மீரா நாயர்: Difference between revisions

From Tamil Wiki
Corrected typo errors;
Corrected typo errors;
 
(One intermediate revision by the same user not shown)
Line 3: Line 3:
[[File:மீரா நாயர்.jpg|thumb|மீரா நாயர் (2022)]]
[[File:மீரா நாயர்.jpg|thumb|மீரா நாயர் (2022)]]

மீரா நாயர் (Mira Nair) இந்தியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த திரைப்பட இயக்குநர். இந்திய தேசிய திரைப்பட விருது (National Award) மற்றும் பல்வேறு சர்வதேச திரைப்பட விருதுகளை வென்றுள்ளார். கோல்டன் குளோப் விருதுகள், பாஃப்தா (BAFTA) விருதுகள் மற்றும் பிலிம்ஃபேர் விருதுகளுக்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ’சலாம் பாம்பே!’ (1988) திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் கேமரா விருது வென்று உலகளவில் கவனம் பெற்றது.  
மீரா நாயர் (Mira Nair) இந்தியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த திரைப்பட இயக்குநர். இந்திய தேசிய திரைப்பட விருது (National Award) மற்றும் பல்வேறு சர்வதேச திரைப்பட விருதுகளை வென்றுள்ளார். கோல்டன் குளோப் விருதுகள், பாஃப்தா (BAFTA) விருதுகள் மற்றும் பிலிம்ஃபேர் விருதுகளுக்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 'சலாம் பாம்பே!' (1988) திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் கேமரா விருது வென்று உலகளவில் கவனம் பெற்றது.  

== பிறப்பு & கல்வி ==
== பிறப்பு & கல்வி ==
Line 16: Line 16:
மீரா நாயர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய வருங்கால கணவரும், புகைப்படக்கலைஞருமான மிட்ச் எப்ஸ்டீன் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் சூனி தாராபூர்வாலா ஆகியோரைச் சந்தித்தார். பின்னர் படிப்படியாக ஆவணப் படங்களை எடுக்கத்துவங்கினார்.  

1978 மற்றும் 1979 க்கு இடையில் ஹார்வர்டில் தனது திரைப்பட ஆய்வறிக்கைக்காக 'ஜமா மஸ்ஜித் ஸ்ட்ரீட் ஜர்னல்’ (Jama Masjid Street Journal) என்ற தலைப்பில் ஒரு கருப்பு மற்றும் வெள்ளை திரைப்படத்தைத் தயாரித்தார். பதினெட்டு நிமிட ஆவணப்படத்தில் பழைய டெல்லியின் தெருக்களை ஆராய்ந்து, அப்பகுதியில் வசிப்போரின் வாழ்வியலை ஆவணப்படுத்தினார்.  
1978 மற்றும் 1979 க்கு இடையில் ஹார்வர்டில் தனது திரைப்பட ஆய்வறிக்கைக்காக 'ஜமா மஸ்ஜித் ஸ்ட்ரீட் ஜர்னல்' (Jama Masjid Street Journal) என்ற தலைப்பில் ஒரு கருப்பு மற்றும் வெள்ளை திரைப்படத்தைத் தயாரித்தார். பதினெட்டு நிமிட ஆவணப்படத்தில் பழைய டெல்லியின் தெருக்களை ஆராய்ந்து, அப்பகுதியில் வசிப்போரின் வாழ்வியலை ஆவணப்படுத்தினார்.  

1982-ம் ஆண்டில், தனது இரண்டாவது ஆவணப்படத்தை 'சோ ஃபார் ஃப்ரம் இந்தியா’ (So far from India) என்ற தலைப்பில் தயாரித்தார். இது இந்திய செய்தித்தாள் விற்பனையாளர் ஒருவர் தனது கர்ப்பிணி மனைவி அவர் வீடு திரும்புவதற்காக காத்திருக்கும் வேளையில் அவர் செல்லும் நியூயார்க் நகரின் சுரங்கப்பாதைகளின் கதையை சொல்கிறது. இத்திரைப்படம் அமெரிக்கத் திரைப்பட விழா மற்றும் நியூயார்க்கின் குளோபல் வில்லேஜ் திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதைப் பெற்றது.
1982-ம் ஆண்டில், தனது இரண்டாவது ஆவணப்படத்தை 'சோ ஃபார் ஃப்ரம் இந்தியா' (So far from India) என்ற தலைப்பில் தயாரித்தார். இது இந்திய செய்தித்தாள் விற்பனையாளர் ஒருவர் தனது கர்ப்பிணி மனைவி அவர் வீடு திரும்புவதற்காக காத்திருக்கும் வேளையில் அவர் செல்லும் நியூயார்க் நகரின் சுரங்கப்பாதைகளின் கதையை சொல்கிறது. இத்திரைப்படம் அமெரிக்கத் திரைப்பட விழா மற்றும் நியூயார்க்கின் குளோபல் வில்லேஜ் திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதைப் பெற்றது.

