அருமைநாயகம் சட்டம்பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
Jeyamohan (talk | contribs)
No edit summary
Jeyamohan (talk | contribs)
No edit summary
Line 1: Line 1:
[[File:Pannaiyar+001.jpg|thumb|அருமைநாயகம் சட்டம்பிள்ளை]]
[[File:Pannaiyar+001.jpg|thumb|அருமைநாயகம் சட்டம்பிள்ளை]]
[[File:Screenshot (431).png|thumb|ஏசு ரட்சகர் ஆலயம் பிரகாசபுரம் மூக்குப்பீறி]]
[[File:Screenshot (431).png|thumb|ஏசு ரட்சகர் ஆலயம் பிரகாசபுரம் மூக்குப்பீறி]]
அருமைநாயகம் சட்டம்பிள்ளை (அக்டோபர் 24, 1823 - 1919) (அருமைநாயகம் சட்டாம்பிள்ளை, ரப்பி அருமைநாயகம்) கிறிஸ்தவ மதபோதகர்.  
அருமைநாயகம் சட்டம்பிள்ளை (அக்டோபர் 24, 1823 - 1919) (அருமைநாயகம் சட்டாம்பிள்ளை, ரப்பி அருமைநாயகம்) கிறிஸ்தவ மதபோதகர். இந்து கிறிஸ்தவம் என்னும் கருத்துருவை உருவாக்கியவர். இந்தியாவுக்குரிய கிறிஸ்தவம் என்று அதற்குப் பொருள். ஐரோப்பியக் கிறிஸ்தவம் ஐரோப்பியப் பண்பாட்டுக்கு ஏற்ப திரிபுபட்டது என்றும், கிறிஸ்தவத்தை எபிரேய மொழி மூலத்தில் இருந்தே அறிந்துகொண்டு இந்தியப்பண்பாட்டுக்கு ஏற்ப வளர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் அருமைநாயகம் சொன்னார். இந்திய தேசிய இயக்கம் தொடக்கநிலையில் இருந்த காலகட்டத்திலேயே அன்னிய அரசியலாதிக்கத்துக்கு எதிரான பார்வையை முன்னெடுத்த முன்னோடி. மதநம்பிக்கையை பிரிட்டிஷார் அரசியலாதிக்கத்துக்குப் பயன்படுத்துவதை எதிர்த்தார். 


== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
Line 41: Line 41:


== ஐரோப்பிய மறுப்பு ==
== ஐரோப்பிய மறுப்பு ==
அருமைநாயகம் ஐரோப்பியர் கிறிஸ்தவத்தை போதனை செய்யும் தகுதி கொண்டவர்கள்தானா என்னும் கேள்வியை தொடர்ச்சியாக எழுப்பினார். அவர்களின் நோக்கம் ஆதிக்கம் மட்டுமே, மக்களின் மீட்பு அல்ல என்று வாதிட்டார். கிறிஸ்தவர்கள் என்று சொல்லப்படும் ஐரோப்பியர் இனவாதிகளாகவும், ஒழுக்கமற்றவர்களாகவும் இருந்தனர். எஸ்.பி.ஜி உள்ளிட்ட சபைகள் அடிமைகளை வைத்திருந்தன.  சட்டாம்பிள்ளை ஜான் பார்க்கர், வில்லிய ஹோவிட், ராபர்ட் சௌதே, அபே டுபாய்ஸ் போன்றவர்களின் நூல்களை குறிப்பிட்டு ஆங்கிலோ சாக்ஸன் இனம் செய்த ஆதிக்கம், அழிவு மற்றும் ஒழுக்கமீறல்களை விளக்கினார். முதன்மையாக சட்டாம்பிள்ளை ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்தாலும் அமெரிக்கர், ஐரோப்பியர் அனைவருமே பைபிளின் பாதையில் இருந்து வழுவியவர்களே என்று வாதிட்டார்.
அருமைநாயகம் ஐரோப்பியர் கிறிஸ்தவத்தை போதனை செய்யும் தகுதி கொண்டவர்கள்தானா என்னும் கேள்வியை தொடர்ச்சியாக எழுப்பினார். அவர்களின் நோக்கம் ஆதிக்கம் மட்டுமே, மக்களின் மீட்பு அல்ல என்று வாதிட்டார். கிறிஸ்தவர்கள் என்று சொல்லப்படும் ஐரோப்பியர் இனவாதிகளாகவும், ஒழுக்கமற்றவர்களாகவும் இருந்தனர். எஸ்.பி.ஜி உள்ளிட்ட சபைகள் அடிமைகளை வைத்திருந்தன.  சட்டாம்பிள்ளை ஜான் பார்க்கர், வில்லிய ஹோவிட், ராபர்ட் சௌதே, அபே டுபாய்ஸ் போன்றவர்களின் நூல்களை குறிப்பிட்டு ஆங்கிலோ சாக்ஸன் இனம் செய்த ஆதிக்கம், அழிவு மற்றும் ஒழுக்கமீறல்களை விளக்கினார். முதன்மையாக அருமைநாயகம் சட்டாம்பிள்ளை ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்தாலும் அமெரிக்கர், ஐரோப்பியர் அனைவருமே பைபிளின் பாதையில் இருந்து வழுவியவர்களே என்று வாதிட்டார்.


ஆங்கிலப்பெண்கள் ஒழுக்கமற்றவர்கள் என சட்டாம்பிள்ளை கூறினார். மிக எளிதாக விவாகரத்து செய்து மறுமணம் புரிவதை அவர் ஏற்கவில்லை, கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்கலாகாது என்பதே பைபிளின் தரப்பு என்று அவர் சொன்னார்.  ஆங்கில கிறிஸ்தவர்கள் சாதாரணமாக விபச்சாரம் செய்வதையும், அதன் வழியாக ஆங்கில இந்தியர் என்னும் இனமே உருவாகியிருப்பதையும், ஆங்கிலிகன் திருச்சபை அதை இயல்பாக ஏற்பதையும் கண்டித்தார். ஆங்கிலேயர் கடைப்பிடிப்பது உண்மையான கிறிஸ்தவம் அல்ல, அது ரோமாபுரி அரசர்களான கான்ஸ்டண்டைன், தியோடரஸ் போன்றவர்கள் தங்கள் ஆதிக்கம் மற்றும் ஒழுக்கமீறல்களை நியாயப்படுத்தும் பொருட்டு உருவாக்கிய கிறிஸ்தவம் என்றார். ஆங்கிலேயரால் தங்கள் ஆதிக்கத்தின்பொருட்டு திரிக்கப்பட்ட பைபிளை கடந்து உண்மையான ஹீப்ரு பைபிளை அறிந்து ஒழுகுவது இந்தியர்களின் கடமை என்று அவர் குறிப்பிட்டார்.
ஆங்கிலப்பெண்கள் ஒழுக்கமற்றவர்கள் என சட்டாம்பிள்ளை கூறினார். மிக எளிதாக விவாகரத்து செய்து மறுமணம் புரிவதை அவர் ஏற்கவில்லை, கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்கலாகாது என்பதே பைபிளின் தரப்பு என்று அவர் சொன்னார்.  ஆங்கில கிறிஸ்தவர்கள் சாதாரணமாக விபச்சாரம் செய்வதையும், அதன் வழியாக ஆங்கில இந்தியர் என்னும் இனமே உருவாகியிருப்பதையும், ஆங்கிலிகன் திருச்சபை அதை இயல்பாக ஏற்பதையும் கண்டித்தார். ஆங்கிலேயர் கடைப்பிடிப்பது உண்மையான கிறிஸ்தவம் அல்ல, அது ரோமாபுரி அரசர்களான கான்ஸ்டண்டைன், தியோடரஸ் போன்றவர்கள் தங்கள் ஆதிக்கம் மற்றும் ஒழுக்கமீறல்களை நியாயப்படுத்தும் பொருட்டு உருவாக்கிய கிறிஸ்தவம் என்றார்.  
 
ஆங்கிலேயரால் தங்கள் ஆதிக்கத்தின்பொருட்டு திரிக்கப்பட்ட பைபிளை கடந்து உண்மையான ஹீப்ரு பைபிளை அறிந்து ஒழுகுவது இந்தியர்களின் கடமை என்று அவர் குறிப்பிட்டார்.  


