தமிழழகன் (கவி ஆளுமை): Difference between revisions
; Added info on Finalised date |
Corrected typo errors; |
||
| Line 1: | Line 1: | ||
[[File:Tamil Azhagan.jpg|thumb|கவிஞர் தமிழழகன்]] | [[File:Tamil Azhagan.jpg|thumb|கவிஞர் தமிழழகன்]] | ||
தமிழழகன் (வே. தமிழழகன்; சந்தக்கவிமணி தமிழழகன்; சந்தக்கவிமணி தமிழழகனார்; திருமந்திரம் சண்முகசுந்தரக் கவிராயர்; வே. சண்முகசுந்தரம்) (ஏப்ரல் 21, 1949 | தமிழழகன் (வே. தமிழழகன்; சந்தக்கவிமணி தமிழழகன்; சந்தக்கவிமணி தமிழழகனார்; திருமந்திரம் சண்முகசுந்தரக் கவிராயர்; வே. சண்முகசுந்தரம்) (ஏப்ரல் 21, 1949 - அக்டோபர் 02, 2015) கவிஞர், எழுத்தாளர், திரைப்பாடலாசிரியர். திருச்சி, சென்னை வானொலிகளில் நிலையக் கலைஞராகப் பணியாற்றினார். | ||
== பிறப்பு, கல்வி == | == பிறப்பு, கல்வி == | ||
| Line 13: | Line 13: | ||
====== தொடக்கம் ====== | ====== தொடக்கம் ====== | ||
தமிழழகன் பள்ளியிலும் பயிலும்போதே செய்யுள்கள் இயற்றினார். முதல் கவிதை, ‘குழந்தை | தமிழழகன் பள்ளியிலும் பயிலும்போதே செய்யுள்கள் இயற்றினார். முதல் கவிதை, ‘குழந்தை இன்பம்' நவம்பர் 1946-ல், [[கலைமகள் (இதழ்)|கலைமகள்]] தீபாவளி மலரில் வெளியானது. அதே நவம்பர் 1946-ல், 'என் குழந்தை' என்னும் கவிதை [[குயில்]] இதழில் வெளியானது. தொடர்ந்து தமிழின் முன்னணி இதழ்கள் பலவற்றிலும் கவிதைகள் எழுதினார். | ||
====== செய்யுள் முயற்சிகள் ====== | ====== செய்யுள் முயற்சிகள் ====== | ||
| Line 19: | Line 19: | ||
====== கவிதை நூல்கள் ====== | ====== கவிதை நூல்கள் ====== | ||
தமிழழகனின் முதல் கவிதைத் தொகுப்பு ‘தமிழழகன் | தமிழழகனின் முதல் கவிதைத் தொகுப்பு ‘தமிழழகன் கவிதைகள்' 1960-ல் வெளியானது. இதற்கு [[மு. வரதராசன்]] முன்னுரை எழுதிச் சிறப்பித்தார். தொடர்ந்து சில கவிதை நூல்களும், கவிதை நாடக நூல்களும் வெளியாகின. சிலேடை பாடுவதில் தேர்ந்தவர். ஸ்ரீ காமாட்சி அலங்காரம் உள்ளிட்ட பலவகை இசை நாடகங்களையும், கவிதை நாடகங்களையும் இயற்றினார். தமிழழகனின் ‘ஒளியைத் தேடி' நூல் சென்னை பல்கலைக்கழகத்தின் பி.லிட் பட்டப் படிப்புக்கு பாட நூலாக வைக்கப்பட்டது. | ||
====== சிறார் பங்களிப்புகள் ====== | ====== சிறார் பங்களிப்புகள் ====== | ||
| Line 25: | Line 25: | ||
====== மொழிபெயர்ப்புகள் ====== | ====== மொழிபெயர்ப்புகள் ====== | ||
தமிழழகன் கவிதைகளில் சில ஆங்கிலம் மற்றும் ரஷிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. [[சாகித்ய அகாதெமி]] ஆண்டுதோறும் வெளியிடும் | தமிழழகன் கவிதைகளில் சில ஆங்கிலம் மற்றும் ரஷிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. [[சாகித்ய அகாதெமி]] ஆண்டுதோறும் வெளியிடும் 'பாரதிய கவிதா' தொகுப்பில் தமிழழகனின் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகின. | ||
தமிழழகன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளையும், அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட வெண்பாக்களையும் இயற்றினார். 300 வகையான சித்திரக்கவிகளை இயற்றினார். | தமிழழகன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளையும், அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட வெண்பாக்களையும் இயற்றினார். 300 வகையான சித்திரக்கவிகளை இயற்றினார். 'எதிர் [[மாலை மாற்று]]' போன்ற புதிய வகைச் சித்திரக்கவிகளை அறிமுகப்படுத்தினார். தமிழழகனின் படைப்புகள் அச்சாகாமல் பல நூற்றுக்கணக்கில் உள்ளதாக அறியப்படுகிறது. | ||
== ஊடகம் == | == ஊடகம் == | ||
====== திரைப்பாடல்கள் ====== | ====== திரைப்பாடல்கள் ====== | ||
தமிழழகன் திரைப்படங்களுக்குப் பங்களித்தார். தமிழழகனின் திரைப் பாடல்கள் | தமிழழகன் திரைப்படங்களுக்குப் பங்களித்தார். தமிழழகனின் திரைப் பாடல்கள் 'இந்திரா என் செல்வம்', 'ராஜ பக்தி' போன்ற திரைப்படங்களில் இடம்பெற்றன. | ||
====== நாடகம் ====== | ====== நாடகம் ====== | ||
வானொலியில் தமிழழகனின் | வானொலியில் தமிழழகனின் 'முருகா சரணம்', 'சாகுந்தல சகிதம்' போன்ற நாடகங்கள் வெளியாகின. | ||
====== இசைத்தட்டு ====== | ====== இசைத்தட்டு ====== | ||
Revision as of 16:03, 22 November 2025

தமிழழகன் (வே. தமிழழகன்; சந்தக்கவிமணி தமிழழகன்; சந்தக்கவிமணி தமிழழகனார்; திருமந்திரம் சண்முகசுந்தரக் கவிராயர்; வே. சண்முகசுந்தரம்) (ஏப்ரல் 21, 1949 - அக்டோபர் 02, 2015) கவிஞர், எழுத்தாளர், திரைப்பாடலாசிரியர். திருச்சி, சென்னை வானொலிகளில் நிலையக் கலைஞராகப் பணியாற்றினார்.