1984-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அவரது மூன்றாவது ஆவணப்படம், இந்தியா கேபரே (India Cabaret) ஆபாச நடனமாடும் பெண்கள் சுரண்டப்படுவதை வெளிப்படுத்தியது. மீரா இதற்காக 130,000 டாலர்கள் செலவழிக்க வேண்டியதாக இருந்தது. 59 நிமிடம் நீளும் இந்த ஆவணப்படம் இரண்டு மாத காலத்தில் படமாக்கப்பட்டது. மீராவின் சொந்தக் குடும்பத்தினராலேயே இப்படம் விமர்சிக்கப்பட்டது.  

==திரைப்படங்கள்==
==திரைப்படங்கள்==
மீரா நாயர் இயக்கிய முதல் திரைப்படம் சலாம் பாம்பே! 1988-ல் வெளியானது. சூனி தாராபூர்வாலா திரைக்கதை எழுதியிருந்தார். பம்பாய் குடிசைப் பகுதிகளில் வாழும் சிறுவர்களின் வாழ்வை சித்தரித்தது. கேன்ஸ் திரைப்பட விழாவில் Camera D’or மற்றும் Prix du Public விருதினைப் பெற்றது. சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான ஆஸ்கார் விருதுகளுக்கு இந்தியாவின் நியமன படமாக இடம் பெற்றது. மீரா நாயர் சலாம் பாம்பே திரைப்படத்தின் மூலம் பெற்ற வருமானத்தை இந்தியாவில் சலாம் பாலக் டிரஸ்ட் என்ற பெயரில், தெருவோரக் குழந்தைகளுக்கான ஒரு நிறுவனத்தை ஏற்படுத்துவதற்காகப் பயன்படுத்தினார்.
மீரா நாயர் இயக்கிய முதல் திரைப்படம் சலாம் பாம்பே! 1988-ல் வெளியானது. சூனி தாராபூர்வாலா திரைக்கதை எழுதியிருந்தார். பம்பாய் குடிசைப் பகுதிகளில் வாழும் சிறுவர்களின் வாழ்வை சித்தரித்தது. கேன்ஸ் திரைப்பட விழாவில் Camera D'or மற்றும் Prix du Public விருதினைப் பெற்றது. சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான ஆஸ்கார் விருதுகளுக்கு இந்தியாவின் நியமன படமாக இடம் பெற்றது. மீரா நாயர் சலாம் பாம்பே திரைப்படத்தின் மூலம் பெற்ற வருமானத்தை இந்தியாவில் சலாம் பாலக் டிரஸ்ட் என்ற பெயரில், தெருவோரக் குழந்தைகளுக்கான ஒரு நிறுவனத்தை ஏற்படுத்துவதற்காகப் பயன்படுத்தினார்.

மீரா நாயர் மீண்டும் சூனி தாராபூர்வாலாவுடன் 1991-ல் மிஸ்ஸிசிப்பி மசாலா (Mississippi Masala) என்ற படத்தை இயக்கினார். டென்சில் வாஷிங்டன், சரிதா சௌத்ரி நடித்திருந்தனர். அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பியில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு நாடிழந்த ஒரு உகாண்டா-இந்தியக் குடும்பத்தைப் பற்றியது. 1992-ம் ஆண்டு சன்டான்ஸ் திரைப்பட விழாவில் விமர்சகர்களின் பாராட்டைப்பெற்றதுடன் வெனிஸ் திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றது.

