முப்பேர் நாகனார்: Difference between revisions

From Tamil Wiki
Logamadevi (talk | contribs)
No edit summary
; Added info on Finalised date
Line 31: Line 31:


{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|31-Mar-2025, 10:05:51 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 10:34, 31 March 2025

முப்பேர் நாகனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

முப்பேர் நாகனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். முப்பேர் என்னும் ஊரில் பிறந்தவர். திருவாடனையை அடுத்துள்ள மூப்பையூரே சங்க காலத்து முப்பேர் என்ற கருத்து ஆய்வாளர்கள் சிலரால் முன்வைக்கப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

முப்பேர் நாகனார் பாடிய பாடல் நற்றிணையில் 272-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. கார்காலத்தில் திரும்பி வருவேன் என்று சொல்லி பொருளீட்டுவதற்காக கிளம்பி தலைவன், கார்காலம் கடந்தும் வராமையால் ஏற்பட்ட பிரிவினால் தான் அனுபவிக்கும் துயரை தோழிக்கு தலைவி உரைப்பதாக பாலைத் திணையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • முதுமையில் இழந்த இளமை பருவத்தை அடைய விரும்பினாலும் இயலாது. ஒருவரின் ஆயுட்காலத்தை அறிஞர்களாலும் அறிவது இயலாது.
  • ஆடவர் பொருளீட்ட செல்லும் வழியானது, காய்கள் வெடித்து ஒலிக்கும் கள்ளிச் செடிகள் நிறைந்த பாதையாகும். கள்ளிச் செடியின் காய்ந்து போன கிளையில் அமர்ந்தபடி ஆண் புறாவானது பெண் புறாவைத் தன்னுடன் வரும்படி அழைக்கும்.
  • மழைக்காலத்தில் சிறு செண்பகம் மலர்கள் பூத்திருக்கும். மகளிர்,சிறு செண்பக மலர்களாலான மாலையைத் தமது சந்தனம் அரைத்துத் தடவிய மார்பின் மேல் பதியும்படி அணிந்து கொள்வர்.

பாடல் நடை

நற்றிணை - 314

  • திணை: பாலை கூற்று:பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது

முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்;
வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை;
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் அலரி
நறுங் காழ் ஆரமொடு மிடைந்த மார்பில்,
குறும் பொறிக் கொண்ட கொம்மை அம் புகர்ப்பின்
கருங் கண் வெம் முலை ஞெமுங்கப் புல்லிக்
கழிவதாக, கங்குல்' என்று
தாம் மொழி வன்மையின் பொய்த்தனர், வாழிய-
நொடி விடுவன்ன காய் விடு கள்ளி
அலங்கல்அம் பாவை ஏறி, புலம்பு கொள்
புன் புறா வீழ் பெடைப் பயிரும்
என்றூழ் நீளிடைச் சென்றிசினோரே!

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Mar-2025, 10:05:51 IST