கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார்: Difference between revisions

From Tamil Wiki
; Added info on Finalised date
No edit summary
 
(One intermediate revision by the same user not shown)
Line 1: Line 1:
கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார் [[சங்க காலப் புலவர்கள் பட்டியல்|சங்க காலப் புலவர்களில்]] ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் புறநானூறில்  இடம்பெற்றுள்ளது.
கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார் [[சங்க காலப் புலவர்கள் பட்டியல்|சங்க காலப் புலவர்களில்]] ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் புறநானூறில்  இடம்பெற்றுள்ளது.
==வாழ்க்கை குறிப்பு==
==வாழ்க்கை குறிப்பு==
Line 24: Line 23:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்]]

Latest revision as of 15:46, 12 October 2026

கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் புறநானூறில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கருவூர் என்கிற ஊரில் வாழ்ந்தவர். பண்டைய தமிழகத்தில் நான்கு தெருக்கள் கூடும் மைய சந்திப்பில் பூதம் நிறுவி வழிபடும் மரபு இருந்தது. அவ்விடங்களில் எதிரே வழிப்பாட்டிற்கு வசதியாக சதுக்க மைதானம் காணப்படும். எனவே அங்கே இருக்கும் பூதங்கள் பெருஞ்சதுக்கத்துப் பூதம் என அழைக்கப்படும். அப்பெயரையே புலவரும் பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார் பாடிய ஒரு பாடல் புறநானூறில் 219-வது பாடலாக அமைந்துள்ளது. கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து(வடக்கிருத்தல் என்பது உணவு உண்ணாது உயிர் விடும் முறை. சமண சமயத்தால் பரவலாக்கப்பட்டது.) உயிர் நீத்ததை அறிந்த துயரத்தில் உரைப்பதாக பொதுவியல் திணை, கையறுநிலை துறையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • வடக்கிருப்பவர் ஆற்றின் நடுவே உள்ள மணல் மேட்டில் அமைந்திருக்கும் மர நிழலில் உடல் தசைகள் உருகி அழியும்படி வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணா நோன்பேற்று உயிர் விடுவர்.

பாடல் நடை

புறநானூறு - 219

  • திணை: பொதுவியல் துறை: கையறுநிலை

உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல்
முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள!
புலவுதி மாதோ நீயே!
பலரால் அத்தை நின் குறிஇருந் தோரே.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Dec-2024, 07:14:27 IST