16-ம் நூற்றாண்டு இந்தியாவைக் களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ’காமசூத்ரா: ய டேல் ஆஃப் லவ்’ (Kama Sutra: A Tale of Love) 1996 கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. சான் செபாஸ்டியன் சர்வதேச திரைப்பட விழாவில் 'தங்க நத்தை’ விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்தியாவில் இத்திரைப்படம் வெளியான நேரத்தில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியதுடன், அதன் பாலியல் காட்சிகள் காரணமாக இந்தியாவில் தடை செய்யப்பட்டது.<ref>[https://www.indiatoday.in/education-today/gk-and-current-affairs/story/top-9-films-banned-in-india-255450-2015-06-03 இந்தியாவில் தடை செய்ய்ப்பட்ட சிறந்த ஒன்பது திரைப்படங்கள் - இந்தியா டுடே]</ref>
16-ம் நூற்றாண்டு இந்தியாவைக் களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் 'காமசூத்ரா: ய டேல் ஆஃப் லவ்' (Kama Sutra: A Tale of Love) 1996 கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. சான் செபாஸ்டியன் சர்வதேச திரைப்பட விழாவில் 'தங்க நத்தை' விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்தியாவில் இத்திரைப்படம் வெளியான நேரத்தில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியதுடன், அதன் பாலியல் காட்சிகள் காரணமாக இந்தியாவில் தடை செய்யப்பட்டது.<ref>[https://www.indiatoday.in/education-today/gk-and-current-affairs/story/top-9-films-banned-in-india-255450-2015-06-03 இந்தியாவில் தடை செய்ய்ப்பட்ட சிறந்த ஒன்பது திரைப்படங்கள் - இந்தியா டுடே]</ref>

சப்ரினா தவான் எழுத்தில்,  ஒரு பஞ்சாபி இந்திய திருமணத்தின் கதையைச் சொல்லும் 'மான்சூன் வெட்டிங்’ (Monsoon Wedding) 2001-ம் ஆண்டு வெளியானது. மீரா நாயருக்கு பழக்கமானவர்கள் மற்றும் உறவினர்கள் சிலரை நடிக்க வைத்து தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகளவில் 30 மில்லியன் டாலருக்கும் அதிகமாக வசூலித்தது. இப்படத்திற்கு வெனிஸ் திரைப்பட விழாவில் ’கோல்டன் லயன்’ விருது வழங்கப்பட்டது. மீரா நாயர் இந்த விருதைப் பெற்ற முதல் பெண் என்ற பெருமைக்குரியவர்.
சப்ரினா தவான் எழுத்தில்,  ஒரு பஞ்சாபி இந்திய திருமணத்தின் கதையைச் சொல்லும் 'மான்சூன் வெட்டிங்' (Monsoon Wedding) 2001-ம் ஆண்டு வெளியானது. மீரா நாயருக்கு பழக்கமானவர்கள் மற்றும் உறவினர்கள் சிலரை நடிக்க வைத்து தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகளவில் 30 மில்லியன் டாலருக்கும் அதிகமாக வசூலித்தது. இப்படத்திற்கு வெனிஸ் திரைப்பட விழாவில் 'கோல்டன் லயன்' விருது வழங்கப்பட்டது. மீரா நாயர் இந்த விருதைப் பெற்ற முதல் பெண் என்ற பெருமைக்குரியவர்.

மீரா நாயர் அடுத்து 'ஹிஸ்டீரிக்கல் பிளைண்ட்னஸ்’ என்ற திரைப்படத்தை 2002-ல் இயக்கினார். படம் கோல்டன் க்ளோப் விருது பெற்றது. அதைத் தொடர்ந்து வில்லியம் மேக்பீஸ் தாக்கரேவின் புகழ்பெற்ற படைப்பான ’வேனிட்டி ஃபேர்’ கதையை அதே பெயரில் திரைப்படமாக எடுத்தார்.
மீரா நாயர் அடுத்து 'ஹிஸ்டீரிக்கல் பிளைண்ட்னஸ்' என்ற திரைப்படத்தை 2002-ல் இயக்கினார். படம் கோல்டன் க்ளோப் விருது பெற்றது. அதைத் தொடர்ந்து வில்லியம் மேக்பீஸ் தாக்கரேவின் புகழ்பெற்ற படைப்பான 'வேனிட்டி ஃபேர்' கதையை அதே பெயரில் திரைப்படமாக எடுத்தார்.

