குப்பைக் கோழியார்: Difference between revisions
Logamadevi (talk | contribs) No edit summary |
; Added info on Finalised date |
||
| Line 28: | Line 28: | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|12-Nov-2024, 14:12:27 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 01:04, 13 November 2024
குப்பைக் கோழியார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
குப்பைக் கோழியார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. எனவே இவரது பாடலில் இடம்பெற்றுள்ள 'குப்பைக் கோழித் தனிப்போர் போல’ என்ற உவமையின் சிறப்பை முன்னிட்டு, அதையே புலவரின் பெயராக கொண்டனர்.
இலக்கிய வாழ்க்கை
குப்பைக் கோழியார் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் 305-வது பாடலாக அமைந்துள்ளது. தலைவனோடு உடன் போக முடியாமையினால் தான் அடையும் துன்பத்தை தோழிக்கு உணர்த்தும் பொருட்டு தலைவி புலம்புவதாக அமைந்துள்ள பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
தலைவனை பிரிந்ததால் தனக்கு ஏற்பட்டுள்ள துன்ப நோயைத் தோழிக்கு உணர்த்தும் பொருட்டு தலைவி கூற்றாக வரும் பாடல்.
- அவரைக் கண்ட கண்களால் ஏற்பட்ட காமத்தினால் உண்டான தீயினும் கொடிய நோயானது எலும்புகள் உருகும்படி என்னை மெலியச் செய்கிறது.
- என்னால் அவரை சென்று காணவும் இயலவில்லை. அவரும் என்னை வந்து பார்க்கவில்லை.
- உவமை: விலக்கி விடுவதற்கு ஆட்களற்று குப்பை மேட்டில் மரணிக்கும் வரை ஒன்றுடனொன்று போரிட்டு கொள்ளும் சேவல் கோழிகளை போல துன்பத்தால் வருந்தி நிற்கிறேன்.
பாடல் நடை
குறுந்தொகை - 305
மருதத் திணை துறை: தோழி அறத்தோடு நிற்பாளாக, தனது ஆற்றாமை தோன்றத் தலைமகள் தன்னுள்ளே கூறியது
கண் தர வந்த காம ஒள் எரி
என்பு உற நலியினும், அவரொடு பேணிச்
சென்று, நாம் முயங்கற்கு அருங் காட்சியமே
வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே;
உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார்
குப்பைக் கோழித் தனிப் போர் போல,
விளிவாங்கு விளியின் அல்லது,
களைவோர் இலை-யான் உற்ற நோயே.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Nov-2024, 14:12:27 IST