வீரை வெளியனார்: Difference between revisions

From Tamil Wiki
Corrected typo errors;
Normalized selected wikitext line breaks;
 
(One intermediate revision by the same user not shown)
Line 12: Line 12:


== பாடல் நடை==
== பாடல் நடை==
====புறநானூறு - 320====  
====புறநானூறு - 320====
*திணை: வாகை      துறை: வல்லாண் முல்லை
*திணை: வாகை      துறை: வல்லாண் முல்லை
<poem>
<poem>
Line 39: Line 40:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்]]

Latest revision as of 23:57, 11 October 2026

வீரை வெளியனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று புறநானூறில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

வீரை வெளியனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். வீரை என்ற ஊரில் பிறந்தவராக இருக்கலாம் என்று ஒரு ஊகம் இருக்கிறது.

இலக்கிய வாழ்க்கை

வீரை வெளியனார் பாடிய பாடல் புறநானூறில் 320-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. வேடர் தலைவன் ஒருவனின் மனைவியின் நற்பண்பினை எடுத்து கூறுவதாக வாகைத் திணையில் வல்லாண் முல்லை துறையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • யானையை வேட்டையாடும் திறன்மிக்க வேடன் தன் வீட்டு முற்றத்தில் வளர்ந்துள்ள பலாமரத்தின் கீழ் இடப்பட்ட முன்னை கொடியாலும் முசுண்டைக் கொடியாலுமான நிழற்பந்தலுக்கு கீழ் உறங்கும் காட்சி காட்டப்படுகிறது.
  • அருகே புதரில் கலைமான் ஒன்று பெண்மான் ஒன்றுடன் விளையாடி கொண்டிருப்பதை கண்ட வேடனின் மனைவி, தனது வீட்டு வேலைகளின் சத்தத்தால் கணவனின் தூக்கம் கலையும். கணவன் எழுந்தால் மான்களின் மகிழ்ச்சிக்கு இடையூறாக இருக்கும் என உணர்ந்து ஏதும் செய்யாமல் அமைதியாக இருக்கிறாள்.
  • பாணர்கள் வேடர் தலைவனின் வீட்டிற்கு இரவலாக வருகின்றனர். அவர்களுக்கு வேடர் தலைவனின் மனைவி விருந்து சமைக்கும் காட்சி காட்டப்படுகிறது.
  • முற்றத்தில் காய வைக்கப்பட்டிருந்த தினை அரிசியை கொத்தி தின்று கொண்டிருந்த காடை, கௌதாரி முதலிய பறவைகளையும் ஆரல் மீனையும் சந்தன கட்டையால் மூட்டி தீயில் உரிய முறையில் சமைத்து விருந்தினருக்குப் பரிமாறுகின்றனர்.
  • வேந்தன் தனக்கு கொடுக்கும் செல்வத்தை வள்ளல் தன்மையுடன் பாணற்கு வழங்குபவன் வேடர் தலைவன் என்று அவனது மனைவியால் சிறப்பிக்கப்படுகிறான்.

பாடல் நடை

புறநானூறு - 320

  • திணை: வாகை துறை: வல்லாண் முல்லை

....................................................
கைம்மான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப்
பார்வை மடப்பிணை தழீஇப் பிறிதோர்
தீர்தொழில் தனிக்கலை திளைத்துவிளை யாட
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சிக், கலையே
பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும்
இல்வழங் காமையின் கல்லென ஒலித்து
மான்அதள் பெய்த உணங்குதினை வல்சி
கானக் கோழியொடு இதல்கவர்ந்து உண்டென
ஆர நெருப்பின் ஆரல் நாறத்
தடிவார்ந்து இட்ட முழுவள் ளூரம்
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குஇனிது அருந்தித்
தங்கினை சென்மோ
.......................................... ...

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Apr-2025, 11:45:55 IST