திருவெண்பாக்கம் ஊன்றீஸ்வரர் திருக்கோவில்: Difference between revisions
Finalised |
No edit summary |
||
| Line 114: | Line 114: | ||
* [https://tamildigitallibrary.in/Articles/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-39750-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81 திருத்தலங்கள் வரலாறு - உ. வே. சாமிநாத ஐயர்]. | * [https://tamildigitallibrary.in/Articles/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-39750-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81 திருத்தலங்கள் வரலாறு - உ. வே. சாமிநாத ஐயர்]. | ||
* [https://tamildigitallibrary.in/Articles/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-13185-Annual%20Report%20on%20Indian%20Epigraphy%201939-1944 Annual Report on Indian Epigraphy 1039-44 | * [https://tamildigitallibrary.in/Articles/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-13185-Annual%20Report%20on%20Indian%20Epigraphy%201939-1944 Annual Report on Indian Epigraphy 1039-44, Page no: 89 - 91] | ||
* https://www.shaivam.org/thirumurai/seventh-thirumurai/92/sundarar-thevaram-thiruvenpaakkam-pilaiyulana-poruththiduvar/#gsc.tab=0 | * [https://www.shaivam.org/thirumurai/seventh-thirumurai/92/sundarar-thevaram-thiruvenpaakkam-pilaiyulana-poruththiduvar/#gsc.tab=0 திருவெண்பாக்கம் - பிழையுளன பொறுத்திடுவர்] | ||
==வெளி இணைப்புகள்== | ==வெளி இணைப்புகள்== | ||
* https://www.kamakoti.org/tamil/tirumurai20.htm | * [https://www.kamakoti.org/tamil/tirumurai20.htm திருவெண்பாக்கம் - பூண்டி (நீர்த்தேக்கம்), kamakoti.org] | ||
* https://veludharan.blogspot.com/2020/07/oondreeswarar-temple-shri-oondreeswarar.html | * [https://veludharan.blogspot.com/2020/07/oondreeswarar-temple-shri-oondreeswarar.html வேலுதரன், Shri Oondreeswarar Shiva Temple / ஸ்ரீ ஆதார தண்டேஸ்வரர் சுவாமி கோயில், Poondi, Tiruvallur District, Tamil Nadu] | ||
* https://veludharan.blogspot.com/2015/08/purasawalkam-villivakkam-shiva-temples.html | * [https://veludharan.blogspot.com/2015/08/purasawalkam-villivakkam-shiva-temples.html வேலுதரன், Sri Gangadeeswarar Temple, Purasawalkam & Sri Agastheeswarar Temple, Villivakkam, Chennai, Tamil Nadu] | ||
* https://sivanadiyargal.blogspot.com/2023/11/sri-oondreeswarar-temple-thiruvenpakkam.html | * [https://sivanadiyargal.blogspot.com/2023/11/sri-oondreeswarar-temple-thiruvenpakkam.html Sri Oondreeswarar Temple, Thiruvenpakkam (Poondi), Thiruvallur] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:இந்து மத ஆலயம்]] | [[Category:இந்து மத ஆலயம்]] | ||
Revision as of 20:20, 15 September 2026

திருவெண்பாக்கம் ஊன்றீஸ்வரர் திருக்கோவில் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் அருகில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற தொண்டைமண்டல தலங்கள் முப்பத்திரண்டில் இது பதினேழாவது தலம். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அறிமுகம்
கண்பார்வை இழந்த சுந்தரருக்கு ஊன்றுகோல் அளித்த தலம். மூலக் கோவில் திருவிளம்பூதூரில் குசஸ்தலை ஆற்றங்கரையில் உள்ளது. பூண்டி நீர்த்தேக்க கட்டுமானப் பணியின் போது இக்கோவில் அமைந்த நிலமும் எடுத்துக் கொள்ளப்பட்டதால் இவ்விடத்திற்கு மாற்றியமைக்கப்பட்டது. தேவாரப் பாடல் பெற்ற தொண்டைமண்டல தலங்கள் முப்பத்திரண்டில் இது பதினேழாவது தலம்.