பிறப்பு, கல்வி
வே. சண்முகசுந்தரம் என்னும் இயற்பெயர் கொண்ட தமிழழகன், ஏப்ரல் 21, 1949 அன்று தூத்துக்குடியில், வேலு செட்டியார் - வள்ளியம்மை இணையருக்குப் பிறந்தார். பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றார். புலவர் பட்டம் பெறுவதற்காக இலக்கண, இலக்கியங்களை முறையாகப் பயின்றார்.
சோதிடம், வானநூல், ஆருடம், எண் கணிதம் கற்றார். கவிதையின் வகைகளான ஆசுகவி, சித்திரக் கவி, மதுரகவி, வித்தாரக் கவி என நான்கிலும் தேர்ச்சி பெற்றார்.
தனி வாழ்க்கை
தமிழழகன் எந்தப்பணிக்கும் செல்லவில்லை. சுதந்திரப் படைப்பாளியாகச் செயல்பட்டார். மணமானவர். மனைவி: நாகரத்தினம் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். இவர்களுக்கு ஐந்து மகன்கள்.
இலக்கிய வாழ்க்கை
தொடக்கம்
தமிழழகன் பள்ளியிலும் பயிலும்போதே செய்யுள்கள் இயற்றினார். முதல் கவிதை, ‘குழந்தை இன்பம்' நவம்பர் 1946-ல், கலைமகள் தீபாவளி மலரில் வெளியானது. அதே நவம்பர் 1946-ல், 'என் குழந்தை' என்னும் கவிதை குயில் இதழில் வெளியானது. தொடர்ந்து தமிழின் முன்னணி இதழ்கள் பலவற்றிலும் கவிதைகள் எழுதினார்.
செய்யுள் முயற்சிகள்
தமிழழகன் சந்தக் கவிதைகளை யாப்பு வடிவம் மாறாமல் எழுதும் ஆற்றல் பெற்றார். திரிபு, இயைபு, மடக்கு, சிலேடை ஆகிய வகைமைகளிலும், வெண்பா, கட்டளைக் கலித்துறை, சிந்து வகைமைகளிலும் பல நூற்றுக்கணக்கான கவிதைகளை இயற்றினார். திருமந்திரம் சண்முக சுந்தரக் கவிராயர் என்ற புனை பெயரில் பல கவிதைகளை எழுதினார்.
கவிதை நூல்கள்
தமிழழகனின் முதல் கவிதைத் தொகுப்பு ‘தமிழழகன் கவிதைகள்' 1960-ல் வெளியானது. இதற்கு மு. வரதராசன் முன்னுரை எழுதிச் சிறப்பித்தார். தொடர்ந்து சில கவிதை நூல்களும், கவிதை நாடக நூல்களும் வெளியாகின. சிலேடை பாடுவதில் தேர்ந்தவர். ஸ்ரீ காமாட்சி அலங்காரம் உள்ளிட்ட பலவகை இசை நாடகங்களையும், கவிதை நாடகங்களையும் இயற்றினார். தமிழழகனின் ‘ஒளியைத் தேடி' நூல் சென்னை பல்கலைக்கழகத்தின் பி.லிட் பட்டப் படிப்புக்கு பாட நூலாக வைக்கப்பட்டது.
சிறார் பங்களிப்புகள்
தமிழழகன், குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க பங்காற்றினார். சிறார்களுக்காக பல கதை, கவிதை, நாடகங்களை எழுதினார். வானொலியிலும் கவிதை, நாடகம் என பங்களித்தார்.