மீரா நாயர் 2007-ல் எழுத்தாளர் ஜும்பா லஹிரியின் நேம்சேக் நாவலை அடிப்படையாகக் வைத்து, சூனி தாராபூர்வாலாவின் திரைக்கதையில் அதே பெயரில் திரைப்படமாக எடுத்தார். நியூயார்க் நகர சமூகத்துடன் பொருந்த விரும்பும் இந்திய குடியேறிகளில் ஒருவரின் மகனைப் பற்றிய இப்படம் டார்ட்மவுத் திரைப்பட விருதையும் மற்றும் பாலிவுட் திரைப்பட விருதுகளில் பிரைட் ஆஃப் இந்தியா விருதையும் வென்றது.  

Line 37: Line 37:
2009-ல் மெலியா ஏர்ஹார்ட் எனும் முன்னோடி பெண் விமானியின் வாழ்க்கைக் கதையை படமாக எடுத்தார்.  
2009-ல் மெலியா ஏர்ஹார்ட் எனும் முன்னோடி பெண் விமானியின் வாழ்க்கைக் கதையை படமாக எடுத்தார்.  

2012-ல் மொஹ்சின் ஹமீத் எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து 'தி ரிலக்டன்ட் ஃபண்டமெண்டலிஸ்ட்’ என்ற த்ரில்லர் படத்தை இயக்கினார். இது வெனிஸ் திரைப்பட விழாவில் விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்றது.
2012-ல் மொஹ்சின் ஹமீத் எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து 'தி ரிலக்டன்ட் ஃபண்டமெண்டலிஸ்ட்' என்ற த்ரில்லர் படத்தை இயக்கினார். இது வெனிஸ் திரைப்பட விழாவில் விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்றது.

2016-ம் ஆண்டு இயக்கிய 'குயின் ஆஃப் கட்வே’ திரைப்படம் உகாண்டா சதுரங்க மேதையான பியோனா முடேசியின் கதையை அடிப்படையாகக் கொண்டது.<ref>[https://www.vanityfair.com/hollywood/2015/08/lupita-nyongo-disney-d23-star-wars-jungle-book-queen-of-katwe சூப்பர் ஹீரோக்கள் அல்லாமல், நடிகர் ‘லூபிடா நியோங்கோ’ ஏன் டிஸ்னியின் எதிர்காலத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.]</ref>
2016-ம் ஆண்டு இயக்கிய 'குயின் ஆஃப் கட்வே' திரைப்படம் உகாண்டா சதுரங்க மேதையான பியோனா முடேசியின் கதையை அடிப்படையாகக் கொண்டது.<ref>[https://www.vanityfair.com/hollywood/2015/08/lupita-nyongo-disney-d23-star-wars-jungle-book-queen-of-katwe சூப்பர் ஹீரோக்கள் அல்லாமல், நடிகர் 'லூபிடா நியோங்கோ' ஏன் டிஸ்னியின் எதிர்காலத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.]</ref>

இவை தவிர மீரா நாயர் பல குறும்படங்களை இயக்கியுள்ளார்.  
இவை தவிர மீரா நாயர் பல குறும்படங்களை இயக்கியுள்ளார்.  
Line 100: Line 100:
====== தொலைக்காட்சி தொடர்கள் ======
====== தொலைக்காட்சி தொடர்கள் ======
*எ சுய்டபிள் பாய் (A Suitable Boy)  (2020) : ஆறு பகுதிகளில் மீரா நாயர் இயக்கியவை ஐந்து.
*எ சுய்டபிள் பாய் (A Suitable Boy)  (2020) : ஆறு பகுதிகளில் மீரா நாயர் இயக்கியவை ஐந்து.
*நேஷனல் ட்ரெஷர்: எட்ஜ் ஆஃப் ஹிஸ்டரி (National Treasure: Edge of History) (2022): 10 பகுதிகாளில் ஒன்றை மீரா (ஐயம் எ கோஸ்ட்” அத்தியாயம் - Episode: "I'm a Ghost") நாயர் இயக்கினார்.  
*நேஷனல் ட்ரெஷர்: எட்ஜ் ஆஃப் ஹிஸ்டரி (National Treasure: Edge of History) (2022): 10 பகுதிகாளில் ஒன்றை மீரா (ஐயம் எ கோஸ்ட்" அத்தியாயம் - Episode: "I'm a Ghost") நாயர் இயக்கினார்.  

