எம்.கே. சானு: Difference between revisions

From Tamil Wiki
Corrected typo errors; Corrected year suffix text; ; Added info on Finalised date
Corrected typo errors;
Line 12: Line 12:


== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
1958-ல் பள்ளி மாணவர்களுக்காக எழுதிய ’ஐந்து அறிவியல் மேதைகள்’ எம்.கே.சானுவின் முதல் நூல். 1960-ல் தன் முதல் இலக்கிய விமர்சன நூலை எழுதினார், ’காற்றும் வெளிச்சமும்’ என்னும் அந்நூல் அன்று பேசப்பட்ட ஒன்று.
1958-ல் பள்ளி மாணவர்களுக்காக எழுதிய 'ஐந்து அறிவியல் மேதைகள்' எம்.கே.சானுவின் முதல் நூல். 1960-ல் தன் முதல் இலக்கிய விமர்சன நூலை எழுதினார், 'காற்றும் வெளிச்சமும்' என்னும் அந்நூல் அன்று பேசப்பட்ட ஒன்று.


எம்.கே.சானு இலக்கிய விமர்சனம், இலக்கிய வரலாறு என்னும் களங்களில் பல நூல்களை எழுதியிருக்கிறார். ஆனால் வாழ்க்கை வரலாற்று நூல்களுக்காகவே அவர் புகழ்பெற்றார். அவர் எழுதிய [[நாராயணகுரு]] வாழ்க்கை வரலாறு முதன்மையானது.  சகோதரன் ஐயப்பன், சங்கம்புழ கிருஷ்ணபிள்ளை, [[எம்.கோவிந்தன்]], [[வைக்கம் முகமது பஷீர்]], [[பி.கே.பாலகிருஷ்ணன்]], டாக்டர் பல்பு ஆகியோர் பற்றி அவர் எழுதிய வாழ்க்கை வரலாறுகள் இன்று செவ்வியல் படைப்புகளாகக் கருதப்படுகின்றன.
எம்.கே.சானு இலக்கிய விமர்சனம், இலக்கிய வரலாறு என்னும் களங்களில் பல நூல்களை எழுதியிருக்கிறார். ஆனால் வாழ்க்கை வரலாற்று நூல்களுக்காகவே அவர் புகழ்பெற்றார். அவர் எழுதிய [[நாராயணகுரு]] வாழ்க்கை வரலாறு முதன்மையானது.  சகோதரன் ஐயப்பன், சங்கம்புழ கிருஷ்ணபிள்ளை, [[எம்.கோவிந்தன்]], [[வைக்கம் முகமது பஷீர்]], [[பி.கே.பாலகிருஷ்ணன்]], டாக்டர் பல்பு ஆகியோர் பற்றி அவர் எழுதிய வாழ்க்கை வரலாறுகள் இன்று செவ்வியல் படைப்புகளாகக் கருதப்படுகின்றன.

Revision as of 16:06, 22 November 2025

எம்.கே.சானு
சானு

எம். கே. சானு (அக்டோபர் 17, 1928- ஆகஸ்ட் 2, 2025) கேரள சிந்தனையாளர். பேச்சாளர். நூலாசிரியர். நாராயணகுரு உள்ளிட்டவர்களின் வாழ்க்கை வரலாறுகளை விரிவாக எழுதியவர். நாராயணகுருவின் இயக்கத்துடனும், இடதுசாரி இயக்கத்துடனும் இணைந்து செயல்பட்டவர்.

பிறப்பு, கல்வி

எம்.கே. சானு அக்டோபர் 17, 1928-l பழைய திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தில் ஆலப்புழையிலுள்ள தும்போளி என்னும் ஊரில் மிகப்பெரிய செல்வந்தக் குடும்பத்தில் எம்.சி.கேசவன், கே.பி.பவானி இணையருக்குப் பிறந்தார். இளமையிலேயே தந்தை மறைந்தார். அவருடைய வணிகம் பங்குதாரர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது. கடும் வறுமை வந்து சேர்ந்தது. பலருடைய உதவியால் படிப்பை தொடர்ந்தார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் மலையாள இலக்கியத்தில் முதல் மாணவராகத் தேறி முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

எம்.கே.சானு ரத்னம்மாவை மணந்தார்.எம்.எச், ரஞ்சித், எம்.எஸ்.கீதா, எம்.எஸ்.சீதா, எம்.எஸ்.ஹாரீஸ் ஆகியோர் வாரிசுகள்.