அமைவிடம், ஊர் பெயர் பற்றி
தற்போதைய கோவில் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் அருகில் அமைந்துள்ளது. திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பூண்டி, ராமஞ்சேரி செல்லும் பேருந்துகள் மூலம் இக்கோவிலை அடையலாம்.
முன்பு இவ்வூர் திருவுளோம்போகி என்ற பெயரில் வழங்கி வந்தது. நாளடைவில் மருவி திருவிளம்பூதூர் என்றானது. இவ்வூருக்கு பத்திகாரண்யம் (இலந்தை மரக் காட்டுப் பகுதி) எனும் பெயரும் உண்டு. திருவெண்பாக்கம் என்பது இத்தலத்தின் புராணப் பெயர்.
சோழர் காலத்தில் இவ்வூர் ஜெயங்கொண்டசோழ மண்டலத்தில் ஈக்காட்டுக் கோட்டத்தில் பெருமூர் நாட்டில் அமைந்திருந்தது.
தல புராணம்
திருவாரூரில் பரவை நாச்சியாரை மணந்த சுந்தரர், திருவொற்றியூரில் சிவத்தொண்டு புரிந்து வந்த சங்கிலி நாச்சியார் மீதும் காதல் கொண்டு திருமணம் செய்துகொண்டார். மேலும் சிவனை சாட்சியாகக் கொண்டு, "உன்னை விட்டும் இவ்வூரை விட்டும் எங்கும் செல்ல மாட்டேன்" என சத்தியம் செய்து கொடுத்தார். ஆனால் ஒருகட்டத்தில் அதையும் மீறி திருவாரூர் செல்ல முடிவெடுத்தார். திருவொற்றியூர் எல்லையை கடந்த சமயம் அவரது இரு கண்களும் பார்வை இழந்தன. இது சத்தியத்தை மீறியதன் விளைவு என்பதை அறிந்த சுந்தரர், தன் தவறை உணர்ந்து இறைவனிடம் மன்னிப்பு வேண்டினார். ஆனால் இறைவன் அருளவில்லை. கண்பார்வை வேண்டி தொடர்ந்து யாத்திரை செல்ல ஆரம்பித்தார். அப்போது காஞ்சிபுரம் செல்லும் வழியில் திருவிளம்பூதூரை வந்தடைகிறார். ஆலயத்திற்குச் சென்று 'நீ கோயிலில் உளாயோ ' என்று கேட்க, இறைவன் ஊன்றுகோலை அருளிச்செய்து 'யாம் உளோம் போகீர் ' என்றார்.
இலக்கிய குறிப்புகள்
சுந்தரர் "பிழையுளன பொறுத்திடுவர்..." எனத் தொடங்கும் பதிகம் பாடியுள்ளார். பெரிய புராணத்தில் ஏயர்கோன் கலிக்காம நாயனாரின் வரலாற்றில் "தொண்டை மானுக்கன்றருள்..." எனத் தொடங்கும் பாடலில் சுந்தரர் திருவெண்பாக்கம் வந்து அருள் பெற்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
"தேசூரன், கண்பார்க்க வேண்டுமெனக் கண்டு ஊன்றுகோல் கொடுத்த,
வெண் பாக்கத்து அன்பர் பெறும் வீறாப்பே" என்று வள்ளலார் அருட்பாவில் குறிப்பிடுகிறார்.
மேலும், இக்கோவில் இறைவன் மேல் பாடப்பட்ட ஒரு தனிப்பாடலும் கிடைக்கிறது
வாழி திருவூன்றீசன் வாழியுமை மின்னொளியாள்
வாழி திருநாவலூர் வன்றொண்டர் - வாழி திரு
வூன்றீச னாலயமும் போற்றும் பணி செய்தோர்
தோன்றுகவே பத்திநெறி யெங்கும்
தெய்வங்கள்
மூலவர் ஆதாரதண்டேஸ்வரர் & ஊன்றீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். சுந்தரருக்கு ஊன்றுகோல் அளித்ததால் இப்பெயர் உண்டாயிற்று. கல்வெட்டுகளில் 'திருவுளோம்போகி உடைய நாயனார்' என்று குறிப்பிடப்படுகிறார்.
தாயார் மின்னொளி அம்மை. கண்பார்வையை இழந்த சுந்தரருக்கு அம்பாள் மின்னலைப் போன்ற ஒளி அளித்து வழிகாட்டினாள் என்று தொன்மம்.
உற்சவர் சோமாஸ்கந்தர்.
கோவில் இடம் பெயர்ந்த போது திருவிளம்பூதூரில் இருந்த மூலவர், இடபம், மின்னொளி அம்மை, விநாயகர், ஆறுமுகர் ஆகிய மூர்த்தங்கள் சென்னையில் புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவிலுக்கு மாற்றப்பட்டன. புதிய கோவில் அமைத்த பிறகும் திருவெண்பாக்கத்திற்கு எடுத்துவரவில்லை. புதிய சிற்பங்களே அமைக்கப்பட்டன.
கோவில் பற்றி
1942-ம் ஆண்டு பூண்டி நீர்த்தேக்க கட்டுமானப் பணியின் போது திருவிளம்பூதூர் கோவில் அமைந்த நிலமும் எடுத்துக் கொள்ளப்பட்டது. அன்றைய அறநிலையத்துறையின் முயற்சியால் இக்கோவில் பூண்டிக்கு மாற்றியமைக்கப்பட்டு 1968ஆம் ஆண்டு குடமுழக்கு நடத்தப்பட்டது. இருப்பினும் மூலக் கோவிலின் மூலவர் சன்னதி இன்றும் ஏரிப் பகுதியில் உள்ளது. ஏரியில் நீர் வற்றும் சமயம் அக்கோவிலைப் பார்க்க முடியும்.
உ. வே. சாமிநாத ஐயர், தமது குறிப்புகளில் "பூண்டி நீர்த்தேக்கத்தில் இத்தலமும் கோவிலும் முழுகியுள்ளன. கோவிலிலிருந்த மூர்த்திகள் இத்தேக்கத்தின் கரையில் ஒரு அறையில் காட்சியளிக்கின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.
தல விருட்சம்: இலந்தை மரம்.
தீர்த்தம்: குசஸ்தலை ஆறு
திருவிழாக்கள்: சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம்.
செப்புத் திருமேனிகள்: பிரதோஷ நாயகர், சோமஸ்கந்தர், சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை.
காலம்: திருவிளம்பூதூர் கற்றளி 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
கோவில் கட்டிடக்கலை அமைப்பு

திருவிளம்பூதூர் கற்றளி
கருவறை, விமானம், அர்த்தமண்டபம் கொண்டு, முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில் சிதைந்துள்ளது. அதிஷ்டானம் முதல் பிரஸ்தாரம் வரை கற்றளியாக அமைந்துள்ளது. பாதவர்க்க பகுதி பிரம்மகாந்தத் தூண்கள், பத்ரகோஷ்டங்கள், மகர தோரணங்கள் கொண்டுள்ளது. பிரஸ்தார பகுதி நாசிகையுடன் அமைந்த கபோதமும் மேலே வியாள வரியும் கொண்டுள்ளது. நாசிகையின் காடப்பகுதி முழு வட்டமாக உள்ளது. கபோதத்தில் கோடிப்பாளை கருக்குகள் உள்ளன. கிரீவ பகுதி சிதைந்த நிலையில் செங்கற் கட்டுமானமாக அமைந்துள்ளது. அதன் கோஷ்டப் பகுதிகளில் சுதை சிற்பங்கள் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன.

தற்போதைய கற்றளி
முகப்பு வாயில், மகாமண்டபம், மூலவர் சன்னதி, தாயார் சன்னதி கொண்டுள்ளது. வெளி பிரகாரத்தில் வாகனமண்டபமும் விநாயகர், காலபைரவர் சன்னதிகளும் உள்ளன. முகப்பு வாயில் மற்றும் சில தூண்கள் திருவிளம்பூதூர் கற்றளியிலிருந்து எடுக்கப்பட்டவை. முகப்பு வாயில் தெற்கு நோக்கி மகாதுவார அமைப்புடன் உள்ளது.
மகாமண்டபம்
மூலவர் மற்றும் தாயார் சன்னதிகளுக்கு பொதுவாக அமைந்துள்ளது. இங்கு அறுபத்து மூன்று நாயன்மார்கள், சேக்கிழார், சூரியன், சந்திரன், நால்வர் சிற்பங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. பள்ளியறை, நவகிரக மண்டபம் அமைந்துள்ளன. உற்சவ திருமேனிகளும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. கிழக்கே ஒரு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.

மூலவர் சன்னதி
கிழக்கு முகமாக அமைந்துள்ளது. அர்த்தமண்டப முகப்பில் விநாயகர், முருகர், துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறையில் ஊன்றீஸ்வரர் லிங்க வடிவில் காட்சி தருகிறார். அர்த்தமண்டப வாயில் அருகே இறைவனை நோக்கியவாறு சுந்தரரின் சிற்பம் உள்ளது. கண்பார்வை இழந்த நிலையில், இறைவன் கொடுத்த ஊன்றுகோலுடன் காட்சி தருகிறார். அருகே வலது கொம்பு உடைந்த நிலையில் இடபம் உள்ளது. இறைவன் கண்பார்வை அருளாது ஊன்றுகோலைக் கொடுத்ததால் சுந்தரர் கோபங்கொண்டு ஊன்றுகோலை வீசியதில் இடபத்தின் கொம்பு உடைந்தது எனும் செவிவழிக் கதை வழக்கில் உள்ளது.
விமானம் பிரஸ்தார பகுதி வரை கற்றளியாகவும் அதற்கு மேல் சுதை கட்டுமானமாகவும் உள்ளது. திராவிட பாணி சிகரத்துடன் ஏக தள விமானமாக அமைந்துள்ளது. கோஷ்டப் பகுதிகளில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், நான்முகன், துர்க்கை சிற்பங்கள் உள்ளன.
உட்பிரகாரத்தில் விநாயகர், ஆறுமுக வேலவர், மகாலட்சுமி, சண்டேசர் சன்னதிகள் உள்ளன.
இடபமண்டபம், பலிபீடம், துவஜஸ்தம்பம் ஆகியன மகாமண்டபத்து கிழக்கு வாயில் அருகே வெளி பிரகாரத்தில் அமைந்துள்ளன.
தாயார் சன்னதி
தெற்கு முகமாக அமைந்துள்ளது. முகப்பில் இரு துவாரபாலகியர்கள் உள்ளனர். கருவறையில் மின்னொளி அம்மை நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். எதிரே சிம்மம், பலிபீடம் அமைந்துள்ளது. விமானம் பிரஸ்தாரம் வரை கற்றளியாகவும் அதற்கு மேல் சுதை கட்டுமானமாகவும் அமைந்துள்ளது.
கல்வெட்டுகள்
திருவிளம்பூதூர் கோவிலில் மொத்தம் 22 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அனைத்து கல்வெட்டுகளும் தாயார் சன்னதிக்குப் பின்னால் உட்பிரகாரத்து சுவரில் வண்ணக்கலவை கொண்டு எழுதப்பட்டுள்ளன.
| மன்னன் | கல்வெட்டுகள் |
|---|---|
| முதலாம் இராஜராஜன் | 5 |
| முதலாம் குலோத்துங்கன் | 2 |
| விக்கிரம சோழன் | 3 |
| மூன்றாம் குலோத்துங்கன் | 4 |
| மூன்றாம் இராஜராஜன் | 7 |
| முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் | 1 |
- முதலாம் இராஜராஜனின் 19ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இக்கோவிலில் சந்தி விளக்கு எரிக்க, நென்மலி கிழான் எழுவாண்டை பாரியை திருவாண்டாள் என்பவள் நான்கு காசுகள் கொடை அளித்த செய்தியைத் தெரிவிக்கிறது.
- முதலாம் குலோத்துங்கனின் 49ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இக்கோவிலில் சந்தி விளக்கு எரிக்க, மலைக்கினியநின்றான் என்பவன், காசு கொடை அளித்த செய்தியைச் சொல்கிறது.
- விக்கிரம சோழனின் 5ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இக்கோவிலில் விஷு அயனங்களுக்கும் அமாவாசைகளுக்கும் சிறப்பு வழிபாடு செய்வதற்கு, சோழமண்டலத்துக் குலோத்துங்கசோழ வளநாட்டுச் சேற்றூர்க் கூற்றத்து இடைக்குறும்பூருடையான் அரையன் இராஜராஜதேவனுக்கு இறையிலியாக நிலம் விற்றுக் கொடுத்த செய்தியைக் குறிப்பிடுகிறது. கூடவே இந்நிலத்தைத் திருத்திக் கொள்ளவும் ஏரி நீரும் ஆற்றுக்கால் நீரும் பாயப் பெறவும் கிணறு அமைத்துக் கொள்ளவும் சொல்லப்படுகிறது. மேலும் இதற்கு விரோதம் செய்பவர்கள் 'கங்கையிடை குமரியிடை பாவம் செய்தார் பாவத்தைப் படுவார்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மூன்றாம் குலோத்துங்கனின் 12ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இக்கோவிலில் திருமடைவிளாகம் மற்றும் திருநந்தவனம் அமைப்பதற்கும் நிவந்தம் அளிப்பதற்கும் திருப்பணிகள் புரிவதற்கும் இறையிலி தேவதானமாக நிலம் கொடையளிக்கப்பட்ட அரசாணையைச் சொல்கிறது.
- மூன்றாம் குலோத்துங்கனின் 35ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, வணிகன்மங்கலங் கிழான் சூரியதேவன் தம்பிரான்தோழன் என்பவன், இக்கோவிலில் எழுந்தருளிவித்த உம்பர்தனித்துணைப் பெருமாளுக்கும் இவரது நாச்சியாருக்கும் விநாயகப்பிள்ளையாருக்கும் திருவாபரணம் அணிவிக்க பத்து கழஞ்சு பொன் அளித்துள்ளான். மேலும் மூவருக்கும் தினம் திருவமுதும் கறியமுதும் படைக்க இரண்டாயிரம் குழி நிலமும் கொடுத்துள்ள செய்தியைச் சொல்கிறது.
- மூன்றாம் இராஜராஜனின் 28ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இக்கோவிலில் சந்தி விளக்கு எரிக்க, நாராயணன் சங்கரன் என்பவன், பசுக்கள் மூன்றும் பொலிமுறை நாகு (இனப்பெருக்கத்திற்கு தகுதிவாய்ந்த பசு) ஒன்றும் கன்று ஒன்றும் கொடையளித்துள்ள செய்தியைக் குறிப்பிடுகிறது.
- முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனின் 16ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இக்கோவிலில் தேவரடியாள் திருவுடையார் மகள் தேவர்கள் நம்பிராட்டியார் செய்த திருவுடை மாளிகை திருப்பணியைக் குறிப்பிடுகிறது.
உசாத்துணை
- Annual Report on Indian Epigraphy 1039-44, Page no: 89 - 91
- திருவெண்பாக்கம் - பிழையுளன பொறுத்திடுவர்
வெளி இணைப்புகள்
- திருவெண்பாக்கம் - பூண்டி (நீர்த்தேக்கம்), kamakoti.org
- வேலுதரன், Shri Oondreeswarar Shiva Temple / ஸ்ரீ ஆதார தண்டேஸ்வரர் சுவாமி கோயில், Poondi, Tiruvallur District, Tamil Nadu
- வேலுதரன், Sri Gangadeeswarar Temple, Purasawalkam & Sri Agastheeswarar Temple, Villivakkam, Chennai, Tamil Nadu
- Sri Oondreeswarar Temple, Thiruvenpakkam (Poondi), Thiruvallur
✅Finalised Page