க. அண்ணாமலை: Difference between revisions
Added: Category:இதழாளர் |
Added: Category:கவிஞர் |
||
| Line 47: | Line 47: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:இதழாளர்]] | [[Category:இதழாளர்]] | ||
[[Category:கவிஞர்]] | |||
Latest revision as of 00:34, 21 December 2025
க. அண்ணாமலை (கன்னியப்பன் அண்ணாமலை; புலவர் அண்ணாமலை) (பிறப்பு: நவம்பர் 20, 1932) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், நாடக ஆசிரியர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். சிறார் நூல்களையும், பொது வாசிப்புக்குரிய நூல்களையும் எழுதினார்.
பிறப்பு, கல்வி
க. அண்ணாமலை, நவம்பர் 20, 1932 அன்று, சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில், சி.கன்னியப்பன் - பாக்கியம் இணையருக்குப் பிறந்தார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். கல்வியியலில் இளநிலை பட்டம் (பி.எட்.) பெற்றார்.
தனி வாழ்க்கை
க. அண்ணாமலை, தமிழாசிரியராகப் பணியாற்றினார். மணமானவர்.
இலக்கிய வாழ்க்கை
க. அண்ணாமலை சிறார்களுக்கான பாடல்கள், கதைகள், கட்டுரைகளை எழுதினார். 60-க்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதினார்.
இதழியல்
க. அண்ணாமலை, 'பாசறை' என்ற இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.
நாடகம்
க. அண்ணாமலை, சிறார்களுக்கான பல நாடகங்களை எழுதினார்.
ஊடகம்
க. அண்ணாமலை, வானொலி மற்றும் தொலைக்காட்சிக்காகப் பல நாடகங்களை எழுதினார்.
விருதுகள்/பரிசுகள்
குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய நாடகப் போட்டியில் இரண்டாம் பரிசு - ஒரு செடியில் பூத்த மலர்கள்
மதிப்பீடு
க. அண்ணாமலை, தணிகை உலகநாதன், ஆலந்தூர் கோ. மோகனரங்கன், பூவண்ணன் போன்ற சிறார் இலக்கிய எழுத்தாளர்களுள் ஒருவராகவும், சிறார்களுக்காகப் பல நாடகங்களை எழுதியவராகவும் அறியப்படுகிறார்.
நூல்கள்
- கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் (வரலாற்று நாடகம்)
- தொலைக்காட்சி நாடகங்கள்
- பள்ளிச் சிறுவர்களுக்குப் பயனுள்ள நாடகங்கள்
- புனிதமிக்க பாரதம்
- புண்ணியம் கோடி (வயதுவந்தோர் கல்வி நாடகம்)
- சிறுவர்களுக்கான பள்ளி நாடகங்கள்
- அருமையான பள்ளி நாடகங்கள்
- நகைச் சுவையூட்டும் பள்ளி நாடகங்கள்
- சிறுவர்களுக்கான நாடகங்கள்
- ஒரு செடியில் பூத்த மலர்கள்
உசாத்துணை
- நாடகக் களஞ்சியம் தொகுதி ஒன்று, முதன்மைப் பதிப்பாசிரியர்: பேராசிரியர், முனைவர் சி. நயினார் முகம்மது, தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர், முதல் பதிப்பு: டிசம்பர் 1994.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Jan-2025, 08:15:47 IST