being created

வரவு எதிர்ந்து இருத்தல்(பெருந்திணை)

From Tamil Wiki
Revision as of 02:01, 20 July 2025 by Jayashree (talk | contribs) (Created page with "வரவு எதிர்ந்து இருத்தல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது. பெருந்திணைக் காதல் கொண்ட தலைவி தலைவன் வருகை...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வரவு எதிர்ந்து இருத்தல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது. பெருந்திணைக் காதல் கொண்ட தலைவி தலைவன் வருகையை எதிர்நோக்கியிருத்தலைக் கூறும் துறை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் முல்லை அரும்பு போன்ற பற்களையுடையாள், தன் பெரிய செல்வ மனையில் தலைவனது வருகையை எதிர்நோக்கியிருத்தல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

முகைபுரை முறுவல் முள்எயிற்று அரிவை
வகைபுனை வளமனை வரவு எதிர்ந்தன்று(கொளு 16.4)

வெண்பா

காம நெடுங்கடல் நீந்தும்கால் கைபுனைந்த
பூமலி சேக்கைப் புணை வேண்டி - நீமலிந்து
செல்லாய் சிலம்பன் வருதற்கு சிந்தியாய்
எல்லாக நெஞ்சம் எதிர் (309)

உசாத்துணை

பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.