திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி
திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி நெல்லைக்கருகிலுள்ள கரிவலம்வந்தநல்லூரில் கோவில்கொண்ட சிவபெருமானைப் போற்றி அதிவீரராம பாண்டியர் பாடிய பதிற்றுப்பத்தந்தாதி என்னும் சிற்றிலக்கியம்.
ஆசிரியர்
திருக்கருவைப் பதிற்றுபத்தந்தாதியை இயற்றியவர் அதிவீரராம பாண்டியர் பாண்டிய வம்சத்து அரசர்களில் ஒருவர். தமிழிலும் வடமொழியிலும் புலமை பெற்றவர்.
இவரது தமையனார் வரதுங்க ராம பாண்டியர். திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதியை இவர் இயற்றியதாகக் கூறுபவர்கள் உண்டு.
நூல் அமைப்பு
கருவை(கரிவலம் வந்த நல்லூர்) என்பது திருநெல்வேலி மாவட்டம், சங்கர நயினார் கோயில் வட்டத்தில் அமைந்த சிவஸ்தலம்.குலசேகர பாண்டியன் வேட்டையாடச் சென்றபோது எதிர்பட்ட ஓர் யானையைக் துரத்த அது சிவாலயத்தை நாடி ஓடி, இறைவன் இருந்த புதரை வலம் வந்து சிவகணமாக மாறியதால் இப்பெயர் பெற்றது. இத்தலத்தில் கோவில் கொண்ட சிவலிங்கம் பால்வண்ண நாதர், திருக்களா ஈசர், முகலிங்கர் ஆகிய பெயர்களைக் கொண்டது. ஸ்படிக லிங்கமாக இருப்பதால் பால்வண்ண நாதர் எனவும், களாமரம் துலவிருட்சமாகத் இகழ்வதால் திருக்களாவீசர் என்றும், திருமுகம் விளங்கித் தோன்றும் லிங்க வடிவமாதலின் முகலிங்கர் எனவும் பெயர் பெற்றது.
ஓவ்வொரு பத்துப்பாடலும் தனித்தனிச் சந்தங்களில் அமைக்கப்படும் அந்தாதி பதிற்றுப்பத்து அந்தாதி எனப்பெயர் பெறும். குட்டித் திருவாசகம் என்னும் திருக்கருவை பதிற்றுப்பத்து அந்தாதி இவ்வாறு அமைந்ததாகும்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், கலி விருத்தம்,
பாடல் நடை
சிந்தனை உனக்குத் தந்தேன்
திருவருள் எனக்குத் தந்தாய்
வந்தனை உனக்குத் தந்தேன்
மலரடி எனக்குத் தந்தாய்
பைந்துணர் உனக்குத் தந்தேன்
பரகதி எனக்குத் தந்தாய்
கந்தனை பயந்த நாதா
கருவையில் இருக்கும் தேவே.
குழவி வெண்ணிலா அனைய வெண்ணகை
சோகொடியி டத்துவாழ் குரிசில் போற்றிஎன்
பழைய தீவினைப் பகைதொ லைத்திடும்
பாவ நாசனே போற்றி காய்சினத்து
உழுவை யின்வரி தோல சைத்தபட்டு
உடைம ருங்கினோய் போற்றி செந்தமிழ்க்
கழும லப்பதிக் கவுணி யன்புகழ்
களவின் நீழலிற் கடவுள் போற்றியே. (92)
உசாத்துணை
திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி-தமிழ் இணைய கல்விக் கழகம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.