== இந்திய கிறிஸ்தவ இறையியல் ==
== இந்திய கிறிஸ்தவ இறையியல் ==
அரசு நடவடிக்கைக்குப்பின் அருமைநாயகம் எஸ்.பி.ஜியில் இருந்து முழுமையாக விலகினார். தன் கருத்துக்களை எதிர்நிலைபாடு இல்லாமல் விரிவாக எழுத முற்பட்டார். தன் இறையியல் கருத்துக்களை தொகுத்து முன்வைத்துச் சொற்பொழிவுகள் ஆற்றினார். அருமைநாயகம் யூத பைபிள் உட்பட பைபிளின் எல்லா வடிவங்களையும் மூலமொழிகளிலேயே வாசித்திருந்தமையால் கால்டுவெல் உள்ளிட்டோருக்கு இல்லாத ஆழ்ந்த இறையியல் அறிவு கொண்டிருந்தார். அதனடிப்படையில் தன் கொள்கைகளை அவர் வகுத்துக்கொண்டார்.  
கால்டுவெல்லுக்கு எதிரான போராட்டத்தின் விளைவான அரசு நடவடிக்கைக்குப்பின் அருமைநாயகம் எஸ்.பி.ஜியில் இருந்து முழுமையாக விலகினார். தன் கருத்துக்களை எதிர்நிலைபாடு இல்லாமல் விரிவாக எழுத முற்பட்டார். தன் இறையியல் கருத்துக்களை தொகுத்து முன்வைத்துச் சொற்பொழிவுகள் ஆற்றினார். அருமைநாயகம் யூத பைபிள் உட்பட பைபிளின் எல்லா வடிவங்களையும் மூலமொழிகளிலேயே வாசித்திருந்தமையால் கால்டுவெல் உள்ளிட்டோருக்கு இல்லாத ஆழ்ந்த இறையியல் அறிவு கொண்டிருந்தார். அதனடிப்படையில் தன் கொள்கைகளை அவர் வகுத்துக்கொண்டார்.  


அருமைநாயகத்தின் இறையியல் கருத்துக்களை இவ்வாறாகச் சுருக்கிச் சொல்லலாம்.
அருமைநாயகத்தின் இறையியல் கருத்துக்களை இவ்வாறாகச் சுருக்கிச் சொல்லலாம்.


* யூதபைபிள் எனப்படும் எபிரேய பைபிளே வேதாகமத்தின் தொன்மையான முதல்வடிவம். அதிலிருந்து தொடர்ச்சியாக பைபிள் பலவாறாக மாற்றப்பட்டுள்ளது. வழிபாடுகள் சார்ந்து யூதபைபிளில் உள்ள நடைமுறைகளையே பின்பற்றவேண்டும். சனிக்கிழமை, மாதப்பிறப்பு, பஸ்கா முதலிய நாட்களிலேயே வழிபடவேண்டும். வழிபாடுகள் யூதபைபிளில் உள்ளபடி நிகழவேண்டும்.  
* யூதபைபிள் எனப்படும் எபிரேய பைபிளே வேதாகமத்தின் தொன்மையான முதல்வடிவம். அதிலிருந்து தொடர்ச்சியாக பைபிள் பலவாறாக மாற்றப்பட்டுள்ளது. அந்தந்த பண்பாட்டுக்கு ஏற்ப அந்த மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. அந்த மாற்றப்பட்ட வடிவத்தை நாம் பின் தொடரக்கூடாது. மூலபைபிளை நம் பண்பாட்டுடன் இணைத்து வளர்த்தெடுக்கவேண்டும், நமக்கான கிறிஸ்தவத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.
* வழிபாடுகள் சார்ந்து யூதபைபிளில் உள்ள நடைமுறைகளையே பின்பற்றவேண்டும். சனிக்கிழமை, மாதப்பிறப்பு, பஸ்கா முதலிய நாட்களிலேயே வழிபடவேண்டும். வழிபாடுகள் யூதபைபிளில் உள்ளபடி நிகழவேண்டும்.
* இந்து என்பது சிந்து நதியில் இருந்து உருவான சொல். அது இந்திய நிலத்தை குறிப்பிடுகிறது. ஒரு மதத்தை அல்ல. அப்படி ஒரு மதமும் இல்லை. இந்திய நிலத்திலுள்ள பண்பாடு இந்துப் பண்பாடு அல்ல. தொன்மையான இந்திய நிலப் பண்பாடுதான். ஆகவே இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கை சார்ந்த நடைமுறைகளை புறமத ஆசாரங்கள் என முழுமையாக விலக்க வேண்டியதில்லை. அவ்வாறு செய்வது இந்தியர்கள் தங்கள் பண்பாட்டை இழந்து ஆங்கிலப் பண்பாட்டை நகல்செய்வதாக ஆக்கும். இது ஆங்கிலேயரின் பண்பாட்டு ஆதிக்கம், அது ஏற்கத்தக்கது அல்ல.
* இந்து என்பது சிந்து நதியில் இருந்து உருவான சொல். அது இந்திய நிலத்தை குறிப்பிடுகிறது. ஒரு மதத்தை அல்ல. அப்படி ஒரு மதமும் இல்லை. இந்திய நிலத்திலுள்ள பண்பாடு இந்துப் பண்பாடு அல்ல. தொன்மையான இந்திய நிலப் பண்பாடுதான். ஆகவே இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கை சார்ந்த நடைமுறைகளை புறமத ஆசாரங்கள் என முழுமையாக விலக்க வேண்டியதில்லை. அவ்வாறு செய்வது இந்தியர்கள் தங்கள் பண்பாட்டை இழந்து ஆங்கிலப் பண்பாட்டை நகல்செய்வதாக ஆக்கும். இது ஆங்கிலேயரின் பண்பாட்டு ஆதிக்கம், அது ஏற்கத்தக்கது அல்ல.
* பைபிள் தனிமனிதனின் மீட்பையே சொல்கிறது. ஏசுவை ஏற்றுக்கொண்டு மீட்பை நோக்கிச் செல்லும் ஒருவர் தன் மூதாதையரின் பண்பாட்டை முழுமையாக நிராகரிக்கவேண்டும் என்பதில்லை. பண்பாட்டு நிராகரிப்பு கிறிஸ்தவ மதத்தை தழுவுவதற்கான நிபந்தனை அல்ல. இந்தியப் பண்பாடு மீதான மிஷனரிகளின் இனவாதக் காழ்ப்பினாலேயே விசுவாசிகளிடம் அதை முழுமையாக நிராகரிக்கும்படிச் சொல்கிறார்கள்.
* பைபிள் தனிமனிதனின் மீட்பையே சொல்கிறது. ஏசுவை ஏற்றுக்கொண்டு மீட்பை நோக்கிச் செல்லும் ஒருவர் தன் மூதாதையரின் பண்பாட்டை முழுமையாக நிராகரிக்கவேண்டும் என்பதில்லை. பண்பாட்டு நிராகரிப்பு கிறிஸ்தவ மதத்தை தழுவுவதற்கான நிபந்தனை அல்ல. மிஷனரிகளுக்கு  இந்தியப்பண்பாடு மீது இருக்கும்  இனவாதக் காழ்ப்பினாலேயே விசுவாசிகளிடம் அதை முழுமையாக நிராகரிக்கும்படிச் சொல்கிறார்கள்.
* புதிய ஏற்பாடு என்பது பைபிளின் எளிமைப்படுத்தப்பட்ட வடிவம். மிஷனரிகள் அதையே இந்திய மக்களுக்கு அளிக்கிறார்கள். அதில் விரிவான வரலாற்றுப் புலமும், இறையியல் விளக்கமும் இல்லை. புதிய ஏற்பாடு மட்டுமே பைபிள் என்னும் பார்வையால்தான் இந்தியப் பண்பாட்டை நிராகரிக்கிறார்கள். பழைய ஏற்பாடும் சேர்த்து மொத்தமாகவே பைபிளைப் பயிலவேண்டும். அப்படிப் பயில்கையில் பழைய எபிரேய பண்பாடு பல்வேறு புறப் பண்பாடுகளை ஏற்றுக் கொண்டிருப்பதைக் காணமுடியும். பைபிளின் நற்செய்தி என்பது ஏசு வழியாக மீட்பு என்பதே. குறிப்பிட்ட பண்பாடே உயர்ந்தது, அதை எல்லாரும் தழுவ வேண்டும் என்று பைபிள் சொல்வதில்லை
* புதிய ஏற்பாடு என்பது பைபிளின் எளிமைப்படுத்தப்பட்ட வடிவம். மிஷனரிகள் அதையே இந்திய மக்களுக்கு அளிக்கிறார்கள். அதில் விரிவான வரலாற்றுப் புலமும், இறையியல் விளக்கமும் இல்லை. சீர்திருத்தக் கிறிஸ்தவர்கள் புதிய ஏற்பாடு மட்டுமே பைபிள் என்னும் பார்வையால்தான் இந்தியப் பண்பாட்டை நிராகரிக்கிறார்கள். கத்தோலிக்கர்கள் கான்ஸ்டண்டைன் திருத்தியமைத்த பழைய ஏற்பாடு பைபிளை ஏற்கிறார்கள். தொன்மையான ஹீப்ரு மொழி பழைய ஏற்பாடும் சேர்த்து மொத்தமாகவே பைபிளைப் பயிலவேண்டும். அப்படிப் பயில்கையில் பழைய எபிரேய பண்பாடு பல்வேறு புறப் பண்பாடுகளை ஏற்றுக் கொண்டிருப்பதைக் காணமுடியும். பைபிளின் நற்செய்தி என்பது ஏசு வழியாக மீட்பு என்பதே. அவ்வாறன்றி குறிப்பிட்ட ஒரு பண்பாடே உயர்ந்தது, அதை எல்லாரும் தழுவ வேண்டும் என்று பைபிள் சொல்வதில்லை


