மிளைப் பெருங்கந்தன்: Difference between revisions
Logamadevi (talk | contribs) |
Added: Category:புலவர் |
||
| (3 intermediate revisions by 2 users not shown) | |||
| Line 25: | Line 25: | ||
</poem> | </poem> | ||
==உசாத்துணை== | ==உசாத்துணை== | ||
*[https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangatamilpulavarvarisai(03).pdf சங்கத்தமிழ் புலவர் வரிசை 3 | *[https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangatamilpulavarvarisai(03).pdf சங்கத்தமிழ் புலவர் வரிசை 3 - புலவர் க.கோவிந்தன்] | ||
*[https://nallakurunthokai.blogspot.com/2016/01/136.html குறுந்தொகை - 136:nallakurunthokai] | *[https://nallakurunthokai.blogspot.com/2016/01/136.html குறுந்தொகை - 136:nallakurunthokai] | ||
*[https://nallakurunthokai.blogspot.com/2016/06/204.html குறுந்தொகை - 204:nallakurunthokai] | *[https://nallakurunthokai.blogspot.com/2016/06/204.html குறுந்தொகை - 204:nallakurunthokai] | ||
*[https://nallakurunthokai.blogspot.com/2016/08/234.html குறுந்தொகை - 234:nallakurunthokai] | *[https://nallakurunthokai.blogspot.com/2016/08/234.html குறுந்தொகை - 234:nallakurunthokai] | ||
{{ | {{Finalised}} | ||
{{Fndt|04-Apr-2025, 10:43:24 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:புலவர்]] | |||
Latest revision as of 00:55, 21 December 2025
மிளைப் பெருங்கந்தன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய மூன்று பாடல்கள் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளன.
வாழ்க்கை குறிப்பு
மிளைப் பெருங்கந்தன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். மிளை என்னும் ஊரினை சேர்ந்தவர். கந்தன் என்னும் இயற்பெயர் கொண்டவர். மிளை ஊரில் கந்தன் என முன்பே ஒரு புலவர் வசித்து வந்தமையால் அவரிலிருந்து வேறுபடுத்தி அறியும் பொருட்டும் இவரது புலமை சிறப்பு கருதியும் பெருங்கந்தன் என அழைக்கப் பெற்றுள்ளார்.
இலக்கிய வாழ்க்கை
மிளைப் பெருங்கந்தன் பாடிய மூன்று பாடல்கள் குறுந்தொகையில் (136, 204, 234) இடம்பெற்றுள்ளன. 136,204-ம் பாடல்கள் காமத்தின் தன்மை உரைப்பனவாக குறிஞ்சித் திணையில் அமைந்துள்ளன. 234-ம் பாடல் தலைவி தனது பிரிவாற்றமையை தோழிக்கு உரைப்பதாக முல்லைத் திணையில் அமைந்துள்ளது.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
குறுந்தொகை 136, 204
- உலகோர் சொல்வது போல காம உணர்வு துயர் தரும் இயல்பும் நோய் உண்டாக்கும் இயல்பும் கொண்டது அன்று.
- காம உணர்வு ஒரு காலத்தில் பெருகி மற்றோர் காலத்தில் குறைவதும் இல்லை.
- உவமைகள்: காமம் குளகு தழையை உண்ட யானைக்கு மதம் பிடிப்பது போல உரியவரை காணும் போது வெளிப்படுவது. காமத்தின் சுவை, பற்கள் தேய்ந்து போன கிழப்பசு புற்களை நாவால் சப்பி பார்க்கும் செயலுக்கும் ஒப்பானது.
குறுந்தொகை - 234
- சூரியன் வானத்தில் சிவந்து மறைந்து, முல்லை பூக்கும் நேரம் மாலை காலமாகும்.
- பிரிவு துயர் கொண்டவர்களுக்கு கோழி கூவும் விடியலும் பகற்பொழுதுகளும் மாலை காலமாகவே தோன்றும்.
பாடல் நடை
குறுந்தொகை - 204
- திணை: குறிஞ்சி
- கூற்று: தலைமகற்குப் பாங்கன் உரைத்தது.
காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே.
உசாத்துணை
- சங்கத்தமிழ் புலவர் வரிசை 3 - புலவர் க.கோவிந்தன்
- குறுந்தொகை - 136:nallakurunthokai
- குறுந்தொகை - 204:nallakurunthokai
- குறுந்தொகை - 234:nallakurunthokai
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Apr-2025, 10:43:24 IST