சாத்தந்தையார்: Difference between revisions
SakthivelS (talk | contribs) Created page with "சாத்தந்தையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல்கள் ஐந்து. புறநானூறில் நான்கு பாடல்களும் நற்றிணையில் ஒரு பாடலும் இடம்பெற்றுள்ளன. =..." |
Normalized selected wikitext line breaks; |
||
| (4 intermediate revisions by 3 users not shown) | |||
| Line 3: | Line 3: | ||
சாத்தந்தையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். சாத்தன் என்பானுக்கு தந்தை என்ற பொருளில் சாத்தந்தையார் என்று அழைப்பது பழங்கால தமிழ் மரபு. அவ்வழக்கத்தையொட்டி இப்பெயர் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. | சாத்தந்தையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். சாத்தன் என்பானுக்கு தந்தை என்ற பொருளில் சாத்தந்தையார் என்று அழைப்பது பழங்கால தமிழ் மரபு. அவ்வழக்கத்தையொட்டி இப்பெயர் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. | ||
==இலக்கிய வாழ்க்கை== | ==இலக்கிய வாழ்க்கை== | ||
சாத்தந்தையார் பாடிய ஐந்து பாடல்கள் [[புறநானூறு|புறநானூறில்]] 80, 81, 82 மற்றும் 287 | சாத்தந்தையார் பாடிய ஐந்து பாடல்கள் [[புறநானூறு|புறநானூறில்]] 80, 81, 82 மற்றும் 287 - ம் எண் கொண்ட பாடல்களாகவும் [[நற்றிணை|நற்றிணையில்]] 26 - ம் பாடலாகவும் இடம்பெற்றுள்ளன. இவர் பாடிய நான்கு புறநானூற்று பாடல்களும் சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளியின் போர்த்திறம், படை வலிமை, கொடை சிறப்பு ஆகியவற்றை சிறப்பித்து கூறுகின்றன. 80-ம் பாடல் [[தும்பைத் திணை|தும்பைத் திணையிலும்]] 81, 82-ம் பாடல்கள் [[வாகைத் திணை|வாகைத் திணையிலும்]] 287-ம் பாடல் [[கரந்தைத் திணை|கரந்தைத் திணையிலும்]] அமைந்துள்ளன. நற்றிணை 26-ம் பாடல் தலைவனின் பிரிவால் வேதனையுற்ற தலைவியின் நிலையைத் தலைவனிடம் தோழி கூறுவதாக [[பாலைத் திணை|பாலைத் திணையில்]] அமைந்துள்ளது. | ||
==பாடல் வழி அறியவரும் செய்திகள்== | ==பாடல் வழி அறியவரும் செய்திகள்== | ||
======புறநானூறு====== | ======புறநானூறு====== | ||
* சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி தித்தன் என்பவனின் மகன். சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி ஆமூர் என்னும் ஊரில் உள்ள வலிமை மிக்க மல்லனை எதிர்த்து போரிட்டு வென்றான். கோப்பெருநற்கிள்ளி மல்லனை யானை மூங்கிலை வளைத்து ஒடிப்பது போல எளிதாக | |||
* சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி பெரிய அளவிலான காலாட்படையும் யானைப்படையும் உடையவன். ஆத்தி மாலையை சூடியவன். இரவலருக்கு தயங்காது கொடுக்கும் செல்வ வளமும் கொடை வன்மையும் கொண்டவன். போர்க்களத்தில் அவன் படையினர் கடலலை போல் ஓசையெழுப்புவர். யானைகள் கார்மேகம் சூழ்ந்து இடி மின்னுவது போல பிளிறும். | *சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி தித்தன் என்பவனின் மகன். சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி ஆமூர் என்னும் ஊரில் உள்ள வலிமை மிக்க மல்லனை எதிர்த்து போரிட்டு வென்றான். கோப்பெருநற்கிள்ளி மல்லனை யானை மூங்கிலை வளைத்து ஒடிப்பது போல எளிதாக வீழ்த்திக் கொன்றான். மல்லனின் மார்பு மேல் காலூன்றி நின்றான். | ||
* சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி போர்களத்தில் எதிரி வீரனை தாக்கும் வேகத்தை | *சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி பெரிய அளவிலான காலாட்படையும் யானைப்படையும் உடையவன். ஆத்தி மாலையை சூடியவன். இரவலருக்கு தயங்காது கொடுக்கும் செல்வ வளமும் கொடை வன்மையும் கொண்டவன். போர்க்களத்தில் அவன் படையினர் கடலலை போல் ஓசையெழுப்புவர். யானைகள் கார்மேகம் சூழ்ந்து இடி மின்னுவது போல பிளிறும். | ||
* போரில் வீரமரணம் எய்தும் வீரனின் குடும்பத்தினருக்கு அரசர்கள் அவனது வீரத்தை சிறப்பித்து வளம் மிக்க விளைநிலத்தை வெகுமதியாக வழங்குவர். அந்நிலத்தால் இறந்த வீரனுக்கு பயனில்லை. அவன் மேலுலகத்தில் மகளிரை மணந்து இன்பம் பெற வேண்டியது தான் என்ற கருத்து மக்களிடையே நிலவி உள்ளது. வெகுமதியாக வழங்கப்படும் நெல் விளையும் நிலத்தருகே உள்ள குளத்தில் இருக்கும் வாளைமீன்கள் வயலில் புரண்டு விளையாடும் அளவுக்கு வளம் மிக்க நிலமது. | *சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி போர்களத்தில் எதிரி வீரனை தாக்கும் வேகத்தை குறிப்புணர்த்திக் காட்ட இரு உவமைகள் கூறப்படுகின்றன. மனைவிக்கு மகப்பேற்று வலி வந்துவிட்டது என்றவுடன் குழந்தை பிறப்பைக் கக்ச் செல்லும் இளந்தந்தையின் ஆர்வமும் வேகமும் கொண்டிருப்பான். கயிற்றுக் கட்டிலைப் பின்னும் தொழிலாளி மாலைப் பொழுதானதை உணர்ந்தவுடன் வீட்டிற்கு செல்லும் அவசரத்தில் கையில் ஊசியை பயன்படுத்தி விரைந்து கட்டிலைப் பின்னும் வேகத்தை ஒத்திருக்கும் கோப்பெருநற்கிள்ளியின் போர் தாக்குதல். | ||
* போர்க்களத்தில் வீரர்கள் வில்லம்புகள், கைவேல்கள், யானைகளின் தந்தங்கள் ஆகியவற்றால் தாக்கப்பட்டு இறப்பர். இக்காட்சிக்கு உவமைகளாக அம்பு தாக்குதலை மழை பொழிவாகவும் வேலால் குத்தப்படுதலை வயலில் புரளும் கெண்டை மீனாகவும் வர்ணிக்கப்பட்டுள்ளது. யானைகளின் தந்தங்களுக்கு பொன்னணி பூணூம் வழக்கம் இருந்துள்ளதை பாடல் வழி அறிய முடிகிறது. | *போரில் வீரமரணம் எய்தும் வீரனின் குடும்பத்தினருக்கு அரசர்கள் அவனது வீரத்தை சிறப்பித்து வளம் மிக்க விளைநிலத்தை வெகுமதியாக வழங்குவர். அந்நிலத்தால் இறந்த வீரனுக்கு பயனில்லை. அவன் மேலுலகத்தில் மகளிரை மணந்து இன்பம் பெற வேண்டியது தான் என்ற கருத்து மக்களிடையே நிலவி உள்ளது. வெகுமதியாக வழங்கப்படும் நெல் விளையும் நிலத்தருகே உள்ள குளத்தில் இருக்கும் வாளைமீன்கள் வயலில் புரண்டு விளையாடும் அளவுக்கு வளம் மிக்க நிலமது. | ||
*போர்க்களத்தில் வீரர்கள் வில்லம்புகள், கைவேல்கள், யானைகளின் தந்தங்கள் ஆகியவற்றால் தாக்கப்பட்டு இறப்பர். இக்காட்சிக்கு உவமைகளாக அம்பு தாக்குதலை மழை பொழிவாகவும் வேலால் குத்தப்படுதலை வயலில் புரளும் கெண்டை மீனாகவும் வர்ணிக்கப்பட்டுள்ளது. யானைகளின் தந்தங்களுக்கு பொன்னணி பூணூம் வழக்கம் இருந்துள்ளதை பாடல் வழி அறிய முடிகிறது. | |||
