வெள்ளெருக்கிலையார்: Difference between revisions

From Tamil Wiki
; Added info on Finalised date
Corrected typo errors;
Line 2: Line 2:


== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
வெள்ளெருக்கிலையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் வேளிர் குலத்தில் பிறந்த ’வேள் எவ்வி’ என்ற வள்ளலிடம் அன்புடையவராக இருந்தார் என்பதை பாடல்கள் வழியாக அறிய முடிகிறது. வேள் எவ்வியைப் பற்றி கபிலர், குடவாயிற் கீரத்தனார், நக்கீரர், [[பரணர்]], [[மாங்குடி கிழார்|மாங்குடிகிழார்]], மாமூலனார் போன்ற புலவர்களும் பாடியுள்ளதால் வெள்ளெருக்கிலையார் இவர்களின் சமகாலப் புலவர் என அறிஞர்கள் ஊகிக்கின்றனர்.
வெள்ளெருக்கிலையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் வேளிர் குலத்தில் பிறந்த 'வேள் எவ்வி' என்ற வள்ளலிடம் அன்புடையவராக இருந்தார் என்பதை பாடல்கள் வழியாக அறிய முடிகிறது. வேள் எவ்வியைப் பற்றி கபிலர், குடவாயிற் கீரத்தனார், நக்கீரர், [[பரணர்]], [[மாங்குடி கிழார்|மாங்குடிகிழார்]], மாமூலனார் போன்ற புலவர்களும் பாடியுள்ளதால் வெள்ளெருக்கிலையார் இவர்களின் சமகாலப் புலவர் என அறிஞர்கள் ஊகிக்கின்றனர்.


==இலக்கிய வாழ்க்கை==
==இலக்கிய வாழ்க்கை==

Revision as of 16:02, 22 November 2025

வெள்ளெருக்கிலையார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் புறநானூற்றில் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

வெள்ளெருக்கிலையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் வேளிர் குலத்தில் பிறந்த 'வேள் எவ்வி' என்ற வள்ளலிடம் அன்புடையவராக இருந்தார் என்பதை பாடல்கள் வழியாக அறிய முடிகிறது. வேள் எவ்வியைப் பற்றி கபிலர், குடவாயிற் கீரத்தனார், நக்கீரர், பரணர், மாங்குடிகிழார், மாமூலனார் போன்ற புலவர்களும் பாடியுள்ளதால் வெள்ளெருக்கிலையார் இவர்களின் சமகாலப் புலவர் என அறிஞர்கள் ஊகிக்கின்றனர்.

இலக்கிய வாழ்க்கை

வெள்ளெருக்கிலையார் பாடிய இரண்டு பாடல்கள் புறநானூற்றில் 233, 234 ஆகிய பாடல்களாக அமைந்துள்ளன. இந்த இரண்டு பாடல்களும் வேள் எவ்வி என்னும் வள்ளல் இறந்தபின் பாடிய கையறு நிலைப் பாடல்களாக உள்ளன.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • கூடல் என்ற கடல் சார்ந்த ஊரின் மன்னர் அகுதை பகைவர்களின் சக்கரப்படையால் மார்பு தாக்கப்பட்டு பெரும்புண்ணுடன் கிடந்தார் என்னும் செய்தி பரவியது. அது பின்னர் பொய்த்த செய்தியாக ஆனது.
  • சடங்கு: இறந்த கணவனுக்கு சடங்கு செய்யும் அவனது மனைவி யானையின் காலடி அளவு இடத்தை மெழுகுவாள். அதன்மேல் தருப்பைப் புல்லை வைப்பாள். அந்தப் புல்லின்மேல் சோற்றுப்பிண்டம் வைத்து இறந்த அவளது கணவனுக்குப் படைப்பாள். வேள் எவ்வி இறந்தபின் அவரின் மனைவி அவ்வாறான சடங்கைச் செய்ததை பாடல் வழி அறிய முடிகிறது.
வேள் எவ்வி

வேள் எவ்வி வேள் பாரியைப் போல் வேளிர் குலத்தில் தோன்றியவர். நீடூர் என்னும் ஊரிலிருந்து ஆட்சி செய்தார். நீடூர் என்னும் ஊர் அறந்தாங்கி வட்டத்துத் தென்பகுதியையும் இராமநாதபுர வட்டத்தின் கீழ்ப்பகுதியையும் கொண்டது என அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை கூறினார். எவ்வி பகைவர்களை அழிக்கும் சிறந்த வாள் படையும் வேற்படையும் கொண்டவனாக இருந்தார். புலவர்களையும் பாணர்களையும் பெரிதும் ஆதரித்தார். தன்னிடம் பரிசில் நாடி வந்தவர்களுக்கு யானைகளைத் தாராளமாக வழங்கினார். எவ்வி தனியே உண்ணாமல் பலரோடு சேர்ந்தே உண்ணும் பழக்கம் உள்ளவர். பெரும்பாண் எனப்படும் பாணர்களின் பெருங்கூட்டத்தின் உறவினர்களுக்குத் தலைவன் என்பதால் 'பெரும்பூண் எவ்வி' என்று அழைக்கப்பட்டார்.

பாடல் நடை

  • புறநானூறு 233

(திணை: பொதுவியல்) (துறை: கையறு நிலை)

பொய்யா கியரோ பொய்யா கியரோ
பாவடி யானை பரிசிலர்க்கு அருகாச்
சீர்கெழு நோன்றாள் அகுதைகண் தோன்றிய
பொன்புனை திகிரியின் பொய்யா கியரோ
இரும்பாண் ஒக்கல் தலைவன், பெரும்பூண்
போர்அடு தானை எவ்வி மார்பின்
எஃகுஉறு விழுப்புண் பலஎன
வைகுறு விடியல் இயம்பிய குரலே.

  • புறநானூறு 234

(திணை: பொதுவியல்) (துறை: கையறு நிலை)

நோகோ யானே? தேய்கமா காலை!
பிடி அடி அன்ன சிறு வழி மெழுகி,
தன் அமர் காதலி புல் மேல் வைத்த
இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன்கொல்
உலகு புகத் திறந்த வாயில்
பலரோடு உண்டல் மரீஇயோனே?

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Sep-2024, 18:40:15 IST