* ஆங்கிலிகன் சபை மற்றும் எஸ்.பி.ஜி முன்வைக்கும் கிறிஸ்தவம் என்பது பைபிள் முன்வைக்கும் ஏசு வழியான மீட்பு என்னும் கருத்துக்கு உடன்பட்டதாக இல்லை. அது ஆங்கில ஏகாதிபத்தியத்தை நிறுவும் உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது. எஸ்.பி.ஜி அமைப்பு பல நாடுகளில் நீண்டகாலம் அடிமை முறையை கடைப்பிடித்தது. உள்ளூர் மக்களை அடிமைகளாக பிடித்து வேலை வாங்கி பொருளீட்டியது. அதன் நோக்கம் ஆன்மமீட்பு அல்ல, வணிகமும் ஆதிகமும்தான். ஆகவே அந்தவகையான வெளிநாட்டு அமைப்புகளுடனான எல்லா தொடர்புகளையும் துண்டித்துக் கொள்ளவேண்டும்.
* ஆங்கிலிகன் சபை மற்றும் எஸ்.பி.ஜி முன்வைக்கும் கிறிஸ்தவம் என்பது பைபிள் முன்வைக்கும் ஏசு வழியான மீட்பு என்னும் கருத்துக்கு உடன்பட்டதாக இல்லை. அது ஆங்கில ஏகாதிபத்தியத்தை நிறுவும் உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது. எஸ்.பி.ஜி அமைப்பு பல நாடுகளில் நீண்டகாலம் அடிமை முறையை கடைப்பிடித்தது. உள்ளூர் மக்களை அடிமைகளாக பிடித்து வேலை வாங்கி பொருளீட்டியது. அதன் நோக்கம் ஆன்மமீட்பு அல்ல, வணிகமும் ஆதிகமும்தான். ஆகவே அந்தவகையான வெளிநாட்டு அமைப்புகளுடனான எல்லா தொடர்புகளையும் துண்டித்துக் கொள்ளவேண்டும்.
Line 67: Line 70:
* எபிரேய பைபிளின் 66 ஆகமங்கள் மட்டுமே ஏற்புக்குரியவை. பத்து கட்டளைகள் மட்டுமே சட்டங்கள்
* எபிரேய பைபிளின் 66 ஆகமங்கள் மட்டுமே ஏற்புக்குரியவை. பத்து கட்டளைகள் மட்டுமே சட்டங்கள்
* யூத பைபிள் கூறும் மண்டியிட்டு வணங்குதல், நறுமணப்பொருட்களைக்கொண்டு தூபமிடுதல், திருப்பலி அளித்தல் ஆகியவை வழிபாட்டில் தவிர்க்கமுடியாதவை
* யூத பைபிள் கூறும் மண்டியிட்டு வணங்குதல், நறுமணப்பொருட்களைக்கொண்டு தூபமிடுதல், திருப்பலி அளித்தல் ஆகியவை வழிபாட்டில் தவிர்க்கமுடியாதவை
* ஆல்டரின் முன் கைகளை நெஞ்சில் சேர்த்து வளைந்து வணங்கும் யூதமுறையே தேவை  
* ஆல்டரின் முன் கைகளை நெஞ்சில் சேர்த்து வளைந்து வணங்கும் யூதமுறையே தேவை.
* ஒயினுக்குப் பதிலாக புளிக்காத பழரசம் திருரத்தச் சடங்கில் பயன்படுத்தப்படவேண்டும்
* ஒயினுக்குப் பதிலாக புளிக்காத பழரசம் திருரத்தச் சடங்கில் பயன்படுத்தப்படவேண்டும்.
* இந்திய முறைப்படி தரையில் விரிக்கப்பட்ட பாய்களில் அமர்ந்து ஏசுவை வழிபடலாம்  
* இந்திய முறைப்படி தரையில் விரிக்கப்பட்ட பாய்களில் அமர்ந்து ஏசுவை வழிபடலாம்.
* ஆலய மணிகளுக்குப் பதிலாக எக்காளம் என்னும் கொம்புக்கருவியை பயன்படுத்தவேண்டும். பைபிளில் சொல்லப்பட்டது அதுவே
* ஆலய மணிகளுக்குப் பதிலாக எக்காளம் என்னும் கொம்புக்கருவியை பயன்படுத்தவேண்டும். பைபிளில் சொல்லப்பட்டது அதுவே.
* ஆலயத்திற்குள் நுழையும்போது யூத முறைப்படி (இஸ்லாமியர் ஒளு என சொல்லும் முறை) கால்களையும் கைகளையும் முகத்தையும் கழுவிக்கொள்ளவேண்டும்
* ஆலயத்திற்குள் நுழையும்போது யூத முறைப்படி (இஸ்லாமியர் ஒளு என சொல்லும் முறை) கால்களையும் கைகளையும் முகத்தையும் கழுவிக்கொள்ளவேண்டும்.
* ஆலயத்தில் ஆல்டரின் முன் உடல்நிலம்பட விழுந்து வணங்கவேண்டும்
* ஆலயத்தில் ஆல்டரின் முன் உடல்நிலம்பட விழுந்து வணங்கவேண்டும்.
* சனிக்கிழமைதான் சபாத் நாள் (Saturday Sabbath ), அன்றே வார வழிபாடு. அன்று உழைக்கலாகாது. சனிக்கிழமைக்கான உணவு வெள்ளி மாலை ஆறுமணிக்குள் சமைக்கப்படவேண்டும்.
* சனிக்கிழமைதான் சபாத் நாள் (Saturday Sabbath ), அன்றே வார வழிபாடு. அன்று உழைக்கலாகாது. சனிக்கிழமைக்கான உணவு வெள்ளி மாலை ஆறுமணிக்குள் சமைக்கப்படவேண்டும்.
* திருநாட்களை கணிக்க யூத நாட்காட்டிக் கணிதமுறை கடைப்பிடிக்கப்படவேண்டும். கூடாரப் பண்டிகை, பஸ்கா பண்டிகை, பெந்தெகொஸ்தே பண்டிகை ஆகியவை மட்டுமே கொண்டாடப்படவேண்டும்.
* திருநாட்களை கணிக்க யூத நாட்காட்டிக் கணிதமுறை கடைப்பிடிக்கப்படவேண்டும். கூடாரப் பண்டிகை, பஸ்கா பண்டிகை, பெந்தெகொஸ்தே பண்டிகை ஆகியவை மட்டுமே கொண்டாடப்படவேண்டும்.
* இந்திய மரபில் பெண்களுக்கு மாதவிலக்கு இருந்த நாட்களில் அவர்கள் ஆலயத்துக்கு வரவேண்டியதில்லை. பிரசவம், சாவு ஆகியவற்றின் விளைவான தீட்டு நாட்களில் அவை உடையவர்கள் ஆலயம் வரலாகாது.
* இந்திய மரபின்படி கிறிஸ்தவ ஆலயங்களிலும் பெண்களுக்கு மாதவிலக்கு இருக்கும் நாட்களில் அவர்கள் ஆலயத்துக்கு வரவேண்டியதில்லை. பிரசவம், சாவு ஆகியவற்றின் விளைவான தீட்டு நாட்களில் அவை உடையவர்கள் ஆலயம் வரலாகாது.
* குழந்தை ஞானஸ்நானம் தேவையில்லை. ஒருவர் அறிவும் சிந்தனையும் உருவானபின் இறைச்செய்தியை புரிந்துகொண்டு, தன்விருப்பத்தால், கிறிஸ்தவராக ஞானஸ்நானம் பெறவேண்டும்
* குழந்தை ஞானஸ்நானம் தேவையில்லை. ஒருவர் அறிவும் சிந்தனையும் உருவானபின் இறைச்செய்தியை புரிந்துகொண்டு, தன்விருப்பத்தால், கிறிஸ்தவராக ஞானஸ்நானம் பெறவேண்டும்.
* போதகர் அருட்பொழிவு தேவையில்லை. போதகர் என்னும் பதவியும் தேவையில்லை. இறையியல் அறிமுகம் கொண்ட எவரும் போதகராகலாம். ஒரு குழுவில் மூத்தவர், அல்லது இறையியல் அறிந்தவர் பிரார்த்தனையை நடத்தி வைக்கலாம். (இது யூத, இஸ்லாமிய மரபு)
* போதகர் அருட்பொழிவு தேவையில்லை. போதகர் என்னும் பதவியும் தேவையில்லை. இறையியல் அறிமுகம் கொண்ட எவரும் போதகராகலாம். ஒரு குழுவில் மூத்தவர், அல்லது இறையியல் அறிந்தவர் பிரார்த்தனையை நடத்தி வைக்கலாம். (இது யூத, இஸ்லாமிய மரபு)


Line 101: Line 104:


