வசந்தகுமார்: Difference between revisions

From Tamil Wiki
Corrected typo errors;
 
Line 28: Line 28:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:இதழாசிரியர்]]

Latest revision as of 17:35, 20 December 2025

வசந்தகுமார்

வசந்தகுமார் (தமிழினி வசந்தகுமார்) பதிப்பாளர், பிரதிமேம்படுத்துநர், இதழாசிரியர். தமிழினி பதிப்பகம், யுனைட்டட் ரைட்டர்ஸ் என்ற இரு பதிப்பகங்களை நடத்தி வருகிறார். தமிழினி என்ற இதழை நடத்தினார்.

வாழ்க்கைக்குறிப்பு

வசந்தகுமார் சென்னையில் வசிக்கிறார். மகன் சரவணன்.

பதிப்பகப் பணி

இருபதாண்டுகளாக தமிழினி பதிப்பகம், யுனைட்டட் ரைட்டர்ஸ் என்ற இரு பதிப்பகங்களை நடத்தி வருகிறார். தமிழின் முக்கியமான படைப்பாளிகளான ஜெயமோகன், சு. வேணுகோபால், கண்மணி குணசேகரன், ஜோ டி குரூஸ், சு. வெஙகடேசன், எம். கோபாலகிருஷ்ணன், உமா மகேஸ்வரி, ஜெ. பிரான்ஸிஸ் கிருபா போன்றோரின் ஆக்கங்களை அறிமுகம்செய்து வெளியிட்டது தமிழினி. முக்கியமான ஆய்வுநூல்களையும் வெளியிட்டுள்ளது.

இதழியல்

வசந்தகுமார் "புதுயுகம் பிறக்கிறது" என்ற இதழை நடத்தினார்.

தமிழினி மாத இதழ்

தமிழினி பதிப்பக வெளியீடாக 'தமிழினி' மாத இதழ் 67 E பீட்டர்ஸ் சாலை, இராயப்பேட்டை, சென்னையிலிருந்து 2008 ஜனவரி முதல் வெளியானது. வசந்தகுமாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த தமிழினி 'கலை இதழ்' என்ற அடையாளம் கொண்டதாக இருந்தது. "தமிழின் திசைவழியை அடையாளம் காணவும் காலங்காலமாக வருகின்ற பண்பாட்டு மரபுகளை காப்பாற்றிவைக்கவும் தமிழினி தன்னை நேர்ந்துகொள்கிறது. கேளிக்கையன்று இதன் பொதுநோக்கு - சமூக நலன்" என அறிவித்துக் கொண்டது. இவ்விதழ் பழந்தமிழ் ஆய்வுகள், சூழியல் ஆய்வுகள், தத்துவ ஆய்வுகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்தது. தமிழ் படைப்பியக்கத்திற்கும் பண்பாட்டுச் செயல்பாடுகளுக்கும் ஒதுக்கப்பட்டது. கரு. ஆறுமுகத்தமிழன் சில காலம் இதன் ஆசிரியராக இருந்தார். ராஜ சுந்தரராஜன், அ. முத்துகிருஷ்ணன், மகுடேசுவரன், எம்.கோபாலகிருஷ்ணன், தேவதேவன், நாஞ்சில்நாடன், ஜெயமோகன் ஆகியோர் இவ்விதழில் எழுதினர். 2011 முதல் தமிழினி இணைய இதழாகவும் வெளியானது.

வழக்கமாகத் தமிழ்ச் சிற்றிதழ்களில் காணப்படாத தமிழாய்வாளர்களின் பங்கேற்பு இவ்விதழின் சிறப்பு. அ.கா பெருமாள், ஆ.முத்துசிவன், ஸ்ரீரங்கம் மோகனரங்கன், செந்தீ நடராசன், இரா.குப்புசாமி ஆகிய ஆய்வாளர்கள் எழுதினார். கலை, இலக்கியம் சார்ந்து படைப்புகள் வெளிவந்தன.

இலக்கிய இடம்

தொண்ணூறுகளில் தமிழில் எழுதவந்த எழுத்தாளர்கள் பலர் தமிழினி பதிப்பகத்தின் மூலமாகவே கவனம் பெற்றனர். அவர்களின் நூல் வெளியாக்கத்தில் வசந்தகுமார் பங்களிப்பு செய்தவராக அறியப்படுகிறார். தமிழில் தொடர்ச்சியாக புதிய எழுத்தாளர்களைக் கண்டெடுப்பதும் அறியப்படாத முக்கியமான எழுத்தாளர்களை மீட்டு முன்னிலைப்படுத்துவதும் தமிழினியின் பணிகளாக இருந்தன.

இணைப்புகள்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Jul-2024, 19:17:46 IST