எம்.கே.சானு நான்கு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் கொல்லம் எஸ்.என் கல்லூரி, எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரி உட்பட வெவ்வேறு அரசுக் கல்லூரிகளில் ஆசிரியராக ஆனார். 1983-ல் பணி ஓய்வு பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

1958-ல் பள்ளி மாணவர்களுக்காக எழுதிய 'ஐந்து அறிவியல் மேதைகள்' எம்.கே.சானுவின் முதல் நூல். 1960-ல் தன் முதல் இலக்கிய விமர்சன நூலை எழுதினார், 'காற்றும் வெளிச்சமும்' என்னும் அந்நூல் அன்று பேசப்பட்ட ஒன்று.

எம்.கே.சானு இலக்கிய விமர்சனம், இலக்கிய வரலாறு என்னும் களங்களில் பல நூல்களை எழுதியிருக்கிறார். ஆனால் வாழ்க்கை வரலாற்று நூல்களுக்காகவே அவர் புகழ்பெற்றார். அவர் எழுதிய நாராயணகுரு வாழ்க்கை வரலாறு முதன்மையானது. சகோதரன் ஐயப்பன், சங்கம்புழ கிருஷ்ணபிள்ளை, எம்.கோவிந்தன், வைக்கம் முகமது பஷீர், பி.கே.பாலகிருஷ்ணன், டாக்டர் பல்பு ஆகியோர் பற்றி அவர் எழுதிய வாழ்க்கை வரலாறுகள் இன்று செவ்வியல் படைப்புகளாகக் கருதப்படுகின்றன.

பேச்சாளர்

எம்.கே.சானு மலையாளத்தின் முதன்மையான மேடைச் சொற்பொழிவாளர்களில் ஒருவர்.

அரசியல்

எம்.கே.சானு கேரளத்தின் இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து செயல்பட்டவர். கேரள முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் (புரோகமன கலா சாகித்ய சங்கம்) தலைவராக 1986 முதல் பணியாற்றினார். 1987-ல் எர்ணாகுளம் சட்டச்சபை தொகுதியில் இடதுசாரி வேட்பாளராக போட்டியிட்டு வென்றார்.

அமைப்புப்பணிகள்

இண்டர்நேஷனல் பாடி ஃபர் ஹ்யூமன் ரைட்ஸ் என்னும் அமைப்பின் செயல்பாட்டாளர். எர்ணாகுளம் முளந்துருத்தி என்னும் ஊரிலுள்ள மனநோய் காப்பகமான மித்ரம் என்னும் அமைப்பை நிறுவியவர்களில் ஒருவர்.

மறைவு

எம்.கே.சானு ஆகஸ்ட் 2, 2025 காலையில் தன் 97-வது அகவையில் மறைந்தார்.

விருதுகள்

  • கேரள சாகித்திய அக்காதமி விருது (1985) - அவதாரணம் என்ற நூலுக்காக
  • வயலார் விருது(1992) - சங்கம்புழை கிருஷ்ணபிள்ளை: நட்சத்ரங்ஙளுடெ சினேகபாஜனம் என்ற வாழ்க்கை வரலாற்று நூலுக்காக
  • பத்மபிரபா விருது (2011)
  • என். கே. சேகர் விருது (2011)
  • சாகித்ய அகாதமி விருது (2011) - பஷீர்: ஏகாந்த வீதியிலெ அவதூதன்
  • எழுத்தச்சன் விருது (2013)

நூல்கள்

  • மலையாள சாகித்திய நாயகன்மார் - குமாரனாசான்
  • இவர் லோகத்தெ சினேகிச்சவர்
  • எம். கோவிந்தன்
  • அசாந்தியில் நின்னு சாந்தியிலேக்கு - ஆசான் படனத்தின் ஒரு முகவுரை
  • மிருத்யுஞ்சயம் காவ்யஜீவிதம்
  • சங்கம்புழை கிருஷ்ணபிள்ளை: நட்சத்ரங்ஙளுடெ சினேகபாஜனம் (வாழ்க்கை வரலாறு)
  • யுக்திவாதி எம்.சி. ஜோசப் (வாழ்க்கை வரலாறு)
  • பஷீர்: ஏகாந்த வீதியிலெ அவதூதன் (வாழ்க்கை வரலாறு)
  • உறங்ஙாத்த மனீஷி (பி. கே. பாலகிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு)
  • கர்மகதி- வாழ்க்கை வரலாறு
  • ஐய்யப்ப பணிக்கரும் ஐயப்பப் பணிக்கரும்
  • குமாரனாசான்றே நளினி
  • அஸ்தமிக்காத்த வெளிச்சம்
தமிழில் கிடைப்பவை
  • நாராயணகுரு - எம்.கே.சானு
  • பஷீர் தனித்த வழியில் ஒரு ஞானி (தமிழாக்கம் யூமா வாசுகி)

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Aug-2025, 16:03:22 IST