அடியார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
 
(One intermediate revision by the same user not shown)
Line 7: Line 7:
அடியார், எஸ்.எஸ். ராஜேந்திரனுக்காக ஆயத்தம் செய்யப்பட்ட 'தமிழ் எங்கள் உயிர்' என்ற நாடகத்தின் மூலம் நாடகம் எழுதப் பயிற்சி பெற்றார். பல நாடகங்களை எழுதி,இயக்கி, நடித்தார்.  பல நாடக மன்றங்களை அமைத்து எஸ்.எஸ். ராஜேந்திரன் உள்ளிட்ட பலருக்கு நடிப்புப் பயிற்சி அளித்தார்.

=====பங்களித்த நாடகங்கள்=====  
=====பங்களித்த நாடகங்கள்=====

*அண்ணா ஒரு காவியம்
*அண்ணா ஒரு காவியம்

Latest revision as of 15:47, 12 October 2026

அடியார் (பிறப்பு: 1936) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பேச்சாளர், நாடக, திரைப்படக் கதாசிரியர், நடிகர், இயக்குநர். பல நாடகங்களை எழுதி, நடித்து, இயக்கினார். நடிகர்கள் பலருக்கு நாடகப் பயிற்சி அளித்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

அடியார், 1936-ல், கோவை மாவட்டம் திருப்பூரில், சி. வேங்கடாசலம் - அம்மணி அம்மாள் இணையருக்குப் பிறந்தார்.

நாடக வாழ்க்கை

அடியார், எஸ்.எஸ். ராஜேந்திரனுக்காக ஆயத்தம் செய்யப்பட்ட 'தமிழ் எங்கள் உயிர்' என்ற நாடகத்தின் மூலம் நாடகம் எழுதப் பயிற்சி பெற்றார். பல நாடகங்களை எழுதி,இயக்கி, நடித்தார். பல நாடக மன்றங்களை அமைத்து எஸ்.எஸ். ராஜேந்திரன் உள்ளிட்ட பலருக்கு நடிப்புப் பயிற்சி அளித்தார்.

பங்களித்த நாடகங்கள்
  • அண்ணா ஒரு காவியம்
  • தங்கப் பதக்கம்
  • நெஞ்சத்தில் நீ
  • முரசே முழங்கு
  • காகிதப்பூ

மற்றும் பல

திரைப்படம்

அடியார், திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். கதாசிரியராகப் பணியாற்றினார். நடிகராகப் பங்களித்தார். சில திரைப்படங்களை இயக்கினார்.

இதழியல்

அடியார் முரசொலி, நீட்டோலை, நீதியின் குரல், நீரோட்டம், தங்கக்கழுகு போன்ற இதழ்களில் உதவி ஆசிரியராகவும், ஆசிரியராகவும் செயல்பட்டார்.

விருது

  • சென்னை புரட்சிக் கவிஞர் மன்றம் அளித்த 'இலக்கியத் தென்றல்' பட்டம்.
  • தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம் அளித்த 'கலைமாமணி' பட்டம்.

மதிப்பீடு

கவிதை, நாடகம், திரைப்படம் ஆகியவற்றில் பங்களித்த தமிழ்நாட்டின் முன்னோடிக் கலைஞர்களுள் ஒருவராகவும், நாடகப் பயிற்சியாளராகவும் அடியார் மதிப்பிடப்படுகிறார்.

உசாத்துணை

நாடகக் களஞ்சியம் தொகுதி ஒன்று, முதன்மைப் பதிப்பாசிரியர்: பேராசிரியர், முனைவர் சி. நயினார் முகம்மது, தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர், முதல் பதிப்பு: டிசம்பர் 1994.

‎

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Jan-2025, 08:07:31 IST