மலர்மகன்: Difference between revisions
Logamadevi (talk | contribs) No edit summary |
; Added info on Finalised date |
||
| Line 77: | Line 77: | ||
*[https://www.commonfolks.in/books/d/tharkaala-siraar-ezhuthalargal தற்கால சிறார் எழுத்தாளர்கள், ஆர்.வி. பதி, நிவேதிதா பதிப்பகம்] | *[https://www.commonfolks.in/books/d/tharkaala-siraar-ezhuthalargal தற்கால சிறார் எழுத்தாளர்கள், ஆர்.வி. பதி, நிவேதிதா பதிப்பகம்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|05-Jan-2026, 13:49:47 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Latest revision as of 03:44, 6 January 2026

மலர்மகன் (துரை சீனிவாசன்; புலவர் துரை சீனிவாசன்; சீனிவாசன்) (பிறப்பு: அக்டோபர் 13, 1946) கவிஞர். மரப்புகவிதை, புதுக்கவிதை, ஹைக்கூக் கவிதை எனப் பங்களித்தார். சிறார் இலக்கியப் படைப்பாளி.
பிறப்பு, கல்வி
துரை. சீனிவாசன் என்னும் இயற்பெயர் கொண்ட மலர்மகன், அக்டோபர் 13, 1946 அன்று, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தில் உள்ள குவளையூரில், துரைசாமி - புஷ்பம் இணையருக்குப் பிறந்தார். காஞ்சிபுரம் மாவட்டம், எலப்பாக்கத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். திருவண்ணாலை மாவட்டம் கீழ்க்கொடுங்காளூரில் உள்ள அரசுப்பள்ளியில் உயர்நிலைக் கல்வி கற்றார். 1962-1964 ஆண்டுகளில் ஆற்காட்டில் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயின்று பட்டயம் பெற்றார்.
அஞ்சல் வழிக்கல்வி மூலம் வரலாற்றில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். கல்வியியலில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றார்.
தனி வாழ்க்கை
மலர்மகன், சென்னை, நங்கநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றினார். மே 31, 2005 அன்று பணி ஓய்வு பெற்றார். மணமானவர். மனைவி: சரசுவதி. மகன்கள்: புஷ்பபாரதி, சத்தியமூர்த்தி, அருண்காந்தி. மகள்: சங்கீதா. மலர்மகனின் தம்பி கவிஞர் தாராபாரதி.

இலக்கிய வாழ்க்கை
மலர் மகன் கவிதைகள் மீது ஆர்வம் கொண்டார். இதழ்களில் கவிதைகள் எழுதினார். 'கண்ணன்', 'தினமணி சிறுவர்மணி', 'பாப்பா மலர்', 'கோகுலம்' முதலான சிறார் இதழ்களில் சிறார்களுக்காகப் பல பாடல்களை எழுதினார். கவியரங்குகளில் கலந்துகொண்டு கவிதைகள் படைத்தார். இலக்கியவீதி அமைப்பும், இலக்கியவீதி இனியவனும் மலர்மகனை ஆதரித்து ஊக்குவித்தனர். மலர்மகன் எழுதிய 'பாடும் சிட்டுகள்' என்ற மழலைப்பாடல்கள் நூலை இலக்கியவீதி இலக்கிய அமைப்பு வெளியிட்டது. 'பகத்சிங்' என்ற சிறார் கவிதைக் காப்பிய நூலையும் வெளியிட்டார்.
தொடர்ந்து மரபுக்கவிதை நூல்கள், புதுக்கவிதை நூல்கள், ஹைக்கூக் கவிதை நூல்கள் எனப் பல நூல்களை வெளியிட்டார்.
அமைப்புச் செயல்பாடுகள்
மலர்மகன் பல்வேறு இலக்கிய அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தார். பல இலக்கிய நிகழ்வுகளை, கவியரங்குகளை ஒருங்கிணைத்து நடத்தினார். கவிஞர்கள் பலரை ஊக்குவித்தார்.

பொறுப்பு
- கவிஞாயிறு தாராபாரதி அறக்கட்டளையின் தலைவர்
- இலக்கியவீதி அமைப்பின் செயலாளர்
- சென்னைக் கம்பன் கழகத்தின் துணைச்செயலாளர்
விருதுகள்
- தமிழறிஞர் சி.இலக்குவனார் 100 விருது
- தமிழ்பணி விருது
- தமிழன்பன் 89 விருது
- சிலம்பொலி 85 விருது
- குலோத்துங்கன் கவி விருது
- சான்றோர் விருது
- பாரதி விருது
- கவிச்செல்வர் விருது
- நற்கவிக்கோ விருது
மதிப்பீடு
மலர்மகன், மரபிலக்கியப் பாடல்களையும், புதுக்கவிதை மற்றும் ஹைக்கூக் கவிதைகளையும் எழுதி வரும் கவிஞர். சமூகப்பிரச்சினைகளை கவிதைகளில் பாடுபொருளாகக் கொண்டு பல கவிதைகளை எழுதினார். சிறார் பாடல்கள், குறுங்காப்பியங்கள் போன்றவற்றையும் எழுதியிருக்கிறார். சென்னை வாழ் மூத்த கவிஞர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.
நூல்கள்
மரபுக்கவிதை நூல்கள்
- பூமிக்குப் புதிய திசை
- காதல் மரம்
- மலர்மகன் கவிதைகள்
புதுக்கவிதை நூல்கள்
- உத்தமர் ஓமந்தூரார்
- பஞ்சாப்சிங்கம் பகத்சிங்
- ஆசையின் நிமித்தம்
- கம்பன்கவி உலா
- சுட்டு விரல்
- வாழ்க்கை வாசலில்
- உலகம் யாவையும்
- உனக்கென்றோர் நாற்காலி
- ஆன்ம தாகம்
ஹைக்கூக் கவிதைகள்
- தொடர்பு எல்லைக்கு அப்பால்
- வளையும் நேர் கோடு
சிறார் நூல்கள்
- பாடும் சிட்டுகள்
- பகத்சிங்
உசாத்துணை
- மலர்மகன் உரை
- மலர்மகன் நூல் விமர்சனம், இரா. இரவி
- தற்கால சிறார் எழுத்தாளர்கள், ஆர்.வி. பதி, நிவேதிதா பதிப்பகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Jan-2026, 13:49:47 IST