== அடிக்குறிப்புகள் ==
== அடிக்குறிப்புகள் ==

Latest revision as of 17:36, 22 November 2025

நாயர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: நாயர் (பெயர் பட்டியல்)
மீரா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: மீரா (பெயர் பட்டியல்)
மீரா நாயர் (2022)

மீரா நாயர் (Mira Nair) இந்தியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த திரைப்பட இயக்குநர். இந்திய தேசிய திரைப்பட விருது (National Award) மற்றும் பல்வேறு சர்வதேச திரைப்பட விருதுகளை வென்றுள்ளார். கோல்டன் குளோப் விருதுகள், பாஃப்தா (BAFTA) விருதுகள் மற்றும் பிலிம்ஃபேர் விருதுகளுக்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 'சலாம் பாம்பே!' (1988) திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் கேமரா விருது வென்று உலகளவில் கவனம் பெற்றது.

பிறப்பு & கல்வி

மீரா நாயர் இந்தியாவில் ஓரிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வர் அருகில் உள்ள ரூர்கெலா என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை அம்ரித் நாயர் இந்திய ஆட்சிப் பணியில் பணிபுரிந்தவர். தாய் பர்வீன் சமூக சேவகர். மீரா உள்ளூரில் பள்ளிக்கல்வி பயின்றார். அங்கு அவரது கற்பனைத் திறன் ஆசிரியர்களால் கவனிக்கப்பட்டது. சிம்லாவில் உள்ள தாரா ஹால் எனும் கிறித்தவப் பள்ளியில் மேல்நிலைப்படிப்பை முடித்தார்.

மீரா நாயர் டெல்லி பல்கலைக்கழகத்தின் பெண்களுக்கான கல்லூரியான மிராண்டா ஹவுஸில் சமூகவியலில் தேர்ச்சி பெற்றார். தனது 19-ம் வயதில் ஹார்வர்ட் பழ்கலைக்கழகத்தில் படிப்பதற்கு உதவித்தொகை பெற்று அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு தனது மேற்படிப்பை சமூகவியலில் தொடர்ந்தார்.

தனிவாழ்க்கை

மீரா நாயர் தான் ஹார்வர்டில் சந்தித்த புகைப்படக் கலைஞர் மிட்ச் எப்ஸ்டீனை மணந்தார். 1987-ல் விவாகரத்து பெற்றார். பின்னர் 1988-ல் உகாண்டா நாட்டில் இந்திய வம்சாசளியைச் சேர்ந்த மகமூத் மம்தானியை மணந்தார். மகமூத் மம்தானி அரசியல் ஆய்வாளர், கொலம்பிய பல்கலைகழகத்தில் பேராசிரியராகவும் உள்ளார். இவர்களது மகன் ஜோஹ்ரன் மம்தானி அமெரிக்காவில் நியுயார்க்கில் அரசியல்வாதியாக இருக்கிறார்.

துவக்ககால ஆவணப்படங்கள்

மீரா நாயர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய வருங்கால கணவரும், புகைப்படக்கலைஞருமான மிட்ச் எப்ஸ்டீன் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் சூனி தாராபூர்வாலா ஆகியோரைச் சந்தித்தார். பின்னர் படிப்படியாக ஆவணப் படங்களை எடுக்கத்துவங்கினார்.

1978 மற்றும் 1979 க்கு இடையில் ஹார்வர்டில் தனது திரைப்பட ஆய்வறிக்கைக்காக 'ஜமா மஸ்ஜித் ஸ்ட்ரீட் ஜர்னல்' (Jama Masjid Street Journal) என்ற தலைப்பில் ஒரு கருப்பு மற்றும் வெள்ளை திரைப்படத்தைத் தயாரித்தார். பதினெட்டு நிமிட ஆவணப்படத்தில் பழைய டெல்லியின் தெருக்களை ஆராய்ந்து, அப்பகுதியில் வசிப்போரின் வாழ்வியலை ஆவணப்படுத்தினார்.