======நற்றிணை====== | ======நற்றிணை====== | ||
* வளமிக்க வீட்டார் நெல்லை சேமித்து வைக்கும் குதிர் என்னும் கொள்கலன் | *வளமிக்க வீட்டார் நெல்லை சேமித்து வைக்கும் குதிர் என்னும் கொள்கலன் மலையைப் போல அகலமான அடிப்பகுதியும் உயரத்தில் குவிந்தும் உயரமாக காணப்படும். அதன் நெற்குதிரின் புறப்பகுதியில் புள்ளிகள் காணப்படும். நெற்குதிரில் நிரம்ப நெல் கொட்டி வைத்திருப்பர் செல்வந்தர்கள். | ||
* செல்வந்தர் வீட்டு பெண்கள் தம் இல்லத்தாரின் வளத்தையும் கருதாது காதல் கொண்ட ஆண் மகன் மேலுள்ள பிரியத்தால் வெயில் காயும் பலாமரங்கள் செறிந்த காட்டில் தனியாக தமக்கு பிடித்தமான ஆணுடன் உடன்போகும் வழக்கம் இருந்துள்ளது. | *செல்வந்தர் வீட்டு பெண்கள் தம் இல்லத்தாரின் வளத்தையும் கருதாது காதல் கொண்ட ஆண் மகன் மேலுள்ள பிரியத்தால் வெயில் காயும் பலாமரங்கள் செறிந்த காட்டில் தனியாக தமக்கு பிடித்தமான ஆணுடன் உடன்போகும் வழக்கம் இருந்துள்ளது. | ||
* தாம் காதல் கொண்ட ஆணால் கைவிடப்பட்ட பெண், துயரத்தால் உடல் | *தாம் காதல் கொண்ட ஆணால் கைவிடப்பட்ட பெண், துயரத்தால் உடல் இளைத்துக் காணப்படுவாள். பெண்களின் உடல் அழகுக்கு இலக்கணமாக கூரிய வெண்பல் வரிசையும் நீண்ட கருங்கூந்தலும் பொன்னிற சுணங்கு அரும்பிய முலைகளும் கருதப்பட்டுள்ளன. | ||
==பாடல் நடை== | ==பாடல் நடை== | ||
====புறநானூறு - 81==== | ====புறநானூறு - 81==== | ||
* திணை: வாகை | *திணை: வாகை | ||
* துறை: அரச வாகை | *துறை: அரச வாகை | ||
<poem> | <poem> | ||
ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே | ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே | ||
| Line 27: | Line 28: | ||
</poem> | </poem> | ||
====நற்றிணை - 26==== | ====நற்றிணை - 26==== | ||
* திணை: பாலை | *திணை: பாலை | ||
* கூற்று: தலைவி பிரிவுணர்ந்து வேறுபட்டமை சொல்லித் தோழி செலவழுங்குவித்தது. | *கூற்று: தலைவி பிரிவுணர்ந்து வேறுபட்டமை சொல்லித் தோழி செலவழுங்குவித்தது. | ||
<poem> | <poem> | ||
நோகோ யானே; நெகிழ்ந்தன வளையே- | நோகோ யானே; நெகிழ்ந்தன வளையே- | ||
| Line 47: | Line 48: | ||
*[https://puram400.blogspot.com/2011/10/287.html புறநானூறு - 287:puram400] | *[https://puram400.blogspot.com/2011/10/287.html புறநானூறு - 287:puram400] | ||
*[https://www.tamilvu.org/node/154572?linkid=18325 நற்றிணை - 26:Tamilvu] | *[https://www.tamilvu.org/node/154572?linkid=18325 நற்றிணை - 26:Tamilvu] | ||
{{Finalised}} | |||
{{Fndt|27-Jan-2026, 15:19:09 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Latest revision as of 23:58, 11 October 2026
சாத்தந்தையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல்கள் ஐந்து. புறநானூறில் நான்கு பாடல்களும் நற்றிணையில் ஒரு பாடலும் இடம்பெற்றுள்ளன.
