அ. ஆறுமுகம்: Difference between revisions
Logamadevi (talk | contribs) |
Logamadevi (talk | contribs) |
||
| Line 17: | Line 17: | ||
==அமைப்புச் செயல்பாடுகள்== | ==அமைப்புச் செயல்பாடுகள்== | ||
அ.ஆறுமுகம், திருமழபாடியில் தமிழ்ச்சங்கம் ஒன்றை நிறுவினார். திருவள்ளுவருக்குத் | அ.ஆறுமுகம், திருமழபாடியில் தமிழ்ச்சங்கம் ஒன்றை நிறுவினார். திருவள்ளுவருக்குத் தான் வாழ்ந்த திருமழபாடியில் சிலை எடுப்பித்தார். தமிழறிஞர்களைத் திருமழபாடிக்கு வரவழைத்துச் சிறப்புரையாற்றச் செய்து கௌரவித்தார். | ||
==பதிப்பு== | ==பதிப்பு== | ||
Revision as of 10:41, 16 June 2026

அ. ஆறுமுகம் (முனைவர் அ. ஆறுமுகம்; முனைவர் அ. ஆறுமுகனார்; அ. ஆறுமுகனார்) (ஜூன் 11, 1933 - டிசம்பர் 31, 2025), எழுத்தாளர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
பிறப்பு, கல்வி
அ. ஆறுமுகம், ஜூன் 11, 1933 அன்று, தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தநத்தம் கிராமத்தில், அருணாச்சலம் - அமிழ்தம் இணையருக்குப் பிறந்தார். சாத்தநத்தம், திட்டக்குடி, பெண்ணாடம், விருத்தாசலம் ஆகிய ஊர்களிலுள்ள பள்ளிகளில் பள்ளிக் கல்வி கற்றார். திருச்சியிலுள்ள அரசினர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் மூலம் வித்துவான் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலையில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில், 'சங்க இலக்கியத்தில் குடும்பம், உடைமை, அரசு' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
அ. ஆறுமுகம், மணமானவர். மனைவி: சாரதாம்பாள். இவர்களுக்கு திருவள்ளுவன், மறைமலை, இளங்கோவன், பாவேந்தன், எழிலரசன் என ஐந்து மகன்கள். மகள்: அல்லி.
கல்விப் பணிகள்
அ. ஆறுமுகம், 1953-ல், தான் படித்த சாத்தநத்தம் உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றினார். 1955-ல் கீழப்புலியூர், 1956-ல் கூடலூர், 1960-ல் துவரங்குறிச்சி, 1961-ல் பெரம்பலூர், 1963-ல் செட்டி குளம், 1969-ல் இலப்பைக்குடிக்காடு ஆகிய ஊர்களிலுள்ள பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
அ. ஆறுமுகம், 1972-ல் திருச்சி பெரியார் கல்லூரியில் தமிழ்ப் பயிற்றுநராகப் பொறுப்பேற்றார். 1973-ல் அரசு கலைக் கல்லூரியில் பணிபுரிந்தார். 1974-ல் தஞ்சை சரபோஜி கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1975-ல் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் துணைப் பேராசிரியர் ஆகப் பணிபுரிந்தார். 1977-ல் சேலம் அரசு கல்லூரி, 1979-ல் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கல்லூரி, 1986-ல் அரியலூர் கல்லூரி ஆகியவற்றில் பணியாற்றி 1991-ல் பணி ஓய்வு பெற்றார். மொத்தம் 19 ஆண்டு காலம் கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
அ.ஆறுமுகம், பல்வேறு கட்டுரைகளையும் நூல்களையும் எழுதினார். 'பிறந்த மண்ணின் பிடி வரலாறு', 'தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம்' ஆகிய வரலாற்று நூல்களை எழுதினார். 'என்னையே நான்', 'தாய் தந்த வாழ்க்கைத்தேன்' இரண்டும் தன் வரலாற்று நூல்கள். இவை தவிர்த்து வாழ்க்கை வரலாற்று நூல்களையும், இலக்கியம் சார்ந்த கட்டுரை மற்றும் திறனாய்வு நூல்களையும், பொது வாசிப்புக்குரிய நூல்களையும் எழுதினார். மாணவர்கள் திருக்குறளை ஒப்புவிக்கும் வகையில் 'திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி' என்ற நூலை வெளியிட்டார்.
அமைப்புச் செயல்பாடுகள்
அ.ஆறுமுகம், திருமழபாடியில் தமிழ்ச்சங்கம் ஒன்றை நிறுவினார். திருவள்ளுவருக்குத் தான் வாழ்ந்த திருமழபாடியில் சிலை எடுப்பித்தார். தமிழறிஞர்களைத் திருமழபாடிக்கு வரவழைத்துச் சிறப்புரையாற்றச் செய்து கௌரவித்தார்.
