மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்: Difference between revisions
Logamadevi (talk | contribs) No edit summary |
; Added info on Finalised date |
||
| Line 28: | Line 28: | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|01-Apr-2025, 11:34:16 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 12:34, 1 April 2025
மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். குமரன் என்னும் இயற்பெயர் உடையவர். சேந்தன் என்பாரின் மகன். இவர் பிறந்த மருங்கூர் திருவாடனையை அடுத்துள்ள மருங்கூராக இருக்கலாம் என கருதப்படுகிறது.
இலக்கிய வாழ்க்கை
மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார் பாடிய பாடல் நற்றிணையில் 289-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. கார்காலம் வந்தபின்பும் பொருளீட்டச் சென்ற தலைவன் திரும்பி வராமையால் தனக்கு ஏற்படும் துன்பத்தை தோழியிடம் தலைவி உரைப்பதாக முல்லைத் திணையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- மேகம் கடல் நீரை உறிஞ்சி வந்து மழையை பொழியச் செய்கிறது என மக்கள் நம்பினர்.
- பசு மேய்க்கும் ஆயர்கள் பெரிய மரத்தின் வேர்க்கட்டை பகுதியில் அடுப்பு அமைத்து தீ மூட்டி சோறு பொங்குவர்.
- உவமை: தலைவனை பிரிந்த தலைவியின் துன்பம், ஆயர்களால் அமைக்கப்பட்ட அடுப்பு நெருப்பில் எரிந்து அழியாது இருக்கும் பெருமரத்தின் வேர்க்கட்டை பகுதிக்கு ஏற்பட்ட காயத்தை போலுள்ளது.
பாடல் நடை
நற்றிணை - 289
- திணை: முல்லை கூற்று: பிரிவிடைப் பருவங்கண்டு சொல்லியது.
அம்ம வாழி, தோழி!-காதலர்,
நிலம் புடைபெயர்வதாயினும், கூறிய
சொல் புடைபெயர்தலோ இலரே; வானம்
நளி கடல் முகந்து, செறிதக இருளி,
கனை பெயல் பொழிந்து, கடுங் குரல் பயிற்றி,
கார் செய்து, என் உழையதுவே; ஆயிடை,
கொல்லைக் கோவலர் எல்லி மாட்டிய
பெரு மர ஒடியல் போல,
அருள் இலேன் அம்ம; அளியேன் யானே
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Apr-2025, 11:34:16 IST