அவிப்பலி: Difference between revisions

From Tamil Wiki
; Added info on Finalised date
Corrected typo errors;
 
Line 11: Line 11:
சிறந்தது இது என்னச் செஞ்சோறு வாய்ப்ப
சிறந்தது இது என்னச் செஞ்சோறு வாய்ப்ப
மறம்தரு வாள்அமர் என்னும் - பிறங்கு அழலுள்
மறம்தரு வாள்அமர் என்னும் - பிறங்கு அழலுள்
ஆர்உயிர் என்னும் அவி வேட்டார் ஆங்கு அ·தால்
ஆர்உயிர் என்னும் அவி வேட்டார் ஆங்கு அ.தால்
வீரியர் எய்தற்பால வீடு (184)
வீரியர் எய்தற்பால வீடு (184)
</poem>பொருள்:  பலிகொடுத்தல் என்பது யாகம் செய்தலின் ஒரு பகுதி. வெண்பா, யாகத்தையும் போரையும் ஒப்பிட்டு இத்துறையை விளக்குகிறது. செஞ்சோற்றுக் கடன் கழிப்பதே ஒழுக்கங்களில் சிறந்தது என்று உணர்ந்து போர்க்களம் என்னும் தீயிலே தம் உயிர் என்னும் அவியை இட்டுத் தம் வீரப்பண்பிற்கேற்ப வீரர் வீரமரணம் எய்தினர்.

Latest revision as of 16:05, 22 November 2025

அவிப்பலி வாகைத் திணையின் துறைகளில் ஒன்று. அரசனுக்கான செஞ்சோற்றுக் கடனைக் கழிப்பதற்கு வீரன் தன் உயிரையே பலியாகக் கொடுப்பதை கூறும் துறை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் கடுமையான வாட்போரில் அரசனுக்காகச் செஞ்சோற்றுக் கடன் கழித்தலை அன்றிப் பிறவற்றை நினைக்காத வீரர்கள் தம் உயிரைப் பலியாகக் கொடுத்தல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

வெள்வாள் அமருள் செஞ்சோறு அல்லது
உள்ளா மைந்தர் உயிர்ப்பலி கொடுத்தன்று(கொளு 8.30)

வெண்பா

சிறந்தது இது என்னச் செஞ்சோறு வாய்ப்ப
மறம்தரு வாள்அமர் என்னும் - பிறங்கு அழலுள்
ஆர்உயிர் என்னும் அவி வேட்டார் ஆங்கு அ.தால்
வீரியர் எய்தற்பால வீடு (184)

பொருள்: பலிகொடுத்தல் என்பது யாகம் செய்தலின் ஒரு பகுதி. வெண்பா, யாகத்தையும் போரையும் ஒப்பிட்டு இத்துறையை விளக்குகிறது. செஞ்சோற்றுக் கடன் கழிப்பதே ஒழுக்கங்களில் சிறந்தது என்று உணர்ந்து போர்க்களம் என்னும் தீயிலே தம் உயிர் என்னும் அவியை இட்டுத் தம் வீரப்பண்பிற்கேற்ப வீரர் வீரமரணம் எய்தினர்.

உசாத்துணை

வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்

‎

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Jul-2025, 04:01:44 IST