பதிப்பு
அ. ஆறுமுகம், 'பாவேந்தர் பதிப்பகம்' என்ற பதிப்பகத்தை நிறுவி அதன் மூலம் பல நூல்களை வெளியிட்டார்.
பொறுப்பு
- திருமழபாடியில் தமிழ்ச்சங்க நிறுவனர் மற்றும் தலைவர்
- உலகத் திருக்குறள் மையத்தின் வாழ்நாள் உறுப்பினர்
ஆய்வு
'முனைவர் அ. ஆறுமுகனாரின் படைப்புகள் ஓர் ஆய்வு' என்ற தலைப்பில் ஆய்வு செய்து, ஆர். தேவகி முனைவர் பட்டம் பெற்றார்.

மறைவு
அ. ஆறுமுகம், டிசம்பர் 31, 2025 அன்று காலமானார்.
மதிப்பீடு
அ. ஆறுமுகம், கவிதை, கட்டுரை, தன்வரலாறு, வாழ்க்கை வரலாறு, நாட்டுப்புற இலக்கியம், திருக்குறள் உரை, பொது வாசிப்புக்குரிய கட்டுரை நூல்கள் என நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். கல்வியாளராக நீண்டகாலம் இலக்கியம் பயிற்றுவித்தார். கல்வியாளர், இலக்கிய ஆய்வாளர், எழுத்தாளர், பதிப்பாளர் ஆகிய நிலைகளில் மதிப்பிடப்படுகிறார்.
நூல்கள்
- பூம்புகாரின் புதுவரவு (1970)
- பாவேந்தரின் தமிழியக்கம் ஓர் ஆய்வு (1984)
- நாட்டுப்புற இலக்கியமும் பண்பாடும் (1984)
- திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (1993)
- குறள் விருந்து (1993)
- வாழ்க்கை இலக்கியம் (1994)
- சங்க இலக்கியத்தில் குடும்பம், உடைமை, அரசு (1994)
- திருக்குறள் நினைவேடு (1996)
- வளர்தமிழ் வழிகாட்டி (1996)
- என்னையே நான் (தன்வரலாறு), (1997)
- பாவேந்தர் தந்த பரிசு (1997)
- சிலம்பும் நாட்டார் உரையும் (1998)
- திருக்குறளில் புதிய பார்வை (1998)
- ஊர்வல உணர்வுகள் (1999)
- ஆற்றங்கரைக் குயில் (1999)
- மணிக்குறள் நூறு (2000)
- வழியடைக்குங்கல் (2000)
- எண்ணித்துணிக (2000)
- அகமும் அழகும் (2001)
- குயில் தந்த முத்தம் (2001)
- ஆந்திரங் கண்ட அருந்தமிழ் (முனைவர் சிங்காரவேலர் வரலாறு) (2001)
- சிலம்பின் மூன்று ஒலிகள் (2003)
- தன்மானத் தமிழ் மறவர் (2003)
- கவிவேந்தரின் கருத்துச்சோலை (2003)
- பிறந்த மண்ணின் பிடிவரலாறு (2004)
- அந்தமிழ்கண்ட அந்தமான்(பயண நூல்) (2004)
- வாழ்வியல் வளங்கள் (2005)
- திருக்குறள் கையேடு (2005)
- ஆ.செ.தங்கவேலு வாழ்க்கை வரலாறு (2005)
- படைப்புவேந்தரின் பன்முகப் பார்வை (2006)
- திருக்குறள் தெளிவும் கருத்தும் (2007)
- தமிழில் வெண்பா இலக்கியங்கள் (2007)
- அரசியல் இமயம் அண்ணா (2009)
- முந்துமா முதுமை - களப்பணித்தொகுப்பு (2009)
- தமிழராய் வாழ்வோம் (2010)
- தாய் தந்த வாழ்க்கைத் தேன் (தன்வரலாறு) (2012)
- வண்டமிழ் வளர்த்த வரதராசனார் (2011)
- தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் (2012)
உசாத்துணை
- முனைவர் மு. இளங்கோவன் தளம்
- முனைவர் அ. ஆறுமுகம் நினைவேந்தல், விடுதலை தளம்
- 324 தமிழறிஞர்கள், தொகுப்பாசிரியர்: சூரியசந்திரன், வெளியீடு: கலைஞன் பதிப்பகம், தி.நகர், சென்னை - 17; முதல் பதிப்பு: 2023.
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.