* அருமைநாயகம் அன்னிய நிதியுதவியை முழுமையாக நிராகரித்தார். ஆகவே அவருடைய சபைக்கு நிதியாதாரம் உருவாகவில்லை. பிற சபைகள் அளித்த கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சேவைகளையும் பொருளியல் நலன்களையும் அவரது சபையால் அளிக்க முடியவில்லை.
* அருமைநாயகம் அன்னிய நிதியுதவியை முழுமையாக நிராகரித்தார். ஆகவே அவருடைய சபைக்கு நிதியாதாரம் உருவாகவில்லை. பிற சபைகள் அளித்த கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சேவைகளையும் பொருளியல் நலன்களையும் அவரது சபையால் அளிக்க முடியவில்லை.
* அருமைநாயகம் நாடார் சாதியினர் என்பதனால் அவருடைய சாதியில் அவருடைய துணைக்குழு தவிர பிறர் அவரை ஏற்கவில்லை.
* அருமைநாயகம் நாடார் சாதியினர் என்பதனால் அவருடைய சாதியின் துணைக்குழு தவிர பிறர் அவரை ஏற்கவில்லை.
* அருமைநாயகம் தன் சபையை தொடங்கிய ஆண்டுதான் இந்தியாவில் சிப்பாய்க் கலகம் உருவானது. ஆகவே பிரிட்டிஷ் அரசு எல்லா தேசிய இயக்கங்களையும் ஐயத்துடன் கண்டு கடும் நடவடிக்கை எடுத்தது. அருமைநாயகம் மீது எஸ்.பி.ஜி உள்ளிட்ட ஆங்கிலக் கிறிஸ்தவ அமைப்புகள் தொடர்ச்சியாக புகார்களை முன்வைத்து அதில் சேர்பவர்களுக்கு அச்சமூட்டினர். ஆகவே பெருவாரியாக எளிய மக்கள் அதில் இணையவில்லை. ஆங்கில அரசின் பகைமையை ஈட்டிக்கொள்ள அஞ்சியவர்கள் அச்சபையை தவிர்த்தனர். ஆங்கில அரசுடன் இணைந்து செயல்பட பிற சீர்திருத்தச் சபைகளே உகந்தது என்னும் எண்ணம் பரவலாக இருந்தது.  
* அருமைநாயகம் தன் சபையை தொடங்கிய ஆண்டுதான் இந்தியாவில் சிப்பாய்க் கலகம் உருவானது. ஆகவே பிரிட்டிஷ் அரசு எல்லா தேசிய இயக்கங்களையும் ஐயத்துடன் கண்டு கடும் நடவடிக்கை எடுத்தது. அருமைநாயகம் மீது எஸ்.பி.ஜி உள்ளிட்ட ஆங்கிலக் கிறிஸ்தவ அமைப்புகள் தொடர்ச்சியாக புகார்களை முன்வைத்து அதில் சேர்பவர்களுக்கு அச்சமூட்டினர். ஆகவே பெருவாரியாக எளிய மக்கள் அதில் இணையவில்லை. ஆங்கில அரசின் பகைமையை ஈட்டிக்கொள்ள அஞ்சியவர்கள் அச்சபையை தவிர்த்தனர். ஆங்கில அரசுடன் இணைந்து செயல்பட பிற சீர்திருத்தச் சபைகளே உகந்தது என்னும் எண்ணம் பரவலாக இருந்தது.  



Revision as of 13:23, 12 November 2024

அருமைநாயகம் சட்டம்பிள்ளை
ஏசு ரட்சகர் ஆலயம் பிரகாசபுரம் மூக்குப்பீறி

அருமைநாயகம் சட்டம்பிள்ளை (அக்டோபர் 24, 1823 - 1919) (அருமைநாயகம் சட்டாம்பிள்ளை, ரப்பி அருமைநாயகம்) கிறிஸ்தவ மதபோதகர். இந்து கிறிஸ்தவம் என்னும் கருத்துருவை உருவாக்கியவர். இந்தியாவுக்குரிய கிறிஸ்தவம் என்று அதற்குப் பொருள். ஐரோப்பியக் கிறிஸ்தவம் ஐரோப்பியப் பண்பாட்டுக்கு ஏற்ப திரிபுபட்டது என்றும், கிறிஸ்தவத்தை எபிரேய மொழி மூலத்தில் இருந்தே அறிந்துகொண்டு இந்தியப்பண்பாட்டுக்கு ஏற்ப வளர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் அருமைநாயகம் சொன்னார். இந்திய தேசிய இயக்கம் தொடக்கநிலையில் இருந்த காலகட்டத்திலேயே அன்னிய அரசியலாதிக்கத்துக்கு எதிரான பார்வையை முன்னெடுத்த முன்னோடி. மதநம்பிக்கையை பிரிட்டிஷார் அரசியலாதிக்கத்துக்குப் பயன்படுத்துவதை எதிர்த்தார்.

பிறப்பு, கல்வி

அருமைநாயகம் சட்டம்பிள்ளை அக்டோபர் 24, 1823-ல் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பிரகாசபுரத்தில் ஒரு செல்வந்தக் கிறிஸ்தவக் குடும்பத்தில் வேதநாயகம் நாடார் - தங்கம் அம்மாள் இணையருக்கு பிறந்தார். ஏசுவடியான் நாயகம், ஜான் நாயகம் என்னும் இரண்டு சகோதரர்களும், ஏழு சகோதரிகளும் இவருக்கு இருந்தார்கள்.

பிரகாசபுரத்தில் தொடக்கக் கல்வியும், மெய்ஞானபுரத்தில் இசைநிலைக் கல்வியும் கற்றார். எஸ்.பி.ஜி (Society for Propagation of the Gospel (SPG)) அமைப்பின் கல்விநிலையத்தில் சேர்ந்து உயர்நிலைக் கல்வியை முடித்தார். இந்த அமைப்பில்தான் கால்டுவெல் பணிபுரிந்தார்.

1848-ல் இவர் எஸ்.பி.ஜி நடத்திய மொங்டன் உபதேசியார் தேர்வில் (Monkton Catechistship) முதல் மாணவராக வந்து தங்கப்பதக்கம் பெற்றார். சாயர்புரம் இறையியல் கல்லூரியில் ஜி.யூ.போப்பின் மாணவராக அமர்ந்து இறையியலில் மேற்படிப்பை முடித்தார். அங்கும் முதல் மாணவருக்கான தங்கப்பதக்கத்தைப் பெற்றார். இறையியல் கல்லூரியில் லத்தீன், கிரேக்கம், அராமிக் ஆகிய தொல்மொழிகளுடன் ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு ஆகியவற்றையும் கற்றார். இவர் 18 மொழிகள் அறிந்தவர் என்றும், ஆகவே பஞ்சவர்ணக்கிளி என அழைக்கப்பட்டார் என்றும் குறிப்பிடப்படுகிறது.

அருமைநாயகம் 1851-ல் சென்னைக்குச் சென்று ஆறு ஆண்டுகள் தங்கி கிறிஸ்தவக் கல்வி கற்றார். அங்கே தங்கியிருக்கையில் இவர் ஒரு யூத மதபோதகருடன் அணுக்கமாக இருந்து யூதமதத்தையும் யூத பைபிளையும் கற்றுத் தேர்ந்தார்.

கல்விப்பணி

நாசரேத்தில் இறைப்பணி ஆற்றிக்கொண்டிருந்தவரும் Mission of Nazareth என்னும் நூலின் ஆசிரியருமான ஏ.எஃப். கேமெரர் (Augustus Frederick Caemmerer) என்னும் அறிஞர் 1848-ல் உபதேசித்தேர்வில் வென்ற முடித்திருந்த அருமைநாயகத்தின் மதிப்பை உணர்ந்து அவரை மூக்குப்பீறி என்னும் இடத்தில் தொடங்கப்பட்ட பள்ளியில் ஆசிரியராகவும், அங்கிருந்த சிறிய தேவாலயத்தின் உபதேசியாராகவும் அமர்த்தினார். அங்குதான் அவர் சட்டம்பிள்ளை என அழைக்கப்பட்டார். அது குழுத்தலைவர் என்ற பொருள்கொண்ட சொல்.

தனிவாழ்க்கை

அருமைநாயகம் சட்டம்பிள்ளை நசரேத்தைச் சேர்ந்த சுவாமியடியாளை மணந்தார். அவருடைய மகன் நபி பாண்டியன் வேதநாயகம் அவருடைய பணியை தொடர்ந்தார். மரியம் அம்மாள், பாக்கியம் அம்மாள், பட்டி நாயகராஜ், ராஜநாயகம் குலசேகர ராஜ் ஆகியோர் அவருடைய மற்ற குழந்தைகள்.