வாழ்க்கை குறிப்பு
சாத்தந்தையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். சாத்தன் என்பானுக்கு தந்தை என்ற பொருளில் சாத்தந்தையார் என்று அழைப்பது பழங்கால தமிழ் மரபு. அவ்வழக்கத்தையொட்டி இப்பெயர் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இலக்கிய வாழ்க்கை
சாத்தந்தையார் பாடிய ஐந்து பாடல்கள் புறநானூறில் 80, 81, 82 மற்றும் 287 - ம் எண் கொண்ட பாடல்களாகவும் நற்றிணையில் 26 - ம் பாடலாகவும் இடம்பெற்றுள்ளன. இவர் பாடிய நான்கு புறநானூற்று பாடல்களும் சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளியின் போர்த்திறம், படை வலிமை, கொடை சிறப்பு ஆகியவற்றை சிறப்பித்து கூறுகின்றன. 80-ம் பாடல் தும்பைத் திணையிலும் 81, 82-ம் பாடல்கள் வாகைத் திணையிலும் 287-ம் பாடல் கரந்தைத் திணையிலும் அமைந்துள்ளன. நற்றிணை 26-ம் பாடல் தலைவனின் பிரிவால் வேதனையுற்ற தலைவியின் நிலையைத் தலைவனிடம் தோழி கூறுவதாக பாலைத் திணையில் அமைந்துள்ளது.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
புறநானூறு
- சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி தித்தன் என்பவனின் மகன். சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி ஆமூர் என்னும் ஊரில் உள்ள வலிமை மிக்க மல்லனை எதிர்த்து போரிட்டு வென்றான். கோப்பெருநற்கிள்ளி மல்லனை யானை மூங்கிலை வளைத்து ஒடிப்பது போல எளிதாக வீழ்த்திக் கொன்றான். மல்லனின் மார்பு மேல் காலூன்றி நின்றான்.
- சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி பெரிய அளவிலான காலாட்படையும் யானைப்படையும் உடையவன். ஆத்தி மாலையை சூடியவன். இரவலருக்கு தயங்காது கொடுக்கும் செல்வ வளமும் கொடை வன்மையும் கொண்டவன். போர்க்களத்தில் அவன் படையினர் கடலலை போல் ஓசையெழுப்புவர். யானைகள் கார்மேகம் சூழ்ந்து இடி மின்னுவது போல பிளிறும்.
- சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி போர்களத்தில் எதிரி வீரனை தாக்கும் வேகத்தை குறிப்புணர்த்திக் காட்ட இரு உவமைகள் கூறப்படுகின்றன. மனைவிக்கு மகப்பேற்று வலி வந்துவிட்டது என்றவுடன் குழந்தை பிறப்பைக் கக்ச் செல்லும் இளந்தந்தையின் ஆர்வமும் வேகமும் கொண்டிருப்பான். கயிற்றுக் கட்டிலைப் பின்னும் தொழிலாளி மாலைப் பொழுதானதை உணர்ந்தவுடன் வீட்டிற்கு செல்லும் அவசரத்தில் கையில் ஊசியை பயன்படுத்தி விரைந்து கட்டிலைப் பின்னும் வேகத்தை ஒத்திருக்கும் கோப்பெருநற்கிள்ளியின் போர் தாக்குதல்.
