ஆளெறி பிள்ளை: Difference between revisions
; Added info on Finalised date |
Corrected typo errors; |
||
| Line 1: | Line 1: | ||
ஆளெரி பிள்ளை [[கரந்தைத் திணை]]யின் துறைகளில் ஒன்று. இளங்கன்று பயம் | ஆளெரி பிள்ளை [[கரந்தைத் திணை]]யின் துறைகளில் ஒன்று. இளங்கன்று பயம் அறியாது'. இளமை, வளமையை உடையது. பிள்ளைமைத் தன்மையுடைய மறவன் (பிள்ள) தன்னுடைய வளமை சான்ற வீரம் துணையாக மறவர் பிறரை எறிகின்றான் (வீழ்த்துகின்றான்) என்பதால், இத்துறை ஆளெறி பிள்ளை என்னும் பெயரைப் பெற்றது. | ||
==விளக்கம்== | ==விளக்கம்== | ||
======[[புறப்பொருள் வெண்பாமாலை]]====== | ======[[புறப்பொருள் வெண்பாமாலை]]====== | ||
Revision as of 16:05, 22 November 2025
ஆளெரி பிள்ளை கரந்தைத் திணையின் துறைகளில் ஒன்று. இளங்கன்று பயம் அறியாது'. இளமை, வளமையை உடையது. பிள்ளைமைத் தன்மையுடைய மறவன் (பிள்ள) தன்னுடைய வளமை சான்ற வீரம் துணையாக மறவர் பிறரை எறிகின்றான் (வீழ்த்துகின்றான்) என்பதால், இத்துறை ஆளெறி பிள்ளை என்னும் பெயரைப் பெற்றது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் பின்னிட்டு ஓடி வருகின்ற கரந்தை மறவரை, மேலும் ஓடாதபடிக்கு எதிர்சென்று தடுத்து, இகழ்து கூறி, வெட்சி மறவர்கள் அத்துணைப் பேர்க்கும் தான் ஒருவன் மட்டுமே அஞ்சாது நின்று, அவர்களை வெட்டி வீழ்த்திய செய்தியைக் கூறுவது, ஆளெறி பிள்ளைஎன்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
வருவாரை எதிர் விலக்கி
ஒருதான் ஆகித் ஆள் எறிந்தன்று
(கொளு.2.8 )
வெண்பா
பிள்ளைக் கடுப்பப் பிணம் கறங்க ஆள்எறிந்து
கொள்ளைகொள ஆயம் தலைக் கொண்டார் - எள்ளிப்
பொருது அழிந்து மீளவும் பூங்கழலான் மீளான்
ஒருதனியே நின்றான் உளன் (28)
பொருள்: பகைவராலே கொள்ளை கொள்ளப்பட்ட ஆநிரையினை அடைந்த கரந்தை மறவர்கள், அவருடன் போரிட்டு, வலியழிந்தவராகிக் களத்தினின்று பின்வாங்கவும், அழகிய வீரக்கழலினனாகிய ஒருவன் மட்டும், தான் மீண்டு போகாமல், போகும் வீரரின் செயலினை இகழ்ந்துரைத்தவனாக, பின் வருவதை அறியாது செயற்படுகின்ற சிறுபிள்ளையினைப் போலத், தான் ஒற்றைத் தனியனாகவே களத்தில் நின்று, வீழ்ந்த பகைவரது பிணங்கள் மிகும்படியாக, அவர்களை வெட்டி வீழ்த்தினான். அதனால், அவன், அனைவர் உள்ளத்திலும் உள்ளவனானான்.
உசாத்துணை
கரந்தைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-May-2025, 10:15:54 IST