கயத்தூர் கிழார்: Difference between revisions
; Added info on Finalised date |
Added: Category:புலவர் |
||
| Line 28: | Line 28: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:புலவர்]] | |||
Latest revision as of 00:55, 21 December 2025
கயத்தூர் கிழார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
கயத்தூர் கிழார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கிழார் என்பது அரசரின் நன்மதிப்பை பெற்றோருக்கு வழங்கப்படும் பட்டச்சொல். எனவே புலவர் அரசரின் மதிப்பை பெற்ற சிறப்புடையவர் என்று அறிய முடிகிறது. சோழ நாட்டின் ஒரு பகுதியில் கயத்தூர் என்னும் ஊர் அமைந்துள்ளது. அவ்வூரினை சேர்ந்தவர்.
இலக்கிய வாழ்க்கை
கயத்தூர் கிழார் பாடிய பாடல் குறுந்தொகையில் 354-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. பரத்தையிடம் சென்று திரும்பிய தலைவனிடத்து, தலைவியின் துயரை தோழி உரைப்பதாக மருதத் திணையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- கணவனை பரத்தையரிடம் இழந்த பெண்ணுக்கு அவளது பிறந்த இல்லத்தில் கிடைக்கும் மரியாதை குறிப்புணர்த்தப்பட்டுள்ளது. அப்பெண்ணுக்கு பிறந்தகத்தில் கடும்பாம்புகளின் விஷம் போல நச்சு சொற்களே காத்திருக்கின்றன.
- பரத்தையரிடம் கணவன் சென்ற பிறகு வாழ வழியற்று பெண்கள் தமது பிறந்த வீட்டிற்கு செல்லும் நிலை இருந்துள்ளது.
- உவமைகள்: நீண்ட நாட்கள் நெருங்கிப் பழகும் போது ஒருவர் மேல் உண்டாகும் விலக்க உணர்ச்சியானது, நெடுநேரம் நீரில் குளித்து கண் சிவப்பதற்கும் அளவுக்கதிகமான தேனை உண்பது திகட்டலை உண்டு பண்ணுவதற்கும் ஒப்பானது.
பாடல் நடை
குறுந்தொகை - 354
- திணை: மருதம் கூற்று: பரத்தையிற் பிரிந்து வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.
நீர்நீ டாடிற் கண்ணுஞ் சிவக்கும்
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்
தணந்தனை யாயினெம் இல்லுய்த்துக் கொடுமோ
அந்தண் பொய்கை எந்தை எம்மூர்க்
கடும்பாம்பு வழங்குந் தெருவில்
நடுங்கஞர் எவ்வம் களைந்த எம்மே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - அதியன் விண்ணத்தனார் முதலிய 44 புலவர்கள்: புலவர் க. கோவிந்தன்
- குறுந்தொகை - 354:nallakurunthokai
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-May-2025, 13:03:32 IST