1982-ம் ஆண்டில், தனது இரண்டாவது ஆவணப்படத்தை 'சோ ஃபார் ஃப்ரம் இந்தியா' (So far from India) என்ற தலைப்பில் தயாரித்தார். இது இந்திய செய்தித்தாள் விற்பனையாளர் ஒருவர் தனது கர்ப்பிணி மனைவி அவர் வீடு திரும்புவதற்காக காத்திருக்கும் வேளையில் அவர் செல்லும் நியூயார்க் நகரின் சுரங்கப்பாதைகளின் கதையை சொல்கிறது. இத்திரைப்படம் அமெரிக்கத் திரைப்பட விழா மற்றும் நியூயார்க்கின் குளோபல் வில்லேஜ் திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதைப் பெற்றது.

1984-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அவரது மூன்றாவது ஆவணப்படம், இந்தியா கேபரே (India Cabaret) ஆபாச நடனமாடும் பெண்கள் சுரண்டப்படுவதை வெளிப்படுத்தியது. மீரா இதற்காக 130,000 டாலர்கள் செலவழிக்க வேண்டியதாக இருந்தது. 59 நிமிடம் நீளும் இந்த ஆவணப்படம் இரண்டு மாத காலத்தில் படமாக்கப்பட்டது. மீராவின் சொந்தக் குடும்பத்தினராலேயே இப்படம் விமர்சிக்கப்பட்டது.

திரைப்படங்கள்

மீரா நாயர் இயக்கிய முதல் திரைப்படம் சலாம் பாம்பே! 1988-ல் வெளியானது. சூனி தாராபூர்வாலா திரைக்கதை எழுதியிருந்தார். பம்பாய் குடிசைப் பகுதிகளில் வாழும் சிறுவர்களின் வாழ்வை சித்தரித்தது. கேன்ஸ் திரைப்பட விழாவில் Camera D'or மற்றும் Prix du Public விருதினைப் பெற்றது. சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான ஆஸ்கார் விருதுகளுக்கு இந்தியாவின் நியமன படமாக இடம் பெற்றது. மீரா நாயர் சலாம் பாம்பே திரைப்படத்தின் மூலம் பெற்ற வருமானத்தை இந்தியாவில் சலாம் பாலக் டிரஸ்ட் என்ற பெயரில், தெருவோரக் குழந்தைகளுக்கான ஒரு நிறுவனத்தை ஏற்படுத்துவதற்காகப் பயன்படுத்தினார்.

மீரா நாயர் மீண்டும் சூனி தாராபூர்வாலாவுடன் 1991-ல் மிஸ்ஸிசிப்பி மசாலா (Mississippi Masala) என்ற படத்தை இயக்கினார். டென்சில் வாஷிங்டன், சரிதா சௌத்ரி நடித்திருந்தனர். அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பியில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு நாடிழந்த ஒரு உகாண்டா-இந்தியக் குடும்பத்தைப் பற்றியது. 1992-ம் ஆண்டு சன்டான்ஸ் திரைப்பட விழாவில் விமர்சகர்களின் பாராட்டைப்பெற்றதுடன் வெனிஸ் திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றது.

16-ம் நூற்றாண்டு இந்தியாவைக் களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் 'காமசூத்ரா: ய டேல் ஆஃப் லவ்' (Kama Sutra: A Tale of Love) 1996 கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. சான் செபாஸ்டியன் சர்வதேச திரைப்பட விழாவில் 'தங்க நத்தை' விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்தியாவில் இத்திரைப்படம் வெளியான நேரத்தில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியதுடன், அதன் பாலியல் காட்சிகள் காரணமாக இந்தியாவில் தடை செய்யப்பட்டது.[1]

சப்ரினா தவான் எழுத்தில், ஒரு பஞ்சாபி இந்திய திருமணத்தின் கதையைச் சொல்லும் 'மான்சூன் வெட்டிங்' (Monsoon Wedding) 2001-ம் ஆண்டு வெளியானது. மீரா நாயருக்கு பழக்கமானவர்கள் மற்றும் உறவினர்கள் சிலரை நடிக்க வைத்து தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகளவில் 30 மில்லியன் டாலருக்கும் அதிகமாக வசூலித்தது. இப்படத்திற்கு வெனிஸ் திரைப்பட விழாவில் 'கோல்டன் லயன்' விருது வழங்கப்பட்டது. மீரா நாயர் இந்த விருதைப் பெற்ற முதல் பெண் என்ற பெருமைக்குரியவர்.