கிறிஸ்தவ அமைப்புகளுடன் மோதல்

சாயர்புரத்தில் இறையியல் கல்வியை முடித்ததும் அருமைநாயகம் நாசரேத் பள்ளியில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். கிறிஸ்தவ இறைப்பணியாளர்களுடன் அவருக்கு தொடர்ச்சியாக மோதல்கள் உருவாகலாயின. காமெரர் இந்திய மக்கள் பற்றிய இனவாத பார்வை கொண்டிருந்தார், தன் நூலிலும் அதை பதிவுசெய்திருந்தார். அவர்கள் சுயமாகச் சிந்திக்கவோ, இறையியல் கொள்கைகளை உள்வாங்கிக்கொள்ளவோ திறனற்றவர்கள் என்று எண்ணினார். அவர்கள்மேல் அவர் உரிமை, ஆதிக்கம் ஆகியவை சார்ந்த அக்கறை கொண்டிருந்தார்

இரண்டு காரணங்களுக்காக அருமைநாயகம் கேமரருடன் மோதலில் ஈடுபட்டார். கேமரர் தேவாலயத்தின் ஆல்டரில் ஒரு சிலுவையை நிறுவியதை அருமைநாயகம் ஏற்கவில்லை. அது மீண்டும் உருவ வழிபாட்டுக்குச் செல்வது என அவர் எதிர்ப்பு தெரிவித்தார். சிலுவை ஓர் அடையாளமே ஒழிய இறைவடிவம் அல்ல என்று இறையியல் கோணத்தில் வாதிட்டார். சுவாமியடியான் உபதேசி என்பவரும் இதில் அருமைநாயகத்தை ஆதரித்தார். அது கேமரரை எரிச்சலூட்டியது

அருமைநாயகம் செலவந்தர் ஆதலால் ஆடம்பரமாகவே உடையணிந்து வந்தார். அவர் போதகருக்குரிய எளிய தொப்பிக்குப் பதிலாக தலைப்பாகை அணிந்ததை கேமரர் எதிர்த்தார். அருமைநாயகத்துக்கு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமானபோது கேமரர் அப்பெண்ணை அவர் மணக்க அனுமதி அளிக்கவில்லை.

அக்காலத்தில் மதப்பரப்புநர்கள் தங்கள் மதத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையை முழுமையாகவே கட்டுப்படுத்துவது வழக்கம். பள்ளியில் கேமரர் ஒரு தலைமையாசிரியரை தன் பிரதிநிதியாக வைத்துக்கொண்டு செயல்பட்டார். அந்த தலைமையாசிரியரின் தவறான தொடர்பால் நாசரேத் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டாள். அச்செய்தியை அறிந்தும் கேமரர் நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அருமைநாயகத்தை கேமரர் பள்ளியில் இருந்து நீக்கினார்.

வேலையிழந்த அருமைநாயகம் கால்நடையாகவே சென்னைக்குச் சென்று சென்னை பேராயக்குழு (MDC)யில் முறையிட்டார். அவர்களும் உதவவில்லை. ஊர் திரும்பிய அருமைநாயகம் தேவாலயம் சென்றார். அங்கே இருந்த கேமரர், கோயில்கூட்டி (Sexton) வழியாக அருமைநாயகத்தை ஆலயத்தில் இருந்து பிடித்து வெளியே தள்ளிவிட்டார். ஏற்கனவே சுவாமியடியான் உபதேசியாரும் தேவாலயத்தில் இருந்து நீக்கியிருந்தார். இருவரும் எஸ்.பி.ஜி அமைப்பில் இருந்து வெளியேறி சென்னைக்குச் சென்றனர்.

கால்டுவெல் விவாதம்

ராபர்ட் கால்டுவெல் 1849 ல் திருநெல்வேலி சாணார் வரலாறு நூலை ஆங்கிலத்தில் எழுதினார். (தின்னவேலி (திருநெல்வேலி) சாணர்கள்: அவர்களின் மதம், மற்றும் ஒரு சாதியாக அவர்களது நெறிகள் மற்றும் குணங்கள்; அவர்களிடையே கிறிஸ்தவம் பரவுவதற்கு உள்ள வசதிகள் மற்றும் தடைகள் பற்றிய சிறப்புக் குறிப்புகளுடன் - ஒரு வரைவு. The Tinnevelly Shanars: A Sketch of Their Religion, and Their Moral Condition and Characteristics, as a Cast; with Special Reference to the Facilities and Hindrances to the Progress of Christianity Amongst Them). இந்நூலில் அவர் ஏற்கனவே கேமரர் நாடார் இன மக்கள் பற்றி கொண்டிருந்த கருத்தையே எழுதியிருந்தார். 'சாணார்கள் அல்லது நாடார்கள் இந்தியாவின் குறைந்த அறிவுள்ள சாதிகளில் ஒன்று, சாணார்கள் பொதுவாக அக்கறையின்மை மற்றும் தீய ஒழுக்கம் கொண்டவர்கள், சாணார்களில் கிறிஸ்தவரல்லாதவர்கள் பின்பற்றும் மதநம்பிக்கை என்பது ’ஒழுக்கக்கேட்டின் மதம்’, மதம் மாறிய சாணார்களால் நல்லொழுக்கம் மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கையை பேணிக்கொள்வது மிகக்கடினம், அவர்களிடம் பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க முடியாது, அவர்களுக்கு இறையியல் போதனை புரிவதில்லை' - போன்றவை கால்டுவெல்லின் கருத்துக்களாக இருந்தன. கெர்ம்ஸ் என்னும் கிறிஸ்தவப் போதகர் எழுதிய இன்னொரு கட்டுரையில் நாடார்கள் வனவிலங்குகள் போல அறிவும் ஒழுக்கமும் அற்றவர்கள் என குறிப்பிட்டிருந்தார்.

அருமைநாயகம் அக்கருத்துக்களை மிகக்கடுமையாக கண்டித்து எழுதினார். கால்டுவெல்லின் நூலில் உள்ள கருத்துக்களை மொழியாக்கம் செய்து சிறு துண்டுப் பிரசுரங்களாக அச்சிட்டு படிக்கத் தெரிந்த கிறிஸ்தவர்களிடையே வழங்கினார். கால்டுவெல்லின் நூலையும் கெர்ம்ஸின் கட்டுரையையும் கண்டித்து அருமைநாயகம் ஒரு நூலை எழுதினார். அந்நூலை அச்சிட்டு வெளியிடும் பொருட்டு கிறிஸ்தவர்களிடையே நிதிவசூல் செய்தார். அன்று கால்டுவெல் உள்ளிட்டவர்கள் பணிபுரிந்த எஸ்.பி.ஜி சபை ஆங்கில அரசுக்கு அணுக்கமாக இருந்தது. அருமைநாயகம் சமூக அமைதியை குலைப்பதாகக் கூறி கேமரர் அரசுக்கு புகார் அளித்தார். அருமைநாயகம் சட்டம்பிள்ளையும் அவருடைய மாணவர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அருமைநாயகம் எழுதிய அந்நூல் வெளியாகவில்லை.

நாடார்களைப் பற்றி தான் சொன்னவை எல்லாம் உண்மை என்றும், அவர்கள் கிறிஸ்தவர்களாக ஆகி முன்னேறிவிட்டனர் என்றும், இப்போது கடந்தகாலத்தை அஞ்சி நாணி அதை ஒளிக்க முற்படுகின்றனர் என்றும் கால்டுவெல் எழுதினார். சட்டாம்பிள்ளை நாடார் இனத்தவர் கிறிஸ்தவர்களின் வருகைக்கு நீண்டகாலம் முன்னரே நிலவுரிமை கொண்டவர்களாகவும், கல்விகேள்விகளில் சிறந்தவர்களாகவும் திகழ்ந்தனர் என்றும், ஏராளமான நூல்சான்றுகள் அதற்குள்ளன என்றும், தன் குடும்பமே அதற்கு நேரடிச் சான்று என்றும் விரிவாக மறுப்பு தெரிவித்திருந்தார்.

கால்டுவெல் மதம் மாறாத சாணார்களை இந்துக்கள் என்று சொல்லமுடியாது, அவர்களுக்கு இந்து மரபுடனும் எந்த தொடர்பும் இல்லை, அவர்களுடையது காட்டுமிராண்டி மதம் மட்டுமே என வாதிட்டார். இந்திய நிலப்பகுதியில் வாழ்வதனாலேயே அவர்கள் இந்துக்கள் எனப்படுகிறார்கள் என்றார். 1880ல் ஒய்.ஞானமுத்து நாடார் என்பவர் கால்டுவெல்லின் நூலுக்கு எதிராக பிரிட்டிஷ் நீதிமன்றத்தின் வழக்கு தொடர்ந்தார். எஸ்.பி.ஜி அமைப்புக்கு எதிராக அவர் தொடர்ச்சியாக போராடினார்.