மொழிபெயர்ப்புகள்
தமிழழகன் கவிதைகளில் சில ஆங்கிலம் மற்றும் ரஷிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. சாகித்ய அகாதெமி ஆண்டுதோறும் வெளியிடும் 'பாரதிய கவிதா' தொகுப்பில் தமிழழகனின் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகின.
தமிழழகன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளையும், அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட வெண்பாக்களையும் இயற்றினார். 300 வகையான சித்திரக்கவிகளை இயற்றினார். 'எதிர் மாலை மாற்று' போன்ற புதிய வகைச் சித்திரக்கவிகளை அறிமுகப்படுத்தினார். தமிழழகனின் படைப்புகள் அச்சாகாமல் பல நூற்றுக்கணக்கில் உள்ளதாக அறியப்படுகிறது.
ஊடகம்
திரைப்பாடல்கள்
தமிழழகன் திரைப்படங்களுக்குப் பங்களித்தார். தமிழழகனின் திரைப் பாடல்கள் 'இந்திரா என் செல்வம்', 'ராஜ பக்தி' போன்ற திரைப்படங்களில் இடம்பெற்றன.
நாடகம்
வானொலியில் தமிழழகனின் 'முருகா சரணம்', 'சாகுந்தல சகிதம்' போன்ற நாடகங்கள் வெளியாகின.
இசைத்தட்டு
தமிழழகனின் பாடல்களை டி.எம்.எஸ். உள்ளிட்ட பலர் பாடினர். அவை இசைத்தட்டுக்களாக வெளிவந்தன.
பொறுப்பு
- திருவொற்றியூர் பாரதி பாசறை நிறுவனர், தலைவர்
- பாரதி கலைக்கழகத்தின் துணைத்தலைவர்
- தமிழ்க்கவிஞர் பெருமன்றத்தின் துணைச் செயலர்
- தமிழ்க்கவிஞர் பெருமன்றத்தின் கௌரவத் தலைவர்
விருதுகள்
- இந்திய அரசின் ஒலிபரப்புத்துறை நடத்திய இந்திய அளவிலான கவிதைப் போட்டியில் தமிழில் முதல் பரிசு
- தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் அளித்த பாராட்டு, பரிசு
- தமிழக அரசின் பாரதிதாசன் விருது
- சந்தக்கவிமணி
- கவிமாமணி
- தமிழ் இலக்கியக் காவலர்
- தமிழ்ச்சுடர்
- தமிழ்க் காவலர்
- கவிஞானி
- தீம்பொழில் பாவலர்
- பாரதி பரம்பரைக் கவிஞர்
- பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்
மறைவு
தமிழழகன் அக்டோபர் 02, 2015 அன்று, தனது 66-ம் வயதில் காலமானார்.
மதிப்பீடு
தமிழழகனின் கவிதைகள் எளிமையான நடையில், இனிய சந்தங்களில் இயற்றப்பட்டவை. கவிதைகளை இயற்றப் பல்வேறு யாப்பு வடிவங்களைக் கையாண்டார். சிறார் கவிதைகளின் அமைப்பில் பல கவிதைகளை எழுதினார். புதுப்புது சந்தங்களிலும், வெண்பா, அந்தாதி போன்ற யாப்பு வடிவங்களிலும், சித்திர வடிவங்களிலும் பல கவிதைகளை எழுதினார். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சந்தக் கவிதைகளை எழுதியவராக அறியப்படுகிறார்
நூல்கள்
அச்சில் வந்தவை
- தமிழழகன் கவிதைகள்
- மழலை அமுதம் (சிறார் கவிதைகள்)
- பூ மத்தாப்பு (குழந்தைப் பாடல்கள்)
- ஒளியைத் தேடி
- இராம கவிதை (கவிதை நாடகம்)
- காமாட்சி அந்தாதி
- காமாட்சி திருமுறை வெண்பாத்திரட்டு
- துளித்துளி (சின்னஞ்சிறு கவிதைகள்)
- காவிய ஓவியம் (கம்பராமயணக் கவிதை நாடகம்)
அச்சாகமல் உள்ளவை
- அன்னை அபிராமி (ஆனந்தவிகடன் தொடர்)
- வைகறை கானம் (கவிதைகள்)
- அரங்கேற்றம் (கவிதைகள்)
- பட்டுச்சிட்டு (சிறுவர் பாடல்கள்)
- இசைப்பாடல்கள்
- குட்டிக் கதைகள்
- இசை நாடகங்கள்
- கவிதை நாடகங்கள்
- அறிவுரை வெண்பாக்கள்
- கந்தர் கட்டளை
- கட்சிக் கலம்பகம்
- திருப்போரூர் மும்மணி மாலை
- மகாலட்சுமி மாலை
- மகாலட்சுமி அந்தாதி
- காமாட்சி அலங்காரம்
- இலக்கியக் கட்டுரைகள்
- வரிப்பாடல்கள்
மற்றும் பல
உசாத்துணை
- தமிழழகன் இணையதளம்
- தமிழழகன் வாழ்க்கைக் குறிப்பு
- தென்றல் இதழ் அஞ்சலிக் குறிப்பு
- தமிழழகன் ஃபேஸ்புக் குறிப்பு
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Dec-2024, 19:24:01 IST