மீரா நாயர் அடுத்து 'ஹிஸ்டீரிக்கல் பிளைண்ட்னஸ்' என்ற திரைப்படத்தை 2002-ல் இயக்கினார். படம் கோல்டன் க்ளோப் விருது பெற்றது. அதைத் தொடர்ந்து வில்லியம் மேக்பீஸ் தாக்கரேவின் புகழ்பெற்ற படைப்பான 'வேனிட்டி ஃபேர்' கதையை அதே பெயரில் திரைப்படமாக எடுத்தார்.

மீரா நாயர் 2007-ல் எழுத்தாளர் ஜும்பா லஹிரியின் நேம்சேக் நாவலை அடிப்படையாகக் வைத்து, சூனி தாராபூர்வாலாவின் திரைக்கதையில் அதே பெயரில் திரைப்படமாக எடுத்தார். நியூயார்க் நகர சமூகத்துடன் பொருந்த விரும்பும் இந்திய குடியேறிகளில் ஒருவரின் மகனைப் பற்றிய இப்படம் டார்ட்மவுத் திரைப்பட விருதையும் மற்றும் பாலிவுட் திரைப்பட விருதுகளில் பிரைட் ஆஃப் இந்தியா விருதையும் வென்றது.

2009-ல் மெலியா ஏர்ஹார்ட் எனும் முன்னோடி பெண் விமானியின் வாழ்க்கைக் கதையை படமாக எடுத்தார்.

2012-ல் மொஹ்சின் ஹமீத் எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து 'தி ரிலக்டன்ட் ஃபண்டமெண்டலிஸ்ட்' என்ற த்ரில்லர் படத்தை இயக்கினார். இது வெனிஸ் திரைப்பட விழாவில் விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்றது.

2016-ம் ஆண்டு இயக்கிய 'குயின் ஆஃப் கட்வே' திரைப்படம் உகாண்டா சதுரங்க மேதையான பியோனா முடேசியின் கதையை அடிப்படையாகக் கொண்டது.[2]

இவை தவிர மீரா நாயர் பல குறும்படங்களை இயக்கியுள்ளார்.

Mira Nair in Venice International Film Festival
வெனிஸ் திரைப்பட விழாவில் மீரா நாயர் (2020)

விருதுகள்

  • சலாம் பாம்பே! : கென்ஸ் திரைப்பட விழா சிறந்த திரைப்படம் கோல்டன் கேமிரா விருது(Caméra d'Or), இந்திய தேசிய திரை விருதுகள் - சிறந்த திரைப்படம் (ஹிந்தி), சிறந்த குழந்தை நட்சத்திரம் (ஷாஃபிக் சையத்). பரிந்துரைப் பட்டியல்களில் இடம்: ஆஸ்கார் விருதுகள் - சிறந்த வெளிநாட்டு மொழித்திரைப்படம், பாஃப்தா விருதுகள் - ஆங்கில மொழி அல்லாத சிறந்த சிறந்த திரைப்படம், கோல்டன் குளோப் விருதுகள் - சிறந்த வெளிநாட்டு மொழித்திரைப்படம், ஃபிலிம்ஃபேர் விருதுகள் - சிறந்த இயக்குனர்
  • மிசிசிபி மசாலா : வெனிஸ் திரைப்பட விழா - சிறந்த திரைக்கதை (சூனி தாராபோரேவாலா), சிறந்த திரைப்படம் (சுயாதீன விருதுகள்)
  • மான்சூன் வெட்டிங் : வெனிஸ் திரைப்பட விழா - சிறந்த திரைப்படத்திற்கான பொன் சிங்கம் விருது, சிறந்த திரைப்படம் (சுயாதீன விருதுகள்). பரிந்துரைப் பட்டியலில் இடம்: பாஃப்தா விருதுகள் - சிறந்த வெளிநாட்டு மொழித்திரைப்படம், கோல்டன் குளோப் விருதுகள் - சிறந்த வெளிநாட்டு மொழித்திரைப்படம்
  • ஹிஸ்டரிக்கல் பிளைண்ட்னஸ் : கோல்டன் க்ளோப் விருது
  • வேனிடி ஃபேர் : வெனிஸ் திரைப்பட விழா - சிறந்த திரைப்படத்திற்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்
  • தி ரிலக்டண்ட் ஃபண்டமெண்டலிஸ்ட் : 43-வது கோவா சர்வதேச திரைப்பட விழா- சிறப்பு நடுவர் தேர்வு விருது, விழாவின் இறுதிப்படம் (Closing Film)
  • குயின் ஆஃப் கத்வே : டொரண்டோ சர்வதேச திரைப்பட விழா பரிந்துரைப் பட்டியல் -பார்வையாளர்களின் விருப்பமான திரைப்படம்