ராபர்ட் ஹார்ட்கிரேவ் (Robert L. Hardgrave) தன்னுடைய தமிழக நாடார்கள் (The Nadars of Tamilnadu) என்னும் நூலில், அருமைநாயகம் எஸ்.பி.ஜி பள்ளியில் இருந்து நீக்கப்பட்டமையால் மிஷனரிகள் மேல் கோபம் கொண்டார் என்றும், சென்னைக்குச் சென்று யூதமதக் கருத்துக்களை கற்றுக்கொண்டு மாற்று எண்ணங்களை அடைந்தார் என்றும் குறிப்பிடுகிறார். கால்டுவெல் எழுதிய சாணார்கள் பற்றிய நூல் ஆங்கில மதப்பரப்புநர்களுக்கான உள்வட்ட நூல். அது ஒரு துண்டுப்பிரசுரம். அது ரகசியமாக அருமைநாயகம் கைக்குக் கிடைத்தது. கால்டுவெல் மற்றும் எஸ்.பி.ஜிக்கு எதிராக அருமைநாயகம் அதைப் பயன்படுத்திக்கொண்டார் என்கிறார்.

ஐரோப்பிய மறுப்பு

அருமைநாயகம் ஐரோப்பியர் கிறிஸ்தவத்தை போதனை செய்யும் தகுதி கொண்டவர்கள்தானா என்னும் கேள்வியை தொடர்ச்சியாக எழுப்பினார். அவர்களின் நோக்கம் ஆதிக்கம் மட்டுமே, மக்களின் மீட்பு அல்ல என்று வாதிட்டார். கிறிஸ்தவர்கள் என்று சொல்லப்படும் ஐரோப்பியர் இனவாதிகளாகவும், ஒழுக்கமற்றவர்களாகவும் இருந்தனர். எஸ்.பி.ஜி உள்ளிட்ட சபைகள் அடிமைகளை வைத்திருந்தன. சட்டாம்பிள்ளை ஜான் பார்க்கர், வில்லிய ஹோவிட், ராபர்ட் சௌதே, அபே டுபாய்ஸ் போன்றவர்களின் நூல்களை குறிப்பிட்டு ஆங்கிலோ சாக்ஸன் இனம் செய்த ஆதிக்கம், அழிவு மற்றும் ஒழுக்கமீறல்களை விளக்கினார். முதன்மையாக அருமைநாயகம் சட்டாம்பிள்ளை ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்தாலும் அமெரிக்கர், ஐரோப்பியர் அனைவருமே பைபிளின் பாதையில் இருந்து வழுவியவர்களே என்று வாதிட்டார்.

ஆங்கிலப்பெண்கள் ஒழுக்கமற்றவர்கள் என சட்டாம்பிள்ளை கூறினார். மிக எளிதாக விவாகரத்து செய்து மறுமணம் புரிவதை அவர் ஏற்கவில்லை, கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்கலாகாது என்பதே பைபிளின் தரப்பு என்று அவர் சொன்னார். ஆங்கில கிறிஸ்தவர்கள் சாதாரணமாக விபச்சாரம் செய்வதையும், அதன் வழியாக ஆங்கில இந்தியர் என்னும் இனமே உருவாகியிருப்பதையும், ஆங்கிலிகன் திருச்சபை அதை இயல்பாக ஏற்பதையும் கண்டித்தார். ஆங்கிலேயர் கடைப்பிடிப்பது உண்மையான கிறிஸ்தவம் அல்ல, அது ரோமாபுரி அரசர்களான கான்ஸ்டண்டைன், தியோடரஸ் போன்றவர்கள் தங்கள் ஆதிக்கம் மற்றும் ஒழுக்கமீறல்களை நியாயப்படுத்தும் பொருட்டு உருவாக்கிய கிறிஸ்தவம் என்றார்.

ஆங்கிலேயரால் தங்கள் ஆதிக்கத்தின்பொருட்டு திரிக்கப்பட்ட பைபிளை கடந்து உண்மையான ஹீப்ரு பைபிளை அறிந்து ஒழுகுவது இந்தியர்களின் கடமை என்று அவர் குறிப்பிட்டார்.

இந்திய கிறிஸ்தவ இறையியல்

கால்டுவெல்லுக்கு எதிரான போராட்டத்தின் விளைவான அரசு நடவடிக்கைக்குப்பின் அருமைநாயகம் எஸ்.பி.ஜியில் இருந்து முழுமையாக விலகினார். தன் கருத்துக்களை எதிர்நிலைபாடு இல்லாமல் விரிவாக எழுத முற்பட்டார். தன் இறையியல் கருத்துக்களை தொகுத்து முன்வைத்துச் சொற்பொழிவுகள் ஆற்றினார். அருமைநாயகம் யூத பைபிள் உட்பட பைபிளின் எல்லா வடிவங்களையும் மூலமொழிகளிலேயே வாசித்திருந்தமையால் கால்டுவெல் உள்ளிட்டோருக்கு இல்லாத ஆழ்ந்த இறையியல் அறிவு கொண்டிருந்தார். அதனடிப்படையில் தன் கொள்கைகளை அவர் வகுத்துக்கொண்டார்.

அருமைநாயகத்தின் இறையியல் கருத்துக்களை இவ்வாறாகச் சுருக்கிச் சொல்லலாம்.

  • யூதபைபிள் எனப்படும் எபிரேய பைபிளே வேதாகமத்தின் தொன்மையான முதல்வடிவம். அதிலிருந்து தொடர்ச்சியாக பைபிள் பலவாறாக மாற்றப்பட்டுள்ளது. அந்தந்த பண்பாட்டுக்கு ஏற்ப அந்த மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. அந்த மாற்றப்பட்ட வடிவத்தை நாம் பின் தொடரக்கூடாது. மூலபைபிளை நம் பண்பாட்டுடன் இணைத்து வளர்த்தெடுக்கவேண்டும், நமக்கான கிறிஸ்தவத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.
  • வழிபாடுகள் சார்ந்து யூதபைபிளில் உள்ள நடைமுறைகளையே பின்பற்றவேண்டும். சனிக்கிழமை, மாதப்பிறப்பு, பஸ்கா முதலிய நாட்களிலேயே வழிபடவேண்டும். வழிபாடுகள் யூதபைபிளில் உள்ளபடி நிகழவேண்டும்.
  • இந்து என்பது சிந்து நதியில் இருந்து உருவான சொல். அது இந்திய நிலத்தை குறிப்பிடுகிறது. ஒரு மதத்தை அல்ல. அப்படி ஒரு மதமும் இல்லை. இந்திய நிலத்திலுள்ள பண்பாடு இந்துப் பண்பாடு அல்ல. தொன்மையான இந்திய நிலப் பண்பாடுதான். ஆகவே இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கை சார்ந்த நடைமுறைகளை புறமத ஆசாரங்கள் என முழுமையாக விலக்க வேண்டியதில்லை. அவ்வாறு செய்வது இந்தியர்கள் தங்கள் பண்பாட்டை இழந்து ஆங்கிலப் பண்பாட்டை நகல்செய்வதாக ஆக்கும். இது ஆங்கிலேயரின் பண்பாட்டு ஆதிக்கம், அது ஏற்கத்தக்கது அல்ல.
  • பைபிள் தனிமனிதனின் மீட்பையே சொல்கிறது. ஏசுவை ஏற்றுக்கொண்டு மீட்பை நோக்கிச் செல்லும் ஒருவர் தன் மூதாதையரின் பண்பாட்டை முழுமையாக நிராகரிக்கவேண்டும் என்பதில்லை. பண்பாட்டு நிராகரிப்பு கிறிஸ்தவ மதத்தை தழுவுவதற்கான நிபந்தனை அல்ல. மிஷனரிகளுக்கு இந்தியப்பண்பாடு மீது இருக்கும் இனவாதக் காழ்ப்பினாலேயே விசுவாசிகளிடம் அதை முழுமையாக நிராகரிக்கும்படிச் சொல்கிறார்கள்.
  • புதிய ஏற்பாடு என்பது பைபிளின் எளிமைப்படுத்தப்பட்ட வடிவம். மிஷனரிகள் அதையே இந்திய மக்களுக்கு அளிக்கிறார்கள். அதில் விரிவான வரலாற்றுப் புலமும், இறையியல் விளக்கமும் இல்லை. சீர்திருத்தக் கிறிஸ்தவர்கள் புதிய ஏற்பாடு மட்டுமே பைபிள் என்னும் பார்வையால்தான் இந்தியப் பண்பாட்டை நிராகரிக்கிறார்கள். கத்தோலிக்கர்கள் கான்ஸ்டண்டைன் திருத்தியமைத்த பழைய ஏற்பாடு பைபிளை ஏற்கிறார்கள். தொன்மையான ஹீப்ரு மொழி பழைய ஏற்பாடும் சேர்த்து மொத்தமாகவே பைபிளைப் பயிலவேண்டும். அப்படிப் பயில்கையில் பழைய எபிரேய பண்பாடு பல்வேறு புறப் பண்பாடுகளை ஏற்றுக் கொண்டிருப்பதைக் காணமுடியும். பைபிளின் நற்செய்தி என்பது ஏசு வழியாக மீட்பு என்பதே. அவ்வாறன்றி குறிப்பிட்ட ஒரு பண்பாடே உயர்ந்தது, அதை எல்லாரும் தழுவ வேண்டும் என்று பைபிள் சொல்வதில்லை
  • ஆங்கிலிகன் சபை மற்றும் எஸ்.பி.ஜி முன்வைக்கும் கிறிஸ்தவம் என்பது பைபிள் முன்வைக்கும் ஏசு வழியான மீட்பு என்னும் கருத்துக்கு உடன்பட்டதாக இல்லை. அது ஆங்கில ஏகாதிபத்தியத்தை நிறுவும் உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது. எஸ்.பி.ஜி அமைப்பு பல நாடுகளில் நீண்டகாலம் அடிமை முறையை கடைப்பிடித்தது. உள்ளூர் மக்களை அடிமைகளாக பிடித்து வேலை வாங்கி பொருளீட்டியது. அதன் நோக்கம் ஆன்மமீட்பு அல்ல, வணிகமும் ஆதிகமும்தான். ஆகவே அந்தவகையான வெளிநாட்டு அமைப்புகளுடனான எல்லா தொடர்புகளையும் துண்டித்துக் கொள்ளவேண்டும்.
  • ஒவ்வொரு பண்பாடும் தனக்கான திருச்சபையை உருவாக்கிக் கொள்ளவேண்டும். அவ்வாறுதான் ஏற்கனவே பல திருச்சபைகள் உருவாயின. அவற்றில் ஒன்றே ஆங்கிலிகன் திருச்சபையும். அது ஆங்கிலப் பண்பாடு சார்ந்தது. இந்தியாவுக்கு இந்தியப் பண்பாடு சார்ந்த திருச்சபை ஒன்று தேவை. அதை இந்தியர்கள் உருவாக்கிக் கொள்ளவேண்டும். இந்தியப் பண்பாடு சார்ந்த வாழ்க்கை முறைகளில் பைபிளின் செய்திக்கு மாறானவற்றை மட்டும் விலக்கினால் போதும். புறதெய்வ வழிபாடு, புறதெய்வ அடிப்படையிலான அன்றாடவாழ்க்கைச் சடங்குகள் ஆகியவை மட்டுமே அவ்வாறு விலக்கத்தக்கவை.
  • ஏசுவின் ரத்தம் எல்லா பாவங்களில் இருந்தும் மீட்கும். பிதா, மைந்தன், ஆவி என்னும் திரித்துவமே இறைவடிவம். அதற்கு உள்ளத்தை அளித்து, பாவங்களைக் களைந்து, வேண்டுதல்களைச் செய்வதே மீட்புக்கான வழி. முழுமையான பைபிளை நேரடியாகவே பயில்வதும், அதன் பொருளை உணர்வதும், அதன்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்வதுமே ஆன்ம மீட்பாகும்.

