனோகரா' போன்ற நாடகங்களுக்கும் பாடல்களை எழுதினார்.

க. அ. ஆறுமுகனார் நூல்

இலக்கிய வாழ்க்கை

க.அ. ஆறுமுகனார், 'திருமகள்', 'செந்தமிழ்' போன்ற இதழ்களில் கவிதைகள், கட்டுரைகள் எழுதினார். 'ஹரிஜன சேவாகீதம்', 'தமிழகத்தின் கலைமணிகள்' போன்ற சில நூல்களை எழுதினார்.

இதழியல்

க.அ. ஆறுமுகனார், திருமகள் இதழின் கௌரவ ஆசிரியராக 1946-ல் பணியாற்றினார்.

அரசியல்

க.அ. ஆறுமுகனார், 1930 முதல் காந்தியின் அழைப்பை ஏற்று சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். பாரதியாரை மானசீக குருவாக ஏற்று அவரது இலட்சியங்களைப் பின்பற்றினார். கதர், மதுவிலக்கு, அரிஜன சேவை ஆகிய பணிகளில் முன்னின்று பணியாற்றினார்.

விருது

மறைவு

க.அ. ஆறுமுகனார், எப்போது மறைந்தார் என்ற விவரங்களை அறிய இயலவில்லை.

மதிப்பீடு

க.அ. ஆறுமுகனார், கவிஞர், எழுத்தாளர். தமிழ்நாட்டின் மூத்த நாடக இசைப் பாடலாசிரியர்களுள் ஒருவராகவும், சுதந்திரப் போராட்ட வீரர்களுள் ஒருவராகவும் அறியப்படுகிறார்.

நூல்கள்

  • ஹரிஜன சேவாகீதம்
  • தமிழகத்தின் கலைமணிகள்
  • முத்தமிழ் மணிமாலை

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Mar-2025, 18:21:45 IST