படைப்புகள்

திரைப்படங்கள்
  • சலாம் பாம்பே!, 1988
  • மிசிசிபி மசாலா, 1991
  • தி பெரெஸ் ஃபேமிலி, 1995
  • காம சூத்ரா, 1996
  • மான்சூன் வெட்டிங், 2001
  • வேனிடி ஃபேர், 2004
  • தி நேம்சேக், 2006
  • அமெலியா, 2009
  • தி ரிலக்டண்ட் ஃபண்டமெண்டலிஸ்ட், 2012
  • குயின் ஆஃப் கத்வே, 2016
ஆவணப்படங்கள்
  • ஜமா ஸ்ட்ரீட் மஜித் ஜெர்னல், 1979
  • சோ ஃபார் ஃப்ரம் இந்தியா, 1982
  • சில்ரன் ஆஃப் எ டிசையர்டு செக்ஸ், 1997
குறும்படங்கள்
  • தி டே தி மெர்சடிஸ் பிகம் எ ஹேட் (The Day the Mercedes Became a Hat) (1993)
  • பாகிஸ்தான் (2002) : குறும்படத் தொகை. இதில் மீரா நாயர் இயக்கிய பகுதியின் பெயர் 11'9"01 செப்டம்பர் 11
  • மைக்ரேஷன்.. (Migration..) (2007) : மீரா நாயருடன் சந்தோஷ் சிவன், விஷால் பரத்வாஜ் மற்றும் ஃபர்ஹான் அக்தர் என நான்கு பேர் இயக்கிய குறும்படத் தொகை. இதில் மீரா நாயர் இயக்கிய பகுதியின் பெயர் 'எய்ட்ஸ் ஜாகோ
  • கோஷர் வெஜிடேரியன் (Kosher Vegetarian) (2008) : குறும்படத் தொகை. இதில் மீரா நாயர் இயக்கிய பகுதியின் பெயர் 'நியூயார்க், ஐ லவ் யூ
  • ஹவ் கேன் இட் பீ? (How Can It Be?) (2008) : குறும்படத் தொகை. இதில் மீரா நாயர் இயக்கிய பகுதியின் பெயர் '8
  • காட் ரூம் (God Room) (2014) : குறும்படத் தொகை. இதில் மீரா நாயர் இயக்கிய பகுதியின் பெயர் 'வோர்ட்ஸ் வித் காட்ஸ்
தொலைக்காட்சி திரைப்படங்கள்
  • இந்தியா கேப்ரெட் (Jama Masjid Street Journal, 1985) ஆவணப்படம்)
  • மை ஓன் கண்ட்ரி (My Own Country, 1998)
  • ஹிஸ்ட்ரிகள் ப்ளைண்ட்னஸ் (Hysterical Blindness, 2002)
தொலைக்காட்சி தொடர்கள்
  • எ சுய்டபிள் பாய் (A Suitable Boy) (2020) : ஆறு பகுதிகளில் மீரா நாயர் இயக்கியவை ஐந்து.
  • நேஷனல் ட்ரெஷர்: எட்ஜ் ஆஃப் ஹிஸ்டரி (National Treasure: Edge of History) (2022): 10 பகுதிகாளில் ஒன்றை மீரா (ஐயம் எ கோஸ்ட்" அத்தியாயம் - Episode: "I'm a Ghost") நாயர் இயக்கினார்.

அடிக்குறிப்புகள்

உசாத்துணை

‎

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 14-Jul-2024, 14:40:43 IST