- போரில் வீரமரணம் எய்தும் வீரனின் குடும்பத்தினருக்கு அரசர்கள் அவனது வீரத்தை சிறப்பித்து வளம் மிக்க விளைநிலத்தை வெகுமதியாக வழங்குவர். அந்நிலத்தால் இறந்த வீரனுக்கு பயனில்லை. அவன் மேலுலகத்தில் மகளிரை மணந்து இன்பம் பெற வேண்டியது தான் என்ற கருத்து மக்களிடையே நிலவி உள்ளது. வெகுமதியாக வழங்கப்படும் நெல் விளையும் நிலத்தருகே உள்ள குளத்தில் இருக்கும் வாளைமீன்கள் வயலில் புரண்டு விளையாடும் அளவுக்கு வளம் மிக்க நிலமது.
- போர்க்களத்தில் வீரர்கள் வில்லம்புகள், கைவேல்கள், யானைகளின் தந்தங்கள் ஆகியவற்றால் தாக்கப்பட்டு இறப்பர். இக்காட்சிக்கு உவமைகளாக அம்பு தாக்குதலை மழை பொழிவாகவும் வேலால் குத்தப்படுதலை வயலில் புரளும் கெண்டை மீனாகவும் வர்ணிக்கப்பட்டுள்ளது. யானைகளின் தந்தங்களுக்கு பொன்னணி பூணூம் வழக்கம் இருந்துள்ளதை பாடல் வழி அறிய முடிகிறது.
நற்றிணை
- வளமிக்க வீட்டார் நெல்லை சேமித்து வைக்கும் குதிர் என்னும் கொள்கலன் மலையைப் போல அகலமான அடிப்பகுதியும் உயரத்தில் குவிந்தும் உயரமாக காணப்படும். அதன் நெற்குதிரின் புறப்பகுதியில் புள்ளிகள் காணப்படும். நெற்குதிரில் நிரம்ப நெல் கொட்டி வைத்திருப்பர் செல்வந்தர்கள்.
- செல்வந்தர் வீட்டு பெண்கள் தம் இல்லத்தாரின் வளத்தையும் கருதாது காதல் கொண்ட ஆண் மகன் மேலுள்ள பிரியத்தால் வெயில் காயும் பலாமரங்கள் செறிந்த காட்டில் தனியாக தமக்கு பிடித்தமான ஆணுடன் உடன்போகும் வழக்கம் இருந்துள்ளது.
- தாம் காதல் கொண்ட ஆணால் கைவிடப்பட்ட பெண், துயரத்தால் உடல் இளைத்துக் காணப்படுவாள். பெண்களின் உடல் அழகுக்கு இலக்கணமாக கூரிய வெண்பல் வரிசையும் நீண்ட கருங்கூந்தலும் பொன்னிற சுணங்கு அரும்பிய முலைகளும் கருதப்பட்டுள்ளன.
பாடல் நடை
புறநானூறு - 81
- திணை: வாகை
- துறை: அரச வாகை
ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே
கார்ப் பெயல் உருமின் முழங்கல் ஆனாவே;
யார்கொல் அளியர்தாமே ஆர் நார்ச்
செறியத் தொடுத்த கண்ணிக்
கவி கை மள்ளன் கைப்பட்டோரே?
நற்றிணை - 26
- திணை: பாலை
- கூற்று: தலைவி பிரிவுணர்ந்து வேறுபட்டமை சொல்லித் தோழி செலவழுங்குவித்தது.
நோகோ யானே; நெகிழ்ந்தன வளையே-
செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரை
விண்டுப் புரையும் புணர் நிலை நெடுங் கூட்டுப்
பிண்ட நெல்லின் தாய் மனை ஒழிய,
சுடர் முழுது எறிப்பத் திரங்கிச் செழுங் காய்
முட முதிர் பலவின் அத்தம், நும்மொடு
கெடு துணை ஆகிய தவறோ?-வை எயிற்று,
பொன் பொதிந்தன்ன சுணங்கின்,
இருஞ் சூழ் ஓதி, பெருந் தோளாட்கே.
உசாத்துணை
- சங்க இலக்கிய பொருட்களஞ்சியம் - 3:தமிழ் பல்கலைகழகம்
- புறநானூறு - 80:puram400
- புறநானூறு - 81:puram400
- புறநானூறு - 82:puram400
- புறநானூறு - 287:puram400
- நற்றிணை - 26:Tamilvu
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Jan-2026, 15:19:09 IST