அருமைநாயகம் தன் கிறிஸ்தவக் கொள்கைகளை ஹீப்ரு பைபிளை ஒட்டியே அமைத்துக் கொண்டமையால் அவர் யூத முறைப்படி ரப்பி என்று அழைக்கப்பட்டார்.

இந்திய ஏசு ரட்சகர் சபை

அருமைநாயகம் சட்டாம்பிள்ளை தன் சிந்தனைகளை ஒட்டி ஒரு புதிய இந்திய திருச்சபையை உருவாக்கினார். 1857-ல் நாசரேத்தை ஒட்டிய பிரகாசபுரத்தில் ’இயேசுபிரான் இந்து-கிறித்தவ ஆலயம்’ ( Hindu church of Lord Jesus) என்னும் தேவாலயத்தை நிறுவினார். இதற்கு கால்டுவெல், ஜி.யு.போப் உள்ளிட்டவர்கள் மிகக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். பிரகாசபுரம், மூக்குப்பீறி, உய்யாங்குடி, குளத்துக்குடி, சாலைப்புதூர், வாழையடி, பாட்டக்கரை, வகுத்தான்குப்பம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த கிறிஸ்தவ நாடார்கள் இந்த தேவாலயத்தில் பங்குகொண்டனர். இது சட்டாம்பிள்ளைச் சபை என பெயர் பெற்றது. பின்னர் இந்த சபை இந்திய ஏசு இரட்சகர் சபை (Indian church of the only Savior) என அழைக்கப்பட்டது. பல ஊர்களில் சிறு வழிபாட்டிடங்கள் அமைக்கப்பட்டன.

ஏசு ரட்சகர் சபையின் வழிபாட்டின் தனித்தன்மைகள் அருமைநாயகம் வகுத்த கீழ்க்கண்ட முறைமைகளில் உள்ளன.

  • எபிரேய பைபிளின் 66 ஆகமங்கள் மட்டுமே ஏற்புக்குரியவை. பத்து கட்டளைகள் மட்டுமே சட்டங்கள்
  • யூத பைபிள் கூறும் மண்டியிட்டு வணங்குதல், நறுமணப்பொருட்களைக்கொண்டு தூபமிடுதல், திருப்பலி அளித்தல் ஆகியவை வழிபாட்டில் தவிர்க்கமுடியாதவை
  • ஆல்டரின் முன் கைகளை நெஞ்சில் சேர்த்து வளைந்து வணங்கும் யூதமுறையே தேவை.
  • ஒயினுக்குப் பதிலாக புளிக்காத பழரசம் திருரத்தச் சடங்கில் பயன்படுத்தப்படவேண்டும்.
  • இந்திய முறைப்படி தரையில் விரிக்கப்பட்ட பாய்களில் அமர்ந்து ஏசுவை வழிபடலாம்.
  • ஆலய மணிகளுக்குப் பதிலாக எக்காளம் என்னும் கொம்புக்கருவியை பயன்படுத்தவேண்டும். பைபிளில் சொல்லப்பட்டது அதுவே.
  • ஆலயத்திற்குள் நுழையும்போது யூத முறைப்படி (இஸ்லாமியர் ஒளு என சொல்லும் முறை) கால்களையும் கைகளையும் முகத்தையும் கழுவிக்கொள்ளவேண்டும்.
  • ஆலயத்தில் ஆல்டரின் முன் உடல்நிலம்பட விழுந்து வணங்கவேண்டும்.
  • சனிக்கிழமைதான் சபாத் நாள் (Saturday Sabbath ), அன்றே வார வழிபாடு. அன்று உழைக்கலாகாது. சனிக்கிழமைக்கான உணவு வெள்ளி மாலை ஆறுமணிக்குள் சமைக்கப்படவேண்டும்.
  • திருநாட்களை கணிக்க யூத நாட்காட்டிக் கணிதமுறை கடைப்பிடிக்கப்படவேண்டும். கூடாரப் பண்டிகை, பஸ்கா பண்டிகை, பெந்தெகொஸ்தே பண்டிகை ஆகியவை மட்டுமே கொண்டாடப்படவேண்டும்.
  • இந்திய மரபின்படி கிறிஸ்தவ ஆலயங்களிலும் பெண்களுக்கு மாதவிலக்கு இருக்கும் நாட்களில் அவர்கள் ஆலயத்துக்கு வரவேண்டியதில்லை. பிரசவம், சாவு ஆகியவற்றின் விளைவான தீட்டு நாட்களில் அவை உடையவர்கள் ஆலயம் வரலாகாது.
  • குழந்தை ஞானஸ்நானம் தேவையில்லை. ஒருவர் அறிவும் சிந்தனையும் உருவானபின் இறைச்செய்தியை புரிந்துகொண்டு, தன்விருப்பத்தால், கிறிஸ்தவராக ஞானஸ்நானம் பெறவேண்டும்.
  • போதகர் அருட்பொழிவு தேவையில்லை. போதகர் என்னும் பதவியும் தேவையில்லை. இறையியல் அறிமுகம் கொண்ட எவரும் போதகராகலாம். ஒரு குழுவில் மூத்தவர், அல்லது இறையியல் அறிந்தவர் பிரார்த்தனையை நடத்தி வைக்கலாம். (இது யூத, இஸ்லாமிய மரபு)

ஏசு ரட்சகர் சபை ஆலயம்

நாசரேத் கிராமம் பிரகாசபுரத்தில் அருமைநாயகம் சட்டாம்பிள்ளை ’இயேசுபிரான் இந்து-கிறித்தவ ஆலயம்’ ( Hindu church of Lord Jesus) என்னும் வழிபாட்டிடத்தை நிறுவினார். 1886-ல் ஏக இரட்சகர் ஆலயம் மூக்குப்பீறியில் கட்டப்பட்டது. பின்னர் ஒய்யான்குடி, குளத்துக்குடியிருப்பு, சாலைப்புதூர் போன்ற இடங்களிலும் ஆலயங்கள் கட்டப்பட்டன. பின்னர் சென்னை, கோவை, சின்னாளப்பட்டி போன்ற ஊர்களில் கிளைகள் அமைந்தன.

புதிய ஆலயம் ஒன்று 29 செப்டெம்பர் 1943-ல் நிறுவப்பட்டது. இந்து கிறிஸ்தவ சபை என்றபெயர் இந்திய கிறிஸ்தவ சபை என மாற்றம் செய்யப்பட்டது.

இலக்கியப் பங்களிப்பு

அருமைநாயகம் சட்டம்பிள்ளை கிறிஸ்தவக் கீர்த்தனைகள் பலவற்றை எழுதினார். அவற்றில் 150 பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவை மட்டுமே இன்றும் அவர்களின் திருச்சபையில் பாடப்படுகின்றன

உதாரணப்பாடல்:

கர்த்தர் ஆளுகை செய்கிறார். காசினி பூரிப்பாகுமே

மெத்தவும் தீவுகள் மகிழுமே மேகமந்தாரம் சூழுமே

நீதி நியாயங்கள் கர்த்தரின் நியாயாசனத்தின் மூலமே

மேதும் அக்கினி அவற்கு முன்னர் விளங்கி நிற்குமே

தேக்கம்

அருமைநாயகம் சட்டாம்பிள்ளை தொடங்கிய மாற்று கிறிஸ்தவ இயக்கம் நடைமுறையில் வெற்றி பெறவில்லை. நாசரேத் - மூக்குப்பீறியை கடந்து அது பெரியதாக பரவவில்லை. இன்று ஏழு கிளைகள் மட்டுமே உள்ள சிறிய அமைப்பாக நீடிக்கிறது. அது தேக்கமுற்றதற்கான காரணங்கள்:-

  • அருமைநாயகம் அன்னிய நிதியுதவியை முழுமையாக நிராகரித்தார். ஆகவே அவருடைய சபைக்கு நிதியாதாரம் உருவாகவில்லை. பிற சபைகள் அளித்த கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சேவைகளையும் பொருளியல் நலன்களையும் அவரது சபையால் அளிக்க முடியவில்லை.
  • அருமைநாயகம் நாடார் சாதியினர் என்பதனால் அவருடைய சாதியின் துணைக்குழு தவிர பிறர் அவரை ஏற்கவில்லை.
  • அருமைநாயகம் தன் சபையை தொடங்கிய ஆண்டுதான் இந்தியாவில் சிப்பாய்க் கலகம் உருவானது. ஆகவே பிரிட்டிஷ் அரசு எல்லா தேசிய இயக்கங்களையும் ஐயத்துடன் கண்டு கடும் நடவடிக்கை எடுத்தது. அருமைநாயகம் மீது எஸ்.பி.ஜி உள்ளிட்ட ஆங்கிலக் கிறிஸ்தவ அமைப்புகள் தொடர்ச்சியாக புகார்களை முன்வைத்து அதில் சேர்பவர்களுக்கு அச்சமூட்டினர். ஆகவே பெருவாரியாக எளிய மக்கள் அதில் இணையவில்லை. ஆங்கில அரசின் பகைமையை ஈட்டிக்கொள்ள அஞ்சியவர்கள் அச்சபையை தவிர்த்தனர். ஆங்கில அரசுடன் இணைந்து செயல்பட பிற சீர்திருத்தச் சபைகளே உகந்தது என்னும் எண்ணம் பரவலாக இருந்தது.

செவந்த் டே அட்வெண்டிஸ்ட் சபை ஈடுபாடு

1893 ல் சிகாகோவில் நடைபெற்ற அனைத்து மத மாநாடு (அளசிங்கப் பெருமாள் முன்னெடுப்பில் இதில் சுவாமி விவேகானந்தர் கலந்துகொண்டார்) பற்றிய தகவல்கள் சென்னையில் பிரசுரமானபோது அதை அருமைநாயகம் கவனித்தார். அதில் செவந்த் டே அட்வெண்டிஸ்ட் என்னும் அமைப்பினரின் பேச்சு இருந்தது. யூத பைபிளின்படி சனிக்கிழமை பூசை கடைப்பிடிக்கும் கிறிஸ்தவர் எவருமில்லை என நினைத்திருந்த அருமைநாயகத்துக்கு செவந்த் டே அட்வெண்டிஸ்டுகளும் அம்முறையை கடைப்பிடிப்பவர்கள், யூத பைபிளை முதன்மையாகக் கருதுபவர்கள் என்னும் என்ணம் ஆர்வமூட்டியது. அவர் அவர்களின் நியூயார்க் கிளைக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அக்கடிதம் சிகாகோவில் பேட்டில் கிரீக் என்னும் ஊரில் இருந்த செவெந்த் டே அட்வெண்டிஸ்டுகளின் தலைமையகத்தை அடைந்தது. அதற்கு எஃப்.எம்.வுல்கக்ஸ் ( FM Woolcox) என்பவர் ஒரு பதிலையும். தங்கள் பிரச்சார நூல்களையும் அனுப்பி வைத்தார்.

1906ல், மினசோட்டாவைச் சேர்ந்த ஜே.எஸ். ஜேம்ஸ் தென்னிந்தியாவில் செவெந்த் டே அட்வெண்டிஸ்ட் அமைப்பின் மதப்பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் பெங்களூருக்கு வந்தார். ஜேம்ஸ் தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டு "உலகின் முடிவு நெருங்கிவிட்டதா?", "சப்பாத் எந்த நாள்?", "கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் அறிகுறிகள்" மற்றும் "புதிய ஏற்பாட்டு சப்பாத்" போன்ற சில துண்டுப்பிரசுரங்களை தமிழில் மொழிபெயர்த்தார். சட்டாம்பிள்ளை அவற்றைப் பெற்று ஆய்வு செய்து, அவற்றைப் பற்றி மேலும் விளக்கம் தேடினார். செவந்த் டே அட்வெண்டிஸ்டுகளுடன் அவர் அணுக்கமாக இருந்தார்.

1908 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் ஜி.எஃப். ஈனோச் (G. F. Enoch), ஜெ.எல். ஷா ( J. L. Shaw) இருவரும் நசரேத்தை அடைந்தனர். அவர்களுக்கு எசு ரட்சகர் சபையைச் சேர்ந்தவர்கள் வரவேற்பளித்தனர். ஜேம்ஸ் நசரேத்தில் இறைப்பணி புரிய முடிவெடுத்தார். ஜூலை 2, 1908ல் ஏசு ரட்சகர் சபை ஜேம்ஸுக்கு 1000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியது. பிரகாசபுரத்தில் தென்னிந்தியாவில் செவன்த்-டே அட்வென்டிஸ்டுகளின் முதல் தேவாலயம் 50 உறுப்பினர்களுடன் 1915 ஜனவரி 30 அன்று தொடங்கப்பட்டது. 1908 ஆம் ஆண்டு முதல்தான் அது முறையாகச் செயல்பட ஆரம்பித்தது. ஜேம்ஸ் மற்றும் சிஜி லாரி வழிபாட்டை நடத்தினர். செவந்த் டே அட்வென்டிஸ்ட் சர்ச் பிரகாசபுரத்தில் ஜேம்ஸ் மெமோரியல் பள்ளி என்ற பெயரில் ஒரு கல்வி நிறுவனத்தையும் தொடங்கியது .

மதிப்பீடு

அருமைநாயகம் சட்டம்பிள்ளை இந்திய கிறிஸ்தவ இறையியலாளர்களில் முன்னோடிகளில் ஒருவர். கிறிஸ்தவத்தின் ஐரோப்பிய வடிவத்தை நிராகரித்து அதன் தொல்வடிவை மீட்டெடுக்க முயன்றவர். இந்தியாவின் பண்பாட்டை நிராகரிக்காமல் ஏசுவின் வழி மீட்பு என்னும் கிறிஸ்தவக் கருத்தியலை ஏற்றுக்கொள்ளும் ஒரு கிறிஸ்தவ இறையியலை உருவாக்கினார். பிதா-சுதன்-ஆவி என்னும் திரித்துவத்தை முதன்மைப்படுத்தும் வழிபாட்டு மரபை கட்டமைத்தார்.

ஆங்கில ஏகாதிபத்தியம் மற்றும் இனவாதத்துக்கு எதிராக இந்தியாவில் உருவான தேசிய எதிர்ப்புக் கருத்தியல்களில் முன்னோடியானது அருமைநாயகத்தின் இந்து கிறிஸ்தவம் என்னும் கொள்கை. இந்திய தேசிய மறுமலர்ச்சியை உருவாக்கிய தொடக்ககால தேசிய தன்னுணர்வு இயக்கங்களில் குறிப்பிடத்தக்கது. ஆனால் பெரிதாகக் கவனிக்கப்படவோ ஆவணப்படுத்தப்படவோ இல்லை.

தேசியத்தன்னுணர்வு என்னும் அடிப்படையை மட்டும் கொண்டு அருமைநாயகத்தின் இயக்கத்தை பெருமளவு ஐயா வைகுண்டர் தொடங்கிய ஐயாவழி இயக்கத்துடன் ஒப்பிடலாம்

நூல்கள்

  • A Brief Sketch of the Hindu Christian Dogmas, 1890.
  • ருத்ரம்மாவை 1884. ரூத்தின்பாடல் மொழியாக்கம்
  • இசைப்பாடல் தொகுப்பு (150 கீர்த்தனைகள்)

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Nov-2024, 21:11:59 IST