கந்தரலங்காரம்: Difference between revisions
Logamadevi (talk | contribs) No edit summary |
; Added info on Finalised date |
||
| Line 53: | Line 53: | ||
*[https://www.youtube.com/watch?v=YxTtgt_rpso கந்தரலங்காரம் பாடல்கள், யூ ட்யூப் தளம்] | *[https://www.youtube.com/watch?v=YxTtgt_rpso கந்தரலங்காரம் பாடல்கள், யூ ட்யூப் தளம்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|26-Jul-2026, 07:31:41 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Latest revision as of 03:43, 27 July 2026
- கந்த என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கந்த (பெயர் பட்டியல்)

கந்தரலங்காரம் (15-ம் நூற்றாண்டு) அருணகிரிநாதர் எழுதிய முருகன் மீதான பக்தி இலக்கிய நூல். தமிழ்ச் சிற்றிலக்கிய வகைமையில் முதன் முதலில் இயற்றப்பட்ட 'அலங்காரம்' வகைச் சிற்றிலக்கிய நூலாக அறியப்படுகிறது.
நூல் அமைப்பு
கந்தரலங்காரம் நூலில் 108 பாடல்கள் இடம்பெற்றன. முதல் பாடல் காப்புப் பாடலாக அமைந்துள்ளது. நூலின் இறுதியில் நூற்பயன் பாடலாக ஏழு பாடல்கள் இடம்பெற்றன. 101 பாடல்களில் முருகனின் பெருமை, சிறப்பு, அவன் அருள் புரியும் விதம், ஞான உபதேசச் செய்திகள் விளக்கப்பட்டுள்ளன.
கந்தரலங்காரம் நூல், வெவ்வேறு சமயங்களில் அருணகிரிநாதரால் இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பு என்றும், முருகனின் அருளை அருணகிரிநாதர் பெற்ற பின்பு அதனைப் போற்றி எழுதப்பட்ட நூல் என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன.
நூல் பெயர்க் காரணம்
கந்தப்பெருமானைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளும், புராணச் செய்திகளும் அலங்காரமாக இந்நூலில் கூறப்பட்டுள்ளதால் 'கந்தரலங்காரம்' என்று பெயர் பெற்றது.
தொன்மம்
அருணகிரிநாதர் உலக வாழ்வை வெறுத்து, அருணைக் கோபுரம் மீது ஏறி உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றார். அப்போது முருகப்பெருமான் தோன்றி, தனது இரு கைகளால் அருணகிரிநாதரைத் தாங்கினார் என்பது தொன்மம். அப்போது முருகன், அருணகிரிக்கு அளித்த உபதேசங்களைப் பற்றியும், முருகப்பெருமானின் பெருமை மற்றும் சிறப்புப் பற்றியும் கந்தரலங்காரம் நூல் கூறுகிறது.
பாடல்
பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னைப் பிரபஞ்சம் என்னும்
சேற்றைக் கழிய வழிவிட்டவா செம் சடா அடவிமேல்
ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் கிருபாகரனே
திருந்த அம் புவனங்கள் ஈன்ற பொற்பாவை திருமுலைப்பால்
அருந்திச் சரவணப் பூந்தொட்டில் ஏறி அறுவர் கொங்கை
விரும்பிக் கடல் அழக் குன்று அழச் சூர் அழ விம்மி அழுங்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவன் என்று ஓதும் குவலயமே
நாள் என் செயும் வினைதான் என் செயும் எனை நாடி வந்த
கோள் என் செயும் கொடும் கூற்று என் செயும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே
பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும் நின் சிறு அடியைக்
குறுகிப்பணிந்து பெறக் கற்றிலேன் மதம் கும்பம் கம்பத்
தறுகண் சிறுகண் சங்கிராம சயில சரசவல்லி
இறுகத் தழுவும் கடக அசல பன்இரு புயனே
விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே
வேலாயுதன் சங்கு சக்கராயுதன் விரிஞ்சன் அறியாச்
சூலாயுதன் தந்த கந்தச்சுவாமி சுடர்க்குடுமிக்
கால் ஆயுத கொடியோன் அருள் ஆய கவசம் உண்டு என்
பால் ஆயுதம் வருமோ யமனோடு பகைக்கினுமே
உசாத்துணை
- கந்தரலங்காரம், ஆர்கைவ் தளம்
- கந்தரலங்காரம் ஆய்வுக் கட்டுரை, கௌமாரம் தளம்
- கந்தரலங்காரம்: ஒரு தியானம், தமிழ்ஹிந்து தளக் கட்டுரை
- கந்தரலங்காரம் பாடல்கள், யூ ட்யூப் தளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Jul-